Skip to main content

Posts

Showing posts from January, 2023

பொங்கல் நிகழ்வுகள்

அண்மைக்கால பொங்கல் நிகழ்வுகளில் அவதானித்த சில விசயங்கள். பொங்கல் அரசியலாக்கப்பட்டுவருகிறது. இது தமிழர்களுக்கான நிகழ்வு, இது ஒரு மத நிகழ்வு அல்ல என்ற வாதம் வலியுறுத்தப்படுகிறது. எனக்கு மிகவும் நெருக்கமான பாடும்மீன் சிறிஸ்கந்தராசா அண்ணா இதுபற்றி விரிவாக எழுதி பொங்கலுக்கு மத அடையாளம் சூட்டுவதை கடுமையாக எதிர்த்திருந்தார். எனக்கு இந்த விசயத்தில் சின்னக் கருத்துவேறுபாடு உண்டு. பொங்கல் ஒரு மண் சார்ந்த நிகழ்வு. அது ஒரு மதத்தின் போதனைகளிலிருந்து உருவானதல்ல. வேதங்களோ விவிலியமோ பொங்கலை நமக்கு அறிமுகம் செய்யவில்லை. உண்மைதான். மாற்றுக்கருத்து இல்லை. நாம் உழுதுண்டு வாழ்ந்த மண்ணில் இயற்கைக்கு உழவரும் மற்றவரும் நன்றி செலுத்துமுகமாகக் கொண்டாடப்படும் நிகழ்வு இது. அந்த நன்றி செலுத்தும் நிகழ்வு அவரவர் வாழ்வியலை அடிப்படையாகக்கொண்டு அமைந்திருக்கும். இயற்கையின் இருப்பான சூரியனுக்கு நன்றி செலுத்தி அதற்குப் புற்கை படைக்கும் புள்ளியிலேயே இயற்கையை இறைக்கு நாம் ஒப்பிட ஆரம்பித்துவிடுகிறோம். அந்த நிலையில் இயற்கையோடு சேர்த்து நாம் நம்பும் ஏனைய இறைகளுக்கும் துதி பாடுவதில் தவறு இல்லை என்றே படுகிறது. அது வீட்டின் கொல்ல

ஶ்ரீரங்கத்து தேவதைகள்

காலையிலிருந்து “ஶ்ரீரங்கத்து தேவதைகள்” வாசித்துக்கொண்டிருக்கிறேன். முப்பது வருடங்களுக்கு முன்னர் வாசித்த புத்தகம். இப்போது மீண்டும் வாசிக்கையில் கதைகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன் என்று தெரிகிறது. ஆனால் அவற்றின் ஆதார விசயங்களை மறக்கவில்லை. இச்சிறுகதைகளின் மூலப் பாத்திரமான ரங்கராஜனின் வயதுதான் அப்போது எனக்கும். கிட்டத்தட்ட அந்தப் பதின்மத்துச் சிறுவனின் குணமும்தான் எனக்கு. எல்லாவற்றிலும் கூர்ந்த அவதானிப்பு இருக்கும். ஆனால் எதனையும் முன்னின்று செய்வதில்லை. என் கொல்லைப்புறத்துக் காதலிகளில் வருகின்ற பல கதைகளில் வரும் குமரனிடம் ஶ்ரீரங்கத்து தேவதைகளின் ரங்கராஜன் எட்டிப்பார்ப்பது தற்செயல் அல்ல. கடந்த சில வருடங்களாக தமிழில் வாசித்தவை எல்லாமே மண்டையைக் காயவைக்கும் கதைகளே. ஆங்கிலத்தில் அப்படியல்ல. ஆங்கில இலக்கியத்தில் சமகாலத்தில் மிகவும் கொண்டாடப்படும் கதைகள்கூட எளிமையான வடிவமைப்பையே கொண்டிருப்பவை. மண்டைகாய வைக்கும் கதைகள்வீது விமர்சனம் ஏதும் கிடையாது. கதைக்குத் தேவை. எழுதுகிறார்கள். ஆனால் அதுதான் இலக்கியம் என்றொரு மாயை பொல்லாதது. மனிதர்களுடைய நுண்ணுணர்வுகளை அற்புதமாக விவரிக்கக்கூடிய அலிஸ் மன்ற

அம்மா ஒரு கிரிக்கட் பைத்தியம்

இன்று நேற்று இல்லை. எங்கள் வீட்டில் டிவி வந்த காலத்திலிருந்தே அவர் கிரிக்கட்டை ரசித்துப் பார்ப்பது வீட்டில் சகஜமாக நடக்கும் விசயம். என் ஞாபகமறிந்து இந்தியன் ஆர்மிக்காலத்திலிருந்தே எங்கள் வீட்டில் கிரிக்கட் எப்போதும் டிவியில் போகும். அப்போது அவர் கபில்தேவ், கவாஸ்கரின் தீவிர விசிரி. பின்னர் தொண்ணூறூகளில் சச்சின், கங்குலியின் ரசிகையானார். கங்குலி நூறு அடித்தால் போதும், அடுத்தடுத்து ஸ்பின்னருக்கு வெளிய வந்து அடிக்கும் சிக்ஸர்களுக்கு அம்மாவின் கண்கள் விரிந்து தயாராகிவிடும். அப்போதெல்லாம் கிரிக்கட் நாட்களில் இன்னிங்ஸ் பிரேக்கின்போதுதான் எங்கள் வீட்டில் புட்டு அவிக்கப்பட்டுவிடும். துணைக்கு எப்போதுமே மத்தியானக் கறிதான். பின்னேரம் அவர் டிவிக்கு முன்னர் ஈசிச்செயாரில் உட்கார்ந்துவிட்டால் மட்ச் முடிந்து பிரசெண்டேசனும் நிகழ்ந்தபின்னர்தான் ரிமோட் மற்றவர் கைக்குப் போகும். அப்படி ஒரு வெறி. ஆச்சரியம் என்னவென்றால் எப்போதுமே அம்மா பெரிதாக நாடகங்கள் எதையும் பார்த்ததில்லை. இப்போதும் டிவியில் பார்ப்பது யூடியுப்தான். அதுவும் வீட்டுத்தோட்டம் பற்றிய வீடியோக்கள். Jaffna Suthan காட்டுகின்ற மாலைதீவும் டுபாயும். இ