Skip to main content

Posts

Showing posts from February, 2012

நீ தானே எந்தன் பொன் வசந்தம்! கொலவெறி Version!!

      இந்த படைப்பை உலகம் முழுதும் பிரபலமாக்கி, இசைஞானி தனுஷின் புகழை ஹங்கேரி வரை பரப்ப, படலை வாசகர்களை வேண்டி நிற்கும், கேதா & ஜேகே             லொள்ளு மாமு லொள்ளு!!

Disgrace

அலுவலகத்தில் இருந்து இரண்டு நிமிட நடை தூரத்தில் ஐஞ்சு டாலர் புக் ஷாப் ஒன்று இருக்கிறது. புத்தகங்கள் எந்த வரிசைப்படியும் அடுக்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ராண்டமாய் கிடக்கும். “Q&A” க்கு பக்கத்தில் “Pride and Prejudice” இருக்கும். “The Art Of War” க்கு பக்கத்தில் “Mother Therasa” கிடைக்கும். ஒரு முறை அங்கே வேலை செய்யும் நடாலியாவிடம் ஏன் இப்படி ஒழுங்குபடுத்தாமல்  தாறுமாறாக அடுக்கி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். அப்படி தேடும்போது தான் சர்ப்பரைசிங்காக ஒன்றை காண்பாய் என்றாள்.  கண்டனன் என்றேன். வெண்மேக கூட்டம்! சூரியன் மெதுவாய் நோட்டம்! வெள்ளைக்காரி வெட்கம்! கவிதையா? என்றாள் இன்றைக்கு இரண்டாவது என்றேன்! புரிந்து சிரித்தாள்! புரியாமல் விழித்தேன். Cappucino காபி favourite என்றாள்! Coffee Bean @ Five? நம்பிக்கையில் தான் அன்றைக்கும் அந்த புக் ஷாப்புக்கு போனேன். வழமையாக நான் என் டெஸ்க்கில் இருந்தே அம்மா கட்டித்தந்த  புட்டையும் தேங்காய்ப்பூ சம்பலையும் ஸ்பூனால் சாப்பிடுவேன்.  அலுவலகத்து ஆஸி நண்பர்களுக்கு கூட யாழ்ப்பாணமும் புட்டும் எவ்வளவு tight friends என்று இப்போது தெரிய

சின்னக்கண்ணன் அழைக்கிறான்!!

என்ன ரொம்ப நாளாகிவிட்டதா! ஏதோ ஒரு மூட் வந்து மீண்டும் ஒருமுறை “என்றென்றும் ராஜா” நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன். “சின்னக்கண்ணன் அழைக்கிறான்” பாடல். சூரியனுக்கு டார்ச் அடிக்கப்போவதில்லை. ஆனால் இந்த பாடல் தான் பதிவுக்கு தலைப்பிள்ளை!  ராகம் ரீதிகௌலா. பின்னாளில் வரப்போகும் மிகப்பெரிய மெலடி ஹிட்ஸ்க்கு எல்லாம் இன்ஸ்பிரேஷன்! இரண்டு ராஜாக்களும் இணைந்திருக்காவிடில் ரீதிகௌலா இத்தனை பாடல்களை தமிழ்த்திரை இசைக்கு தந்திருக்குமா? சந்தேகம் தான்! சிங்கப்பூரில் இருக்கும்போது ஒருமுறை எழில் வீட்டுக்கு சென்றிருந்தேன். இரவு எல்லோரும் dinner க்கு food court போகிறோம். பக்கத்தில் தீபன். புதிதாக ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டு இருந்தான். “என்னடா இது பாட்டு, எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கேடா” என்று சொன்னேன். “கண்டுபிடி பார்ப்போம்” என்றான். பிடித்தேன். சிரித்தான்! கிட்டத்தட்ட ஏக் டு ஏக் காப்பியாக “சின்னக்கண்ணனை” அடித்தால் நான் கூட கண்டுபிடிப்பேன் தானே!!! சேலையில் இருந்தாலும், குட்டை பாவாடை போட்டிருந்தாலும் ஹன்சிகா ஹன்சிகா தானே. நாங்க பாத்திடுவோம்ல! ஆனாலும் சான்சே இல்லாத பாடல் தான்! அதுவும்

A Thousand Splendid Suns

டெல்லி விமானநிலையத்தில் வாங்கி அங்கேயே வாசிக்க தொடங்கி, மூடி வைக்க முடியாமல், சிங்கப்பூர் விமான நிலையத்தில் taxyக்கு வரிசையில் நிற்கும்போது கூட வாசித்து, டிரைவருக்கு PIE சொல்ல மறந்து, AYE நெரிசலில் திணறும்போது நானும் காபுல் சண்டையில் சிக்கி! வீடு வந்து, இரவிரவாக வாசித்து, அடுத்த நாள் வேலைக்கு லீவு போட்டு, சாப்பாடு தண்ணியில்லாமல் அதுவே கதியென்று கிடந்து, இரவு எட்டு மணிக்கு என் அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்தால், அக்கா பாவமாய் பார்த்து கேட்டாள். “யாரடா அந்த பொண்ணு?” “பொண்ணு இல்ல அக்கா ….. பொண்ணுங்க! “The Kite Runner” புகழ் காலித் ஹூசைனின் “A Thousand Splendid Suns” வாசித்தால் புரியும், மரியமும் லைலாவும் உங்கள் இதயத்தின் இடது வலது என்று இடம்பிடித்து இருப்பார்கள். சம்பந்தமேயில்லாவிட்டாலும் அகிலனின் பாவை விளக்கில் வரும் தேவகியை மரியத்தோடும், கௌரியை லைலாவுடனும் மனம் ஒப்பிட்டுக்கொண்டு இருந்தