நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார்.
“பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”
கேட்டுக்கொண்டே தலைமாட்டில் இருக்கும் மண்ணெண்ணை விளக்கைத் தடவிக் கண்டுபிடித்துக் கொளுத்துவார். கிணற்றடிக்குப் போய் வாளியில் தண்ணி அள்ளிவந்து, அம்மாவை வெளியே பேய், பிசாசுகள் வராதவாறு காவல் காக்கச் சொல்லிவிட்டு, கக்கூஸ் சுவரின் மேற்பகுதியில் இருக்கும் பெட்டி வடிவ ஓட்டையில் விளக்கை வைப்பேன். ஏற்கனவே மண்ணெண்ணெய் விளக்கின் புகை படிந்து அந்த நான்கு ஓட்டைகளும் கரிப்பிடித்துக் கிடக்கும். கூர்ந்து பார்த்தால் அதன்மேல் மென்மையான கறுத்தக் குட்டி குட்டித் திட்டுக்கள் ஒட்டி இருக்கும். நடுப்பக்க உள்சுவரில் அதே கரியாலேயே ‘எங்கிட்ட மோதாதே, நான் ராஜாதி ராஜனடா’ என்று நான் எழுதியிருந்ததை, அம்மா தண்ணி போட்டுக் கழுவ முயற்சி செய்திருப்பது விளங்கும். கக்கூசின் ஒவ்வொரு யன்னல் ஓட்டையிலும் ஒவ்வொரு விசயங்கள் இருக்கும். ஒன்றில் நெருப்புப் பெட்டி. இன்னொன்றில் கக்கூஸ் கழுவும் கார்ப்பிக். ஒன்றில் அண்ணா பற்பொடி. இன்னொன்றில் நுளம்புத்திரி. நான் ஒருமுறை தனியாகப் போகவேண்டிவந்தபோது பயத்தில் கூடவே கொண்டுபோன பழைய பிள்ளையார் கலண்டர்கூட அங்கே இருக்கும்.
இப்போது இராமன் இலங்கை புகும் படலம்.
கக்கூஸ் கதவெல்லாம் சும்மா தள்ளினால் திறக்காது. ஏற்கனவே கீழ்ப் பிணைச்சல் அறுந்து, மேல் பிணைச்சலில்தான் அதுவே தொங்கிக்கொண்டிருக்கும். கதவைக் கவனமாகத் தூக்கித் திறக்கவேண்டும். உள்ளே போனால் அங்கே ஒரு குட்டி தெகிவளை மிருகக்காட்சிச் சாலை இயங்கிக்கொண்டிருக்கும். ஒரு பெரும் தவளையார் முன்னுக்கு நின்று டிக்கட் கொடுப்பார். மேலும் ஆளுக்கொரு மூலையில் ஏனைய தவளைகள் ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கும். அது கூட ஒகே. இந்தத் தேரை என்று ஒன்றிருக்கிறது. அது ஆளில் பாய்ந்தால் கை கால் சூம்பிவிடும் என்று யாரோ கதைகட்டிவிட்டுப் போய்விட, தேரையைப் பார்த்தாலே ஒரு நடுக்கம் வரும். அது எந்தப்பக்கத்தால எப்பிடி மூவ் எடுக்கும் என்றெல்லாம் உய்த்தறிவது மிகக் கஷ்டம். ஒரு ஆங்கிளில் ஊதி, தண்ணீர் தெளித்தால் கதவுப்பக்கமாகப் பாயும். சொதப்பினால் நேரே மூஞ்சிதான்.
அடுத்தது தண்ணீர் பைப். அதன் டப்பை எவனோ ஒரு வேதாளத்துக்குப் பிறந்தவன், நாங்கள் இந்தியன் ஆர்மி காலத்தில் இடம்பெயர்ந்திருந்த சமயம் பார்த்துக் கொத்திவிட்டான். விளைவு வெறும் உடைந்த பைப் மட்டும் எஞ்சியிருந்தது. அந்தக் குழாயினூடாகக் கரப்பான்கள் வன் பை வன்னாக வந்து ‘வணக்கம் அன்பு நெஞ்சங்களே’ அப்துல் ஹமீத் ஆகும். கதவை உட்பக்கமாகச் சாத்திவிட்டு, ஓட்டமட்டிக் ரிட்டேர்ன் வராதவாறு ஒரு கொங்கிரீட் கல்லை நகர்த்தி வைக்கவேண்டும். அதை நகர்த்தும்போது இரண்டு மட்டத்தேள்கள் கல்லுக்குக் கீழால் இருந்து சரக்கென்று வெளியேறும். காலில் போட்டிருக்கும் செருப்பைக் கழட்டி அடித்தாலும் இரண்டாகப் பிய்ந்து இரண்டு திசையில் ஓட அவை ட்ரை பண்ணும். இதற்கிடையில் ஆங்காங்கே பிக்னிக் போகும் சிவப்பு, கறுப்பு, மஞ்சள் அட்டைகள் வேறு.
