Skip to main content

Posts

Showing posts from December, 2012

பிடிச்சதும் பிடிக்காததும் 2012

  நான்கு வருடங்களாக இப்படி பிடித்ததையும் பிடிக்காததையும் தொகுப்பது தொடர்கிறது.  இப்போது பழையதை வாசித்துப்பார்க்க ஒரு வித சுவாரசியம்; 2008 இன் சிறந்த படமாகவும் , இசை அல்பமாகவும் கருபழனியப்பனின் “பிரிவோம் சந்திப்போம்” படத்தை குறிப்பிட்டிருந்தேன். இன்றைக்கு எனக்கு “பிரிவோம் சந்திப்போம்” தமிழில் ஹேராமுக்கு பின்னர் வந்த சிறந்த படம் என்று தோன்றுகிறது. Best emerging application என்று 2009 இல் Google Wave ஐ சொல்லியிருந்தாலும் அது பின்னர் டிஸ்கன்டினியூ ஆகிவிட்டது. 2010 இல் man of the year விருது அசாஞ்னேக்கு குடுத்திருந்தேன். தல ஈகுவடோர் எம்பசிக்குள் படுத்து கிடக்கிறார். சென்ற வருடம் Yarl IT Hub ஒரு சிறந்த தொழில்நுட்ப முயற்சி என்று சொல்ல, நினைத்ததற்கு மேலாக அது யாழ்ப்பாணத்தில் பல செயற்பாடுகளையும் நெட்வோர்க்கிங்கையும் உருவாக்கியது. இதை யார் யார் வாசிக்கிறார்களோ இல்லையோ, எனக்கொரு பெர்சனல் தொகுப்பு தான். 2012 எனக்கும் மிகவும் அமைதியாக சிம்பிளாக எந்த சிக்கலுமில்லாமல் கடந்து போன வருடம். ஒருவேளை சிக்கல்களை சிம்பிளாக எடுக்க பழகிவிட்டேனோ தெரியாது. All is well.

Island of Blood

ஆனையிறவை அண்டிய ஒரு ஒலைக்குடிசை அது. கரைவலை போட்டு மீன்பிடிக்கும் ஏழை மீனவகுடும்பத்தின் வாடிவீடு. ஒரே அறை, நடுவிலே ஒரு பாய் தொங்கும். அந்தப்பக்கம் படுக்கை, இந்தப்பக்கம் சமையல், குழந்தைகள் படுக்க என்று இடம். சமையலறை வேறும்பேச்சுக்கே ஒழிய அங்கே இருந்தது என்னவோ இரண்டு சாப்பாட்டு தட்டங்கள்,நெளிந்த அலுமினிய டம்ளர்கள். இரண்டு பானைகள். ஒரு பானையில் குடி தண்ணீர். மற்றய பானையில் தான் சோறு காய்ச்சுவது. சண்டை நடக்காத பின்னேர் வேளைகளில் அந்த மீனவன் பயத்தோடு கரைவலை போட்டு பிடிக்கும் குட்டி குட்டி மீன்களில் தான் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது. பொரிக்கவோ, குழம்பு வைக்கவோ வசதியில்லை. இது போதாது என்று இருந்த ஒரே ஒரு ஆட்டைக்கூட சீக்கிய இந்தியன் ஆர்மிக்காரன் பறித்துக்கொண்டு போய்விட்டான், இறைச்சிக்கு.

iWoz

அப்பிள் நிறுவன ஸ்தாபகர்களில் ஒருவரான ஸ்டீவ் வோஸ்னியாக்கின் சுயசரிதம்.  இங்கே அவுஸ்திரேலிய நூலகம் ஒன்றில் வெட்டியா நேரம் போக்காட்டாலாம் என்று நுழைந்த நேரத்தில் கண்ணில் பட்டது. இரண்டு மணிநேரத்தில் ஒரே மூச்சில் வாசிக்கவைத்த புத்தகம்.

அசோகவனத்தில் கண்ணகி!

