Skip to main content

Posts

Showing posts from September, 2021

"சமாதானத்தின் கதை" பற்றி அபிசாயினி

புத்தகங்களோடு அதிக நேரங்களைச் செலவளிக்காத போதிலும், புத்தகங்களோடு அதிக நேரத்தைச் செலவளிப்பவர்களோடு இந்த கொரோனா காலத்தை கடக்கவேண்டி இருந்தது…….. ஆனால், தரம் 9 ல் இருந்தே நூலகங்களுக்குப் போவது என் ப(வ)ழக்கமாய் இருந்தது . எத்தனை புத்தகங்களைப் படிந்தேன் என்பதைத் தாண்டி நிறைய நேர் அதிர்வலைகளை அந்த நூலகங்களில் சுவாசித்ததுண்டு. நிறைய மனிதர்களை ரசித்ததுண்டு . அமைதியின் ஆழம் தெரிந்ததுண்டு. அதற்கு பிறகு புத்தகங்களை வாங்குவதிலும் ஆர்வம் அதிகரித்தது. ஆனால் இப்போது முகநூலோடு என் நாட்கள் கடக்கின்றன. மனவருத்தத்திற்குரிய ஒன்றுதான் ஆனால் இந்தக் காலத்தில் புத்தகங்களை வாசிப்பதிலும், புதிய புத்தகங்களைப்பற்றி அறிமுகம் செய்வதிலும் என்னோடு இருப்பவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படியானவர்கள் அமைவது வரம் தானே! . அவர்களோடு பேசும்போதெல்லாம் நான் இன்னமும் புத்தகங்கள் எனும் சமுத்திரத்தின் கரையில் இருப்பதாகவே உணர்கிறேன். சும்மாவா நம் முன்னோர் சொல்லிச்சென்றனர் "கற்றது கையளவு; கல்லாதது உலகளவு" என! ஏன் உங்களில் சிலர் இன்னும் 'நீ இன்னும் கரையையேகூடப் பார்க்கவில்லை' என்று முணுமுணுப்பும்

சாமந்த் மயூரன் நேர்காணல்

சாமந்த் மயூரனுக்கு பத்துவயதுதான். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் தரம் ஆறில் கல்வி கற்கிறார். சில நாட்களுக்கு முன்னர் அவருடைய அம்மா என்னைத் தொடர்புகொண்டார். தன் மகனுக்கு ‘என் கொல்லைப்புறத்துக் காதலிகள்’ நூலை வாசிக்கக்கொடுத்ததாகச் சொன்னார். சாமந்துக்கு புத்தகம் நன்றாகப் பிடித்துப்போனதில் என்னோடு பேசவேண்டுமென்று மகன் கேட்டதாகவும் குறிப்பிட்டார். அடுத்தநாளே சூமில் நாங்களிருவரும் உரையாடல் ஒன்றைச் செய்தோம். சூம் மீட்டிங்கை ஒருங்கமைத்து, லிங் அனுப்பி, ரெக்கோர்டிங்கையும் செய்து, வீடியோவையும் அனுப்பிவைத்தது சாமந்த்தான். சாமந்தின் இப்பகிர்வு என் எழுத்துக்குக் கிடைத்த ஆகச்சிறந்த வாசிப்பனுபவமாக அமைந்திருந்தது. சாமந்த் போன்றவர்கள்தான் என் அடுத்த வரிகளுக்கான நம்பிக்கைகளையும் ஊக்கங்களையும் விதைப்பவர்கள். நம் நாட்களை அழகாக்குபவர்கள்.

