Skip to main content

"சமாதானத்தின் கதை" பற்றி அபிசாயினி



புத்தகங்களோடு அதிக நேரங்களைச் செலவளிக்காத போதிலும், புத்தகங்களோடு அதிக நேரத்தைச் செலவளிப்பவர்களோடு இந்த கொரோனா காலத்தை கடக்கவேண்டி இருந்தது……..

ஆனால், தரம் 9 ல் இருந்தே நூலகங்களுக்குப் போவது என் ப(வ)ழக்கமாய் இருந்தது .
எத்தனை புத்தகங்களைப் படிந்தேன் என்பதைத் தாண்டி நிறைய நேர் அதிர்வலைகளை அந்த நூலகங்களில் சுவாசித்ததுண்டு.
நிறைய மனிதர்களை ரசித்ததுண்டு .
அமைதியின் ஆழம் தெரிந்ததுண்டு.
அதற்கு பிறகு புத்தகங்களை வாங்குவதிலும் ஆர்வம் அதிகரித்தது.
ஆனால் இப்போது முகநூலோடு என் நாட்கள் கடக்கின்றன. மனவருத்தத்திற்குரிய ஒன்றுதான்
😭😭

ஆனால் இந்தக் காலத்தில் புத்தகங்களை வாசிப்பதிலும், புதிய புத்தகங்களைப்பற்றி அறிமுகம் செய்வதிலும் என்னோடு இருப்பவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படியானவர்கள் அமைவது வரம் தானே! .
அவர்களோடு பேசும்போதெல்லாம் நான் இன்னமும் புத்தகங்கள் எனும் சமுத்திரத்தின் கரையில் இருப்பதாகவே உணர்கிறேன்.
சும்மாவா நம் முன்னோர் சொல்லிச்சென்றனர் "கற்றது கையளவு; கல்லாதது உலகளவு" என!
ஏன் உங்களில் சிலர் இன்னும் 'நீ இன்னும் கரையையேகூடப் பார்க்கவில்லை' என்று முணுமுணுப்பும் காதுகளில் கேட்கத்தான் செய்கிறது...
யார் என்று தெரியாமல் அறிமுகமான ஒருவர்தான் ஜேகே …… அவர் வேறு யாருமில்லை, ஒரு ஈழத்து எழுத்தாளர் என்பதைப் பின்நாட்களில் அறிந்தேன். போன வருடம் அவருடைய 'என் கொல்லைப் புறத்துக் காதலிகள்' அட்டைப்படத்தால் ஈர்க்கப்பட்டு வாங்கினேன். அதை வாசித்த போது அவருடை மொழிநடையில் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த நாவலில், 80,90களில் யாழ்பாணத்தின் அழகை ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும்படி சிலாகித்துக் காட்டி இருந்தார்.
அந்தக் காலத்து மனித வாழ்வை கதையாக நகர்த்தியிருக்கிறார்.
“யாழ்ப்பாணத்து கிரிக்கட்” என்று யாழ்ப்பாண பிரபல பாடசாலை மைதானங்களுக்கு எல்லாம் அழைத்து சென்றார் என்றே சொல்லவேணும் .
அப்படி இருக்க, பெரிதாக அந்த நாவல் ஆசிரியர் பற்றி தேடவுமில்லை, பேசவும் சந்தர்ப்பம் அமையவில்லை. அப்படியே கடந்து விட்டேன்.
பிறகு இந்த கொரேனா காலத்தில் அவருடை அடுத்த சிறுகதைத் தொகுப்புப் பற்றி ஒருவர் சொல்லி அந்தப் புத்தகத்தையும் பரிசளித்தார்.
அதுதான் என்னை தற்சமயம் கவர்ந்த நூல்
“ சமாதானத்தின் கதை “
என்னதான் அட்டைப்படத்தைப் பார்த்து முடிவு எடுக்க கூடாது“ Don’t judge a book by its cover “. என்றாலும், சமாதானத்தின் கதை என்னும் தலைப்பும் அந்த அட்டைப் படமும் என்னை பல்வேறு கோணத்தில் யோசிக்க வைத்தது, அந்த நூல் எப்படி இருக்கும் என்று !