  அசோகவனம், சோலையாய், விதம் விதமான மரங்களும் பூக்களும் என அழகை அள்ளி தெளித்துக்கொண்டிருந்தது. சுற்றிவர நீலலில்லி பூக்கள். நுவரேலியா குளிர். தூரத்திலே மலைச்சாரல். வெயில் குறைந்த வானம், மலைகளில் பட்டு தெறித்தோ என்னவோ, மெல்லிய நீல வண்ணத்தில் தூரத்தில் மலைத்தொடர்களை பார்க்கும்போதே கண்ணுக்கு இதமாக, குளிர் பதினெட்டு பத்தொன்பது டிகிரி இருக்கலாம்.  மரத்தடியில் முழங்கால்களுக்குள் முகம்புதைத்து தன் சிலம்புகளை பார்த்தபடியே கண்ணகி சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். மரத்தின் மேலே உச்சியில் இருந்து விதம் விதமான பறவைகளின் சத்தங்கள். அவ்வப்போது உஸ் உஸ் என்ற சத்தம். இது எதுவுமே கண்ணகி காதில் எட்டவில்லை. அவளுக்கு ஊர் ஞாபகம். பூம்புகார் வெயில் அவ்வப்போது நினைவுக்கு வந்து வந்து மிரட்டிக்கொண்டிருந்தது. கோவலன் வந்து தன்னை மீட்டபின்னர் அப்படியே இங்கேயே ஒரு கடை வைத்து செட்டிலாகவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். மாதவியிடம் இருந்தும் கடல் தாண்டி தொலை தூரத்தில் இருந்துவிடலாம். இவனும் அங்காலே இங்காலே அசையமாட்டான். கோவலன் நினைவில் கண்ணகிக்கு இரண்டு செல்சியல் குளிர் இன்னமும் கூடியது. சாக்கு போன்ற ஒரு போர்வையை நேற்று தா

சகியே நீ தான் துணையே!

பாடல்கள் தரும் அனுபவங்கள் தனித்துவமானது. மேலும் மேலும் தேடல்களை உருவாக்கி அதற்குள் எம்மை தொலைத்துவிடும் அபாயங்களை ஏற்படுத்திவிடக்கூடியது. நேற்று அந்த தொலையும் அனுபவம் மீண்டும். இரவு ஒன்பது மணி இருக்கலாம். மேல்பேர்னின் கோடைக்காலத்து முதல் நாள். வெளிச்சம் இன்னமும் பரவலாக பல நிறங்களில் வியாபித்து, மெல்லிய சூட்டுடன் கொஞ்சமே தென்றலும் கூட சேர, நடை போவதற்கு அதைவிட சிறந்த நேரமோ காலமே கிடைக்காது. சகட்டு மேனிக்கு எங்கேயெல்லாம் போகப்போகிறோம் என்ற கவலையே இல்லாமல் பாட்டை கேட்டுக்கொண்டு நடக்கவேண்டும். பெயர் கூட கேள்விப்படாத பறவைகள் வற்றிப்போய்க்கொண்டிருக்கும் நீர்மண்டுகளில் தண்ணீர் தேடும், சேற்றில் சிறகடிக்கும். விளையாட்டு காட்டும். அவ்வப்போது பெண்கள் கூட்டம். கோடையின் வரவை பறைசாற்றிக்கொண்டு போட்டும் போடாமலும் ஓடும். பின்னாலே நாய்க்குட்டியும் ஓடும். எல்லாமே மனதுக்குள் ஒரு இதத்தை கொடுக்கவேண்டும். ஆனால் கொடுக்காது. பாரத்தை தான் கொடுக்கும். அந்த பாரம் நம்மை இன்னும் வேகமாக நடக்க செய்யும். இந்த முன்னிரவு அனுபவம் கொடுக்கும் துன்பம் கொஞ்சம் நஞ்சமில்லை. அதோடு இந்த பாட்டும் சேர்ந்துவிட்டால் கதை கந்தல்