பனங்கொட்டை பாத்தி

பரிசளிப்பு நிகழ்வுகள் பலவற்றை நான் பல நாட்களாக அவதானித்து வருகிறேன். குறிப்பாக அண்மையில் நிகழ்ந்த இரண்டு நிகழ்வுகள். தமிழ்ப் பாடசாலை ஒன்றின் பரிசளிப்பு. இன்னுமொன்று தடகள விளையாட்டு நிகழ்வின் பரிசளிப்பு. முதலாவதற்கு வைத்தியர் ஒருவர் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசில்களை வழங்க அழைக்கப்படுகிறார். இரண்டாவதற்கு ஒரு பொறியியலாளரைக் கூப்பிடுகிறார்கள். அந்த வைத்தியருக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு இருக்கலாம் என்று யோசித்துப்பார்த்தேன். க.பொ.த சாதாரணத் தரத்தில் தமிழ்ப் பாடத்தில் அவர் சிறப்புத்தேர்ச்சி எடுத்திருக்கக்கூடும். சிலவேளைகளில் பாடசாலை நாட்களில் தமிழ்ப் பேச்சுப்போட்டிகளை அவர் மனனம் செய்து ஒப்புவித்திருக்கலாம். மற்றும்படி அவருக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்? அவர் கடைசியாக வாசித்த தமிழ் நாவல் பொன்னியின் செல்வன் முதலாவது பாகமாக இருந்தாலே ஆச்சரியம். யார் கண்டார். இரண்டாவது பாகத்துக்கும் அவர் சென்றிருக்கலாம். சரி அத்தனை பாகங்களையும்தான் வாசித்தார் என்று வைப்போமே. ஏன் வெண்முரசின் இருபத்தாறாயிரம் பக்கங்களையும் வாசித்த உத்தமத் தமிழ் மகானாகவே அவர் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனா

எஸ். பி. பி

பாட்டு வழமைபோல சரணத்தில்தான் பிக்கப் ஆகும். மென் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சுப் பாதங்கள் மண் தொட்டதால் இன்று செவ்வானம் போல் ஆச்சு விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே அந்த இரண்டு வரிகளையும் திரும்பவும் பாடுமாறு ராஜா சொல்லியிருக்கக்கூடும். விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே. இம்முறை அந்தப் பொய்யிலே சின்னதாகச் சிரிப்பும் சேர்த்து. ஓ வசந்த ராஜா.

நேர்காணல் - Focus Tamil

நேற்றைய ‘அறிவோம் பகிர்வோம்’ நிகழ்ச்சியில் ‘விளமீன்’ சிறுகதை எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. நாற்பத்தைந்து நிமிடங்கள் அச்சிறுகதையை வாசித்துவிட்டு பின்னர் அடுத்த நாற்பத்தைந்து நிமிடங்கள் அக்கதையைப் பற்றியும் கதைக் களம் சார்ந்த சமூக விசயங்களையும் Shanthi யும் Kaladevi யும் அலசினார்கள். நானும் என் பங்குக்கு சில அனுபவங்களைப் பகிர்ந்திருந்தேன்.

மடொல் டூவா என்கின்ற கிராஞ்சி

சிங்கள இலக்கியத்தில் பெரிதும் கொண்டாடப்படும் ஒரு நாவல் மடொல் டூவா. நாற்பதுகளில் மார்ட்டின் விக்கிரமசிங்க எழுதிய இந்த நாவல் ஆங்கிலத்தில் அதே பெயரிலும் தமிழில் மடொல் தீவு என்றும் மொழிபெயர்க்கப்பட்டு இன்றைக்கும் பரவலாக வாசிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இலங்கைக் கல்விப் பொதுத் தராதரச் சாதாரண தரத்து ஆங்கில இலக்கியப் பாடத்திட்டத்திலும் இந்த நூல் உள்ளடங்கியிருக்கிறது. நாவலில் கதை இதுதான். ஒரு கிராமத்து முதலாளியின் மகனான ஏழு வயது உபாலி கினிவெலவும் அவர்களுடைய வீட்டு வேலைக்காரச் சிறுவனான ஜின்னாவும் சேர்ந்து அந்த ஊரிலே பல்வேறு குழப்படிகளைச் செய்கிறார்கள். அவன் தொல்லை தாங்கமுடியாமல், பாடசாலையை மாற்றி ஒரு ஆசிரியரின் வீட்டில் தங்க வைத்துப் படிப்பித்தாலும் உபாலியின் கொட்டம் அடங்குவதாகயில்லை. ஒரு நாள் உபாலியும் ஜின்னாவும் கிராமத்திலிருந்த ஓர்சார்ட் பண்ணைக்குள் புகுந்து அதை நாசமாக்குகிறார்கள். பின்னர் பொலிசில் பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் அவர்கள் ஊரைவிட்டே ஓடுகிறார்கள். அப்படி ஓடி வேறொரு கிராமத்தில் உள்ள தோட்டத்தில் வேலை செய்யும்போது, அங்கு ஒடும் ஆற்றுக்கு மத்தியில் மனித நடமாட்டமில்லாத சதுப்பு மரக்க