ஒரு கக்கூஸ் போகமுதல் இத்தனை பிரச்சனைகளைச் சமாளிக்கவேண்டும்.
சரி இதெல்லாம் கூட தமிழ் மக்களின் யதார்த்த, தார்மீக, காத்திரமான, போராட்ட, விழுமியங்களின் ஒரு அம்சமே என்று மனதைத் தேற்றிக்கொண்டு அவசர அவசரமாக உட்கார்ந்துவிடலாம். ஆனால் தப்பித்தவறியும் மேலே பார்த்துவிடக் கூடாது. பார்த்தால் ஸ்ட்ரைட்டாக தலைக்கு மேலே ஒரு பெரிய சிலந்தி இருக்கும். கதை கம்மாஸ். புலிநகச்சிலந்தி கடித்தால் அடுத்த கணமே ஆள் குளோஸ் என்பார்கள். ‘பெரிய புலிமச்சிலந்தி ஒண்டு நிக்குது’ என்று அம்மாவை உதவிக்கு அழைப்பேன். ‘உவத்திரமடா’ என்று அலுத்துக்கொண்டே உள்ளே வந்து அம்மா டொக் டொக் என்று சுவரைத் தட்டுவார், அது கட கடவென்று ஒரு மூலைக்கு ஓடும். ‘இது பொட்டுப்பூச்சி, சும்மா எதுக்கெடுத்தாலும் பயப்பிடாத’ என்று சொல்லிக்கொண்டே, தவளை தேரை எல்லாவற்றையும் அடித்து விரட்டி, அம்மா ஏரியாவைக் கிளியர் பண்ணித் தருவார். இனி நிம்மதியாக அட்டாக் தொடங்கலாம் என்று உட்கார்ந்தால் கதவு கீழ்ப்பகுதி எல்லாம் உக்கி உதிர்ந்து வெளியிலே ஹீரோ கடகத்துக்குள் படுத்துத் தூங்குவது நன்றாகத் தெரியும். எதையோ கண்டு மிரண்டு ஊளை இடும்.
அட்டாக் ஆரம்பிக்கிறது.
அது ஒரு பக்கத்தால் போய்க்கொண்டிருக்கும்போது என்னுடைய தமிழ்ப் பேச்சு ரிகெர்சலும் இடம்பெறத் தொடங்கும். நேரம் இரவு ஒரு மணி. அம்மா வெளியே செத்துப்போன தாத்தா வராமல் காவல் காக்கிறார். தூங்கி வழிந்தபடியே என் பேச்சு ஆரம்பிக்கிறது.
“என்னை இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே”
செருமல்.
“எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவடிகளை என் சிரமேற் பணிந்து வணங்கி, பெருமதிப்புக்குரிய நடுவர் அவர்களே. கனம் அதிபர் அவர்களே”
அதிபர் தனபாலனைப் பார்த்து ஒரு சிரிப்பு.
“ஆசிரியர் பெருந்தகைகளே“
இந்தச் சமயம் ஒரு தேரை என்னை நோக்கிப் பாயுமாப்போல இருப்பதால் தண்ணி எடுத்து ரெண்டு தெளி தெளிக்கிறேன். ஓடிவிட்டது. தடங்கலுக்குப் பிறகு பேச்சு மீண்டும் தொடர்கிறது.
“என் சக மாணவர்களே. எல்லோருக்கும் என் பணிவான வணக்கங்கள்”
கைதட்டல்கள்.
“நான் இன்றைக்கு பேச எடுத்துக்கொண்ட விடயம் ‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’”
இப்போது அடிபாடு முனைப்புப் பெறுவதால் பேச்சுக்கு கொஞ்சம் ப்ரேக். கொஞ்சம் முக்கல். ஒபரேசன் லிபரேசன் சத்தங்கள். சக்கை லொறி முகாமுக்குள் இறங்குகிறது. கொஞ்சம் துவக்குச் சூடுகள். காம்ப் சரண்டர். ஆசுவாசமாக மூச்சுவிடல். பேச்சு மீளத் தொடர்கிறது.
“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய எங்கள் மூத்த தமிழானது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது”
கைதட்டல்கள்.
“அய்யன் வள்ளுவன் அகரமுகரவில் ஆரம்பித்துவைக்க”
மீண்டும் ஒரு ப்ரேக். ஹெலியால் கொண்டுவந்து ஆர்மியை இறக்கி இருக்க வேண்டும். கரக் முரக் சத்தங்கள். ஹெலிக்கு இப்போது 50-கலிபர் தாக்குதலை மெடிகல் பஃக்கல்டி கிரவுண்டில் வைத்து அடிக்கிறோம்.
“கவிச்சக்கரவர்த்தி கம்பன், இளங்கோ, அவ்வை என்று தொடர்ந்து புரட்சிக்கவி பாரதிவரை தமிழை வளர்த்துச்சென்றார்கள். அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே, உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் … ”
பேச்சு சூடுபிடிக்கும்போது சடக்கென்று டவுட் வருகிறது.
“அம்மா”
சத்தமில்லை. கடவுளே. எங்க போனா? மீண்டும் பலமாகக் கத்தினேன்.
“அம்மோய்…”
“என்னடா?”
“ஒண்டுமில்ல … இருக்கிறீங்களா எண்டு செக் பண்ணினான்”
பேச்சு தொடர்கிறது.
“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”
கொஞ்சம் கிராமப்பகுதி, தீவுப்பகுதி என்றால் அந்த நாட்களில் கக்கூஸ் கட்டிடம் எதுவும் பாவனையில் இருக்காது. வெறும் ‘சுழல்’தான் ஒரே வழி. வெட்டவெளிச் சுழல். அந்த மெதட்டை ஏன் ‘சுழல்’ என்று அழைக்கிறார்கள் என்பது சுவாரசியமான விடயம். அவசரமாக வந்துவிட்டால் ஒதுக்குப்புறமான புல்தரை பார்த்து ஒதுங்குவது. கொஞ்சநேரம் கழித்து, ஒருகட்டத்தில் ஐட்டம் மலையாகி மேகத்தை ‘முட்ட’ ஆரம்பிக்கும் இல்லையா. உடனே கொஞ்சம் தள்ளி உட்காருவது. அங்கேயும் ‘முட்ட’த்தொடங்க இன்னும் சற்றுத் தள்ளி. இப்படிச் சுற்றிச் சுற்றி அமர்ந்து காரியம் ஆற்றுவதால் அது ‘சுழல்’. தமிழ்தான் எத்தனை அழகிய மொழி.
வன்னியில் மாயவனூர் என்று ஒரு கிராமம் இருக்கிறது. புகழ்பெற்ற கிருஷ்ணன் கோவில் இருக்கும் ஊர் அது. கிளிநொச்சி அடிபாட்டுச் சமயம் நாங்கள் வட்டக்கச்சியிலிருந்து மாயவனூருக்கு இடம்பெயர்ந்திருந்தோம். அவசர அவசரமாக ஓடிப்போய் யாருடையது என்று சரியாகத் தெரியாத ஒருவீட்டில் அன்றைக்கு அடைக்கலம். இப்படியான அந்தரமான நேரங்களில்தான் ‘அதுவும்’ வந்துவிடும். அங்கே ஒரு கக்கூஸ் இருந்தது. நான்கு பக்கமும் கிடுகால் வேயப்பட்ட கக்கூஸ். அட பரவாயில்லையே என்று தோன்றியது. முதலில் போன அக்கா போன வேகத்திலேயே திரும்பினார். ‘எதென்றாலும் வட்டக்கச்சி போய்ப் பார்ப்பம், இங்க வேண்டாம்’ என்றார். ‘உங்களுக்கெல்லாம் சொகுசா வளர்ந்ததால வந்த வினை. எந்த சிட்டுவேசனையும் சமாளிக்கப் பழகிறவந்தான் மறத்தமிழன்’ என்று சொல்லியபடி வாளியில் தண்ணி அள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தேன். உள்ளே போய்ப்பார்த்தால் வெறும் முதிரைக்கட்டை கொட்டு. முதிரை மரத்துக்கு இயல்பாகவே ஒரு ‘வழுக்கும்’ இயல்பு இருக்கிறது. அதைக் கொஞ்சம் சீவி வாய்க்கால்போலே அமைத்து, அப்படியே தாட்டுவைத்திருந்த மண்ணெண்ணை பரலோடு தொடுத்திருந்தார்கள். முதிரை கட்டைக்கு இரண்டு புறமும் இரண்டு கொங்கிரீட் கற்கள். அவை வேறு பலன்ஸ் இல்லாமல் ஆடிக்கொண்டிருந்தன. அதில் உட்கார்ந்துகொண்டு முதிரைக்கொட்டுக்குள் கக்கூஸ் இருப்பதென்பது இந்த மறத்தமிழனுக்கே சவாலான விடயமாக இருந்தது. என்ன இருந்தாலும் அதில இருந்த இஞ்சினியரிங் டிசைனை யாராலேயும் அடிக்க ஏலாது. நிச்சயமாக ஒரு மரத்தமிழன்தான் அதைச் செய்திருக்கவேண்டும்.
வட்டக்கச்சியில் நாங்கள் இருந்த வீட்டுக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு தென்னஞ்சோலை. அங்கேதான் கௌசல்யா அக்காவின் குடும்பம் குடியேறியிருந்தது. அத்தான் ஒரு சிவில் எஞ்சினியர். சிறிய மண் குடிசையைக் கூட இஞ்ச் இஞ்சாகத், தானே பார்த்துப் பார்த்துக் கட்டினார். கக்கூசும் அப்படியே. வீட்டுக்குப் பின்னால் தூரத்தில், பத்து இருபது கற்களை அடுக்கி, எங்கிருந்தோ எடுத்துக்கொண்டு வந்த ஒரு உடைந்த கக்கூஸ் பவுலை வைத்து மண்ணாலே மெழுகினார். பின்னர் அதற்குமேலே ஒரு கிலோ சீமெந்தைக் குழைத்துப் பூசினார். இப்போது ஒரு சின்ன மேடைத்தளத்தின் மேலே பவுல் கட்டியாயிற்று. மறைப்பு எப்படி? என்று கேட்டேன். நான்கு பக்கத்துக்கும் கதிகால் நட்டு ஒரு உரப்பையைச் சுற்றிவிட்டார். உள்ளே போய் உட்கார்ந்தால் தோளுக்கு மேலே எல்லாமே வெளியே தெரிந்தது.
“மூஞ்சி வெளியே தெரியுதே அத்தான், அந்தரமாக இருக்காதா?”
“மறைக்கவேண்டியதை மறைச்சால் போதும் தம்பி”
அந்தக் கக்கூசுக்குக் கூரை வேறு கிடையாது. ‘மழை பெய்தால் என்ன செய்வது?’ என்றதற்குக் ‘குடை பிடிச்சுக்கொண்டு இருக்கவேண்டியதுதான், பாவிக்காத நேரத்தில ஒரு பாத்திரத்தால பவுலை மூடினா தண்ணி உள்ளுக்க போகாது’ என்றார். இருக்கிறதைக் கொண்டு சமாளிக்கிறது. எஞ்சினியரிங் டிசைனின் உச்சம் இது.