இலங்கையில் நீடித்த போர்க்காலத்தில் இடையில் வந்த சமாதான காலத்தின் கதையோ..? “ என்று எல்லாம் யோசித்திருக்கிறேன் .
இது ஒரு சிறுகதைத் தொகுப்பு.
மொத்தமாகப் பதினொரு சிறுகதைகளை தன்னகத்தே கொண்ட ஒரு அருமையான புத்தகம்.
என்னளவில், நல்லதொரு ஆரம்பத்திற்கு சரியான புத்தகம் என்று சொல்லலாம்…….
அதில் ஒரு சிறுகதை சமாதானத்தின் கதை
சமாதனம் எங்க இருக்கிறார் ? ….. நாம் அன்றாடம் காணக்கூடிய பரிதாபத்துக்குரிய பாத்திரம்தான் அந்த சமாதானம்.
விருப்பம் என்டா நீங்களும் படித்தறியுங்கோ …
என்னை கவர்ந்த சிறுகதைகளாக கனகரத்தினம் மாஸ்டர் ,உஷ் கடவுள்கள் துயிலும் தேசம் ,விளமீன் ,விம்பிளி ஒஃப் ஜஃப்னா ,விசையறு பந்து,சமாதானத்தின் கதை என்பன திகழ்ந்தன.
உங்களையும் ஒவ்வொன்றும் நி்ச்சயம் கவரும்.
எங்களுடை மண்வாசனையோடு, அவருடைய எழுத்துகள் நகர்ந்து செல்லும் போது ஒரு வித பெருமையும் என்னுள் எட்டிப்பார்த்தது .
ஈழப்போரின் அனுபவத்தையும் வாழ்வையும் பால்யத்தின் வழியே சொல்லிச் சென்ற விதம் வாசிப்போரை மேலும் ஈர்க்கத் துணை புரிந்தது.

எங்களுடை சமூகங்களில் நிலவும், அல்லது நம்பப்படும் பண்பாடுகளோடும்
அந்த பண்பாடுகளை எங்களுடைய சமூகத்தவர்கள் அவர்களினுடைய புதிய வாழ்வோடு இணைக்கமுடியாமல், ஒன்றுமில்லாமல் ஆக்கப்படுவதும் காலத்தின் கட்டாயத்தால் சிலர் மாறுவதும், ஆனாலும் இன்னும் சிலவற்றை விட்டு விடமுடியால் தவிப்பதும், என பல வியூகங்கள் சிறுகதைகளுக்கு இன்னொரு பரிமாணத்தைக் கொடுக்கின்றன .
கதையாசிரியர் ஒரு புலம்பெயர் தேசத்தவர். அதனாலே என்னவோ, கதைக் களத்தை ஈழ்த்திலும் புலம்பெயர் தேசத்தில் வைத்து கதை எழுத்தி இருக்கிறார் .
பண்பாடுகளோடும் விழுமியங்களோடும் வாழ்ந்தவர்களது வாழ்வு எவ்வாறு மாற்றத்திற்குள்ளாகிறது .
உதாரணமாக கனகரத்தினம் மாஸ்டர்
சுருக்கமாகச்சொன்னால் ஒரு Typical யாழ்ப்பாணத்து மனிதர் அவர் எப்படி தன் இப்போதய வாழ்வோடு மாற்றத்திற்குள்ளாகிறார் என்பதையும் சொல்லியிருப்பார் .
யாழ்ப்பாணத்தவர்களுக்குரிய சில உணவு பழக்கங்களையும், வெளிநாடுகளில் அவர்கள் அதற்காகப் படும் இன்னல்களையும் சுவாரசியம் குறையாமற் சொல்லியிருக்கிறார்.
புலம்பேர் தமிழர்களாய் தமது பிள்ளைகளிடம் வந்து சேரும் பெற்றோர்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகள், கசப்பான அனுபவங்கள் குறித்து இலாவகமான தன் மொழி நடையிலால் பேசியிருப்பார் .
உண்மைச் சம்பவங்களை புனைகதைகளாய் மாற்றினாரா என்ற சந்தேகம் கூட என்னைப் பல இடத்தில் சிந்திக்க வைத்தது. ஒரு ஆக்க இலக்கியப் படைப்பாளி,
இப்படி பலவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம்....
புத்தகங்களோடு பயணிப்பவர்களுக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தவேண்டிய தேவை இருக்காது. காரணம், அந்த பயணம் அவர்களை அதிகம் தேடவும் வாசிக்கவும் புதியவற்றை வரவேற்கவும் பழக்கப்படுத்தியிருக்கும்...
ஆனால் அந்தச் சமுத்திரத்தின் கரையில் இருப்பவர்களுக்கும் சமுத்திரத்தைக் காணதவர்களுக்கும் அது நல்லதொரு ஆரம்பமாய் அமையும்

Comments

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .