Skip to main content

Posts

Showing posts from May, 2012

வாரணம் மூன்று!

  முற்குறிப்பு : இது 13-05-2012 ஆஸ்திரேலிய எழுத்தாளர் விழாவில் “புலம்பெயர் படைப்புகள் தமிழுக்கு வளம் செர்க்கின்றவனா” என்ற கருத்தரங்கில் வலையுலகம்(blogs) சார்பில் என்னுடைய உரை! எல்லோருக்கும் வணக்கம்! தமிழை இப்படியும் ரசிக்கலாம் என்று கற்றுத்தந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கும், கம்பவாரிதி இ.ஜெயராஜுக்கும் மானசீக வணக்கங்கள். காலை ஆறு மணி! தலையில் துவாய், கருத்தரங்கு தமிழில் துவாலை என்று சொல்லலாமா?  யாழ்ப்பாணத்து பனியோடு முட்டி மோதி ஊமல் கரியில் பல் துலக்கி, கரண்டு போன மின்கம்பம் பிடுங்கிய பீங்கானில் கிணற்று கப்பி. டயர் வாரில் தேடா வலயம் ஆழக்கிணற்றில் வாரும்போது அரைவாசி  தண்ணீர் ஓட்டை வாளியால் ஓடிவிடும். முகம் கழுவி சைக்கிள் எடுத்து சந்திக்கடையில் உதயனும் ஈழநாதமும், புதன்கிழமை என்றால் ஞாயிறு வீரகேசரியும்! அப்பாவுக்கு ஒன்று எனக்கொன்று வாசிப்பதில் தொடங்கும் அனுபவம்! பாடசாலை இடை வேளை, பரியோவான் நூலகத்தில் மகாபாரத சித்திரக்கதைகள்! அஞ்சாதவாசம் முடிகையில் மணியடிக்கும் வகுப்பில் இருப்புக்கொள்ளாத தவிப்பு. அது முடிந்த பின்னும் நூலகம் தாமதமாய் வீடு போனமைக்கு அம்மாவின் திட்டு திருட்டுத்...

நாற்பத்து இரண்டு!

  உயிரியல் வாழ்க்கை, எம்மை சுற்றி இருக்கும் பிரபஞ்சம் பற்றிய அந்த ஒரே கேள்விக்குரிய பதிலை, Answer to the Ultimate Question of Life, The Universe, and Everything ஐ கண்டுபிடிக்கவென “ஆழ்ந்த சிந்தனை” (Deep Thought) என்ற ஒரு அதிசக்தி வாய்ந்த கணணி வடிவமைக்கப்பட்டது. அது ஏழரை மில்லியன் ஆண்டுகளாய் கணக்கிட்டு சொல்லிய பதில் தான் “நாற்பத்திரண்டு”! பதிலை கண்டுபிடித்தாயிற்று. அதற்கான கேள்வி தான் என்ன? என்று கேட்டுக்கொண்டே hSenid மென்பொருள் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி( Chief Technical Officer) ஹர்ஷா சஞ்சீவா மேடையேற, Yarl IT Hub இன் இரண்டாவது சந்திப்பு 21-05-2012 அன்று யாழ் பல்கலைக்கழக நூலக அரங்கில் ஆரம்பிக்கிறது. தொழின்முறை தகவல் தொழில்நுட்ப துறையில் விழிப்புணர்வையும், படைப்பாற்றல் திறனையும் மேம்படுத்துவதன் மூலம், யாழ்ப்பாணத்தை ஒரு சிலிக்கன் வாலியாக மாற்றவேண்டும் என்ற தூரநோக்கோடு Yarl IT Hub அமைப்பு செயல்பட்டுவருகிறது. கணணிதுறையில் ஈடுபாடுள்ள மாணவர்களுக்கு அவர்களின் வினைத்திறனை அதிகரிப்பதோடு, அந்த துறையில் உள்ள சவால்களையும் எதிர்பார்ப்புகளையும் துறைசார் நிபுணர்களை கொண்டு தெரியப்படு...