அடுத்தநாள் விடியக்காலமை எழும்பையில் லேட்டாகிவிட்டது. வயிற்றைக் கலக்குகிறது. கக்கூசுக்குள் போய் உட்கார்ந்தேன். மழை வேறு இலேசாகத் தூறிக்கொண்டிருந்தது. அக்கா முற்றம் கூட்டிக்கொண்டிருக்கிறார். அவரைக் கவனிக்காமல் நேரே பார்த்தால் வேலிக்கு அந்தப்பக்கம் சந்திரிக்கா. அவள் என்னுடைய வகுப்புத்தான். சரவச்சட்டி கழுவிக்கொண்டிருந்தாள். என்னைப் பார்த்துச் சிரித்தாள். ‘என்ன குமரன் இஞ்சாலப் பக்கம்?’ என்றாள். அவள் சும்மாவே ஒரு நக்கல்காரி. இந்த விசயம் எப்படியும் அடுத்தநாள் வட்டக்கச்சி மகாவித்தியாலயம் முழுக்கப் பரவிவிடும். உலகமே கூடி நின்று பார்க்கும்போது ஒண்டுக்கே போகமுடியாது. அதில ரெண்டு என்றால் சுத்தம். முக்கும்போது முக எக்ஸ்பிரஷனை எப்படி மறைப்பது? கெட்ட குடியே கெடும் என்பதுபோல மழைவேறு கொஞ்சம் பலத்துப் பெய்ய ஆரம்பிக்க, இடையில் விட்டுவிட்டு உள்ளே ஓடமுடியாத நிலைமை. ‘தம்பி குடை கொண்டுவரட்டா?’ என்று அக்கா வீட்டுக்குள்ளே இருந்து கேட்கிறார். ‘இல்லை அக்கா, சிட்டுவேசன் அண்டர் கொன்ரோல்’ என்கிறேன். அவர் கேட்கவில்லை. ‘உனக்கு ஆ ஊ எண்டால் முட்டு வந்திடும். இந்தாக் குடையைப் பிடி’ என்று எடுத்துக்கொண்டு கிட்ட வந்து தந்தார். வெட்கம் பிடுங்கித்தள்ளியது. தாங்க்ஸ் சொல்லிக் குடையை வாங்கிப் பிடித்துக்கொண்டே அவசர அவசரமாகக் காரியத்தை முடிப்போம் என்றால் அது வேறு டென்சனில் ஆகுதில்லை. இருதலைக்கொள்ளி எறும்பு சிட்டுவேசன். சரவச்சட்டி கழுவிக்கொண்டிருந்த சந்திரிக்கா அப்போது ஒரு பாடலை கொஞ்சம் சத்தமாகவே ஹம் பண்ண ஆரம்பித்தாள்.
“முக்காலா முக்காபுலா லைலா.”
கக்கூஸ் தர்மங்கள் என்று சிலது இருக்கிறது. யாழ்ப்பாணத்திலும் இருந்தது. வெளிநாட்டிலும் இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் கக்கூசுக்குப் போனால், அடுத்து அவசரத்தில் வருபவருக்காகத் தண்ணீர் அள்ளி வாளியில் நிரப்பி வைக்கவேண்டும். அதேபோல பேப்பர் டொய்லட் பாவிக்கும்போது பேப்பர் ரோல் முடிந்துவிட்டால் இன்னொன்றை எடுத்து கொழுவிவிட்டுப் போகவேண்டும். இதைச் சில பிரகிருதிகள் செய்வதில்லை. ஒண்டுக்குப் போனால் நன்றாக அடித்துத் தண்ணீரை ஊற்றுவதில்லை. கொமோட் வகை டொய்லட்டுகள் இப்போது எல்லா இடமும் வந்துவிட்டது. அதிலே டொய்லட் சீட் என்று ஒன்று இருக்கிறது. அதை நிமிர்த்திவிட்டே ஆண்கள் ஒண்டுக்குப் போகவேண்டும். எங்கட ஆட்களிடம் அந்தப் பழக்கமே கிடையாது. சீட்டையும் தூக்கி வைக்கமாட்டார்கள். டார்கட் பண்ணி அடிக்கவும் தெரியாது. ‘பெய்யன பெய்யும் மழை’போல உலகமெங்கும் பெய்துவிட்டுப் போவார்கள். அடுத்து வருபவர் அந்தச் சீட்டிலே எப்படி அமரமுடியும் என்ற சிந்தனையே அவர்களிடம் இருக்காது. இதிலே இன்னுமொரு நெறி இருக்கிறது. வீடுகளில் பெண்கள் இருக்கிறார்கள் என்றால் பெய்து முடித்தபின்னர் நிமிர்த்தி இருக்கும் சீட்டை மீண்டும் மடித்துவிட்டே போகவேண்டுமாம். பெண்களுக்கு ஆண்கள் கொடுக்கும் மரியாதை அது என்கிறார்கள்.
