Skip to main content

Posts

Showing posts from June, 2016

கந்தசாமியும் கலக்சியும்

நண்பருக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தி கேட்டு வைத்தியசாலை விரைகிறேன். வைத்தியசாலை வாசலிலேயே பிறந்த குழந்தைகளுக்கு வாங்கிச்செல்ல என்று பொருட்களை விற்றுக்கொண்டிருப்பார்கள். ஒரு கிப்டைத் தூக்கிக்கொண்டு, அவர்களுடைய வார்டுதேடி அலைந்து, கண்டுபிடித்துப் போனால், நண்பர் வெளியில் யாருடனே தொலைபேசியில் சிரித்துக்கொண்டிருந்தார். மகன் பிறந்த சந்தோசத்தில் சிரிக்கும் தகப்பன். வாழ்த்துச்சொன்னேன். உள்ளே என்று கையைக் காட்டினார். வார்டுக்குள் நுழைந்தேன். கட்டிலில் நண்பி. கலைந்த தலை. களைத்த முகம். கண்ணெல்லாம் சொருகிக்கிடந்தது. என்னைக் கண்டதும் “வாங்கோ” என்று சன்னமாக அழைத்தார். “வாழ்த்துகள்” என்றேன். “பயங்கரமாகப் படுத்திவிட்டான், கள்ளன்” என்றார். மூன்று நாட்கள் தொடர்ச்சியாக வலி வருவதும் போவதுமாக இருந்ததே ஒழிய பிரசவம் தாமதமாகிக்கொண்டேயிருந்தது. வைத்தியர்களும் இயற்கையாகவே நிகழட்டும் என்று கத்தி வைக்க மறுத்துவிட்டார்கள். எதிர்பார்ப்பு, பயம், வலி, அலைச்சல் என்று எல்லாமே கலந்த மூன்று நாட்கள். இத்தனையையும் சத்தம்போடாமல் நிகழ்த்திய அண்ணர் அருகே தொட்டிலில் நிம்மதியாக நித்திரைகொண்டபடிக் கிடந்தார். ஒரு வ

ஏகன் அநேகன்

  விடியக்காலமை மூன்று மணி. அது ஒரு தனி உலகம். படிப்பதற்கு என்று எலார்ம் வைத்து எழுந்து, தூங்கித் தூங்கிக் கொல்லைக்குப் போய், தூங்கித் தூங்கி முகம் கழுவி, அம்மா தரும் தேத்தண்ணிக்கு வெயிட் பண்ணி, புத்தகம் கொப்பி திறக்கவே நான்கு மணியாகிவிடும். அந்த அதிகாலை அமைதியில் ஒரு மலர்ச்சி கிடைக்கும். நடுங்கும் குளிர். வீட்டு செல்லநாய் கூட குரண்டிக்கொண்டு சாக்குத் துணிக்குள் அயர்ந்து தூங்கும் நேரம். மொத்த ஊருமே தூங்கும்போது நாம் மட்டும் விழித்திருக்கிறோம் என்ற எண்ணமே அலாதியானது. வெளியே மழை சொட்டினால் அனுபவம் மேலும் இரட்டிப்பாகும். விழித்திருப்பவனின் இரவு அது.