Ladies Coupe

அகிலா, நாற்பத்தைந்து வயது சிங்கிள். அப்பா திடீரென்று விபத்தில் இறந்துபோக, அவர் பார்த்துவந்த  இன்கம் டக்ஸ் அலுவலகத்து கிளார்க் உத்தியோகம் இவளுக்கு கிடைக்க, குடும்பத்தின் “அவள் ஒரு தொடர்கதை” சுஜாதாவாகிறாள். இடையில் எட்டு வயது குறைந்த இளைஞனுடன் காதல், அதுவும் வேண்டாம் என்று விலகி, வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பார்கள் என்று காத்திருக்க, இவளுக்கு கலியாணம் செய்துவைத்தால் வீட்டுப்பாரத்தை யார் பார்ப்பார்கள் என்று அவர்களும் ஜகா வாங்க, அப்படி இப்படி என்று வயசாகிவிட்டது. இப்போதும் தங்கை குடும்பம் அவளோடு அவள் வீட்டிலேயே ஒட்டி இருக்க, வெட்ட தெரியாமல், ஒரு நாள் போதும் சாமி என்று பெங்களூரில் இருந்து கன்னியாகுமரி ட்ரெயின் ஏறுகிறாள். அது ஒரு பெண்களுக்கான பிரத்தியேக பெட்டி. Ladies coupe! அதிலே பயணிக்கும் ஐந்து பெண்கள் தங்கள் கதையை சொல்ல சொல்ல … ரயில் வேகமாக நகருகிறது. கதை அதை விட!

சச்சின்!

  Toy Story வெற்றியை தொடர்ந்து PIXAR அடுத்த படத்தை எடுக்கவேண்டும். Second system effect என்று சொல்லப்படும் இரண்டாவது அடி சறுக்கல் என்ற விஷயத்தை தவிர்க்கவேண்டும். எப்போதுமே முதல் ஹிட் கொடுப்பது இலகு. ஆண்டாண்டு காலமாக யோசித்து வைத்திருப்பதை, சக்தியை முதலாவது சிஸ்டத்தில் கொடுத்து வென்றுவிடலாம். ஆனால் தொடர்ந்து வெல்வது என்பது கடினம். Apple2 வின் வெற்றிக்கு பிறகு வந்த Apple3 அட்ரஸ் இல்லாமல் போனதுக்கு இந்த சிண்ட்ரோம் தான் காரணம். ஒரு சில இயக்குனர்கள் முதல் படத்தோடு காணாமல் போவதும் அதனால் தான். ஸ்டீவ் ஜோப்ஸ் முதல் வெற்றியை தொடர்ந்து PIXAR இயக்குனர்களுக்கு சொன்னது ஒன்றே ஒன்று தான். Toy Story செய்யும் போது எப்படி குழந்தைகள் போல வேலை செய்தீர்களோ அதை போலவே மீண்டும் குழந்தைகள் ஆகுங்கள். இந்த உலகத்தில் குழந்தைகள் அளவுக்கு புதுவிஷயங்களை கண்டுபிடிப்பவர்கள் வேறு எவரும் இல்லை. “A Bug’s Life”, PIXAR இன் இரண்டாவது படம் வெளிவந்து ஹாலிவுட்டையே ஒரு கலக்கு கலக்கியது. சமகாலத்தில் Toystory 2 எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். படம் ஓரளவுக்கு முடியும் தருவாயில் எல்லோரும் போட்டு பார்க்கிறார்கள். ஸ்டீவ் ஜாப்ஸ்...

கதை சொல்லாத கதை!

  ஏகலைவன் கவலையோடு தனது வலக்கை பெருவிரல் இருந்த இடத்தை தடவிக்கொண்டிருந்தான். குருஷேத்திரம் போர் தொடங்கி மூன்றாவது தினமே கரண்ட் தடைப்பட தொடங்கியது. இன்றைக்கு பதின்மூன்றாவது நாள். ஒரு நாளைக்கு அரை மணித்தியாலம் படி கரண்ட் தந்தாலாவது மோட்டர் போடலாம். ஒரு கையால் எக்கி எக்கி தண்ணி அள்ள சீவன் போகிறது. யோசித்துக்கொண்டே மனைவி குணாட்டி தந்த தேனிர் கோப்பையை இடக்கையால் வாங்கிக்கொண்டே ரேடியோவை திருகினான். “ஒலி 96.6, நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது குரு எப்.எம்மின் குருஷேத்திரம் சிறப்பு செய்திகள். போர் ஆரம்பித்து பதின்மூன்றாவது நாளான இன்று தந்திரோபாய பின்னகர்வில் சிக்குண்டு, சக்ரவியூகத்துள் புகுந்த பாண்டவரின் சிரேஷ்ட படைத்தளபதி அபிமன்யுவும் அவனோடு சேர்ந்த சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட படையினரும் பலி. இருநூறுக்கும் மேற்பட்ட யானைகளும் பெருந்தொகையான ஈட்டிகளும் ..….” அவசர அவசரமாக ஏஎம்முக்கு மாற்றினான் . “இது பாண்டவர் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் தமிழ் செய்திகள். வாசிப்பவர் விதூரன். பதின்மூன்றாம் நாள் போரிலே ஆயிரக்கணக்கான கௌரவ அரக்கர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர். யுத்த விதிகளுக்கு மாறாக, கௌரவர் நிரா...