சிங்கப்பூருக்கு மாற்றலாகிச் சில வாரங்களே ஆகியிருந்த சமயம். புது நாடு. சிங்கிலிஷ் என்ற புது மொழி. புதுவகையான மூக்குப் பெண்கள். ஈவு இரக்கமே இல்லாமல் பந்தாடும் வேலைத்தளம். ஒருநாள் சேர்வர் ரூமிலே டிஸ்கஷன் நடந்துகொண்டிருக்கிறது. எக்குத்தப்பான கேள்வி ஒன்றைக் கேட்டுவிட்டார்கள். சடக்கென்று பதில் வரவில்லை. எதையாவது சொல்லிச்சமாளிக்கலாம் என்றால் சுற்றிவர இருந்த சீனத்துப்பெண்களோடு அது முடியாத காரியம். உடனே சொன்னேன்.
“ஐ நீட் டு கோ டு த டொய்லட்”
கக்கூஸ் போய்க் கதவைச் சாத்திவிட்டு ஒரு பாட்டைக் ஹம் பண்ணினேன். ஒரே கணம்தான். ஐடியா வந்தது. சின்ன டிசைன் சேஞ். பெரும் வேலை இல்லாமலேயே கேட்டதைச் செய்துகொடுக்கலாம். உடனேயே போய் அவர்களுக்குப் பதிலைச் சொல்லி ஆச்சரியப்படுத்திய ஆக்கிமிடிஸ் கணம். அது அன்றைக்குக் கக்கூசுக்குள் போயிருக்காவிட்டால் இடம்பெற்றே இருக்காது. டென்சனாகும்போதோ, யாரோடும் பேசும்போது என் பக்கம் வீக்காக இருப்பதாக உணர்ந்தாலோ நான் உடனே நாடுவது கக்கூசைத்தான். அங்கே போய்க் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி, ஒரு பாட்டை ஹம் பண்ணி முடிப்பதற்குள் யுரேகா கணம் வந்துவிடும்.
ஒருநாள் கேதா வீட்டுக்குப் போயிருந்தபோது சூடான டிஸ்கஷன் ஒன்று ஆரம்பித்தது. ஒரு பக்கம் கேதா பிரமாஸ்திரம் விட்டுக்கொண்டிருக்கிறான். இன்னொரு பக்கம் அவன் மனைவி வீணா நாகாஸ்திரத்தை ஒரு தடவைக்கு மேலே எய்யக்கூடாது என்ற ரூலையும் தாண்டி வரிக்கு வரி போட்டுத்தாக்கிக்கொண்டிருக்க, என் நிலைமை படு மோசமாகப் போய்விட்டது. வழமைபோல எஸ்கியூஸ்மீ சொல்லிவிட்டு அவர்கள் டொய்லட்டுக்குள் நுழைந்து கதவைச் சாத்தினேன். உள்ளே ஆச்சரியம் காத்திருந்தது. கொமோட் டாங்குக்கு மேலே எஸ். ராமகிருஷ்ணனின் கதாவிலாசம் இருந்தது. அட. நம்மைப்போலப் பல கேசுகள் இருப்பது அன்றைக்கும் தெரிந்தது. கக்கூசில் வாசிப்பதற்கென்றே தனியாக ஒரு புத்தகம் என்னிடம் எப்போதும் இருக்கும். அதை ட்ரைனிலோ அல்லது படுத்திருக்கும்போதோ வாசிக்கமாட்டேன்.
இப்போது என் கக்கூசில் இருக்கும் புத்தகம் அசோகமித்திரனின் ‘தண்ணீர்’.
சில நண்பர்கள், குறிப்பாகத் தமிழரல்லாத நண்பர்கள், ‘உனக்கேன் இலங்கையைப் பிடிப்பதில்லை? எப்போது பார்த்தாலும் வெறுப்பாகவே பேசிக்கொண்டிருக்கிறாயே?’ என்பார்கள். அமுதா ஒருமுறை கேட்டபோது நான் ஒரு சின்ன சம்பவத்தைச் சொன்னேன். நிஜத்தில் நடந்தது. நடந்து சரியாக இருபத்துமூன்று வருடங்கள்.
அப்போது இலங்கை அரசாங்கம் சகடை என்று ஒரு பெரிய யுத்த விமானத்தைக் கொள்வனவு செய்திருந்தது. அது ஒரு தாட்டான் ப்ளேன். ஸ்லோவாகத்தான் நகரும். கோட்டைக்குக் குண்டு போடுவதென்றால் உரும்பிராய்க்கு மேலே இருக்கும்போதே குண்டைத் தள்ளிவிடும். இதெல்லாம் கீழே இருந்தபடி வடிவாகக் கவனிக்கலாம். ஒரு வெள்ளை நிறக் குண்டு அது. ஸ்லோவாக நகர்ந்து நகர்ந்து, ஒரு கண் மட்டுக்கு கோட்டை, கொட்டடிப்பக்கம் போய் விழும். பத்து விழுந்தால் ஐந்துதான் வெடிக்கும். வெடித்தால் விழுந்த இடத்தில் இருந்த வீடு தரைமட்டம் ஆகும். யாழ்ப்பாணக் கம்பஸ் பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேர் எதிரே, இராமநாதன் ரோட்டிலே இரண்டு மாடி வீடு ஒன்று இருந்தது. நமசிவாயம் அங்கிளின் வீடு. அவர், அவர் மனைவி, திருமணத்துக்குக் காத்திருந்த மூத்த பெண்ணோடு மொத்தமாக மூன்று பெண் குழந்தைகள். ஒரே ஒரு சகடைக் குண்டுதான். வீடு தரை மட்டம். அடுத்தநாள் பூசி மெழுகலாம் என்ற நிலையில் அந்த இடம் இருந்தது. அங்கிளின் குடும்பம் அதற்குப்பிறகு தலை நிமிரவே முடியவில்லை.
சகடை காலத்தில் சுற்றிய இன்னொரு விமானத்தின் பெயர் அவ்ரோ. ஒருவித பிரவுன் கலர் விமானம். ஒருமுறை வண்ணார்பண்ணைச் சிவன் கோவிலடியில் குண்டு போட்டுவிட்டுப் போட்ட வேகத்திலேயே பழுதடைந்து நாவற்குழியில் விழுந்துவிட்டது. நல்லூர் கண்காட்சிகளில் அப்போதெல்லாம் அதன் பாகங்களை அடிக்கடி காணலாம். அதன் சத்தம் கேட்டால் ‘அவரோ வாறார்?’ என்று நக்கலாகப் பெரிசுகள் கேட்பதுண்டு.
தொண்ணூறாம் ஆண்டு. ஒக்டோபர் மாசம். தேதி ஞாபகம் இல்லை. இந்த அவ்ரோ வழமைபோல வருகிறது. வழமைபோலக் குண்டு போடுகிறது. ஆனால் பொதுவாக வெள்ளை நிறத்தில் மின்னும் குண்டு, அன்றைக்கு விநோதமாகக் கறுப்பு நிறத்தில் இருக்கவே, அம்மாவிடம் சொல்கிறேன்.
“என்ன சனியனோ தெரியாது, எதுக்கும் பங்கருக்குள்ள போயிரு”
குண்டு விழுகிறது. ஆனால் வெடிப்பதாக இல்லை. மீண்டும் மீண்டும் அவ்ரோ சுற்றிச் சுற்றி வந்து குண்டைப் போடுகிறது. இதுதான் இடம் என்றில்லாமல் யாழ்ப்பாண நகரம் முழுதும் எழுந்தமாற்றுக்குக் குண்டுகள் விழுகின்றன. ஆனால் எதுவுமே வெடிப்பதாக இல்லை. சத்தம் இல்லை. எல்லாம் முடிந்து அரை மணி கழிந்திருக்கும்.
ஏதோ ஒரு கெட்ட நாற்றம் ஊர் முழுதும் பரவ ஆரம்பிக்கிறது.
“கக்கூசுக்குப் போனனி, தண்ணி ஒழுங்கா ஊத்தினியா?”
அக்கா என்னைத் திட்டுகிறாள். ஆனால் ஊர் முழுக்க நாறுகிறது. கடையடிக்குப் போயிருந்த அண்ணா மூக்கைப் பொத்திக்கொண்டே வீட்டுக்கு ஓடி வந்தார். அவருக்கு ஓங்காளித்துக்கொண்டு வந்தது.
“அறுவாங்கள் கக்கூசைச் சாக்கில கட்டி ஊர் முழுக்கத் தள்ளியிருக்கிறாங்கள்”

000

‘பிரேமதாஸா போட்ட பீக்குண்டு’ என்று அடுத்தநாள் உதயனில் தலைப்புச்செய்தி வெளிவந்தது. ஆரியகுளத்தடியில் அந்தப் ‘பீக்குண்டு’ சைக்கிளில் போன ஒருவரின் தலையில் விழுந்ததில் ஆள் ஸ்தலத்திலேயே செத்துப்போனார். பலருக்கு தொத்து வியாதிகள் பரவின. அந்த ‘நாற்றம்’ நான்கைந்து நாட்களுக்கு ஊர் முழுதும் உலாவியது. அந்த வியாதிகளை விட, அது கொடுத்த அவமானத்தின் நாற்றம் இருபது வருடங்கள் கழித்தும் அடங்கவில்லை. சிலதை மறக்க நினைத்தாலும் மறக்காது. இது அந்த வகை. இதை நான் சந்தித்த அத்தனை சிங்கள நண்பர்களுக்கும் சொல்லியிருக்கிறேன். வெளிநாட்டவருக்கும் சொல்லியிருக்கிறேன். இப்போது தமிழர்களுக்கும் சொல்லுகிறேன்.
நான் வீரன் கிடையாது. அரசியல் அறிவு எனக்குச் சுத்தம். ஆனால் பத்து வயசுச் சிறுவனுக்கு பீக்குண்டு போட்டுவிட்டு இப்போது வந்து ‘சகோதரர்கள், ஒரே நாடு, ஒற்றுமை, மண்ணாங்கட்டி, மட்டை’ என்று எவராவது எனக்கு அட்வைஸ் பண்ணி, எதுக்கு இப்படி இருக்கிறாய்? என்று கேள்வி கேட்டால் என் பதில் ஒன்றாகத்தான் இருக்கும்.
“They shit on us.”
000
The last portion of the above chapter was translated to English by Arulsodhy Thushyanthan
"In 90s, Sri Lankan military used 'AVRO' air crafts to drop bombs. kind of a brown color air craft. Once it dropped a bomb near Vannarpannai sivan temple. just few moments after bombing, air craft itself fell down at Navatkuli. So whenever the sound of 'AVRO' air crafts approaching, old people used to joke "Avaro Vaarar" (Is he coming?. The word Avar means He in respected terms).
It was 1990, I was 10 by then. It was on one those days in October I guess. As usual AVRO came. and dropped bombs. But bombs were not in usual white shiny colour. Rather they were weird black colour. So I informed mom about. Mom shouted back, "Dont know what the devil it could be, lets get to the bunker" (those days everyone used to build bunkers at their backyards or piece of land near houses to safe guard themselves from shells and bombs)
So the bombs were dropping, but none of them exploded. AVRO was wandering around Jaffna Penisula and dropping bombs one after the other. It randomly dropped bombs without any targets. But none of them exploded, at least I could not hear any sound. After half and hour, the aircrafts left.
gradually a horrible smell started to spread. Akka (elder sister) was scolding me, "Did you pour enough water in the toilet". It was not just my home, entire village was smelling bad. Anna (Elder brother) who went to the boutique came running tightly holding his nose. He was vomitting.
"Damn hell, they have dropped the shits everywhere" he said.
"Premadasa's shit bombs" - next day Uthayan paper headlined (one of the daily newspapers which has huge readership in Northern Province). One of these sack of shit bombs fell right on top of the head who was going on bicycle near Ariyakulam. He died on the spot. For the next four or five days horrible smell was still everywhere. Several diseases were spreading in the following days. It was not the diseases but the insult that did not go even after 25 years.
Even though we want to forget certain things in life, some we never be able to. This is one of such things. I have said this to my Sinhalese friends and foreigners.
I'm not brave, have zero knowledge on politics. But when someone comes to advice me on "brotherhood, one country, unity, blah blah", it is that 10 year old kid who answers them.
"They shit on us"
~Excerpt from the book "En Kollaipurathu kaadhalikal" (my backyard loves) by JK
...../எதுக்கு இப்படி இருக்கிறாய்? என்று கேள்வி கேட்டால் என் பதில் ஒன்றாகத்தான் இருக்கும்.
ReplyDelete“They shit on us.”// Excellent
எதுக்கு இப்படி இருக்கிறாய்? என்று கேள்வி கேட்டால் என் பதில் ஒன்றாகத்தான் இருக்கும்.
ReplyDelete“They shit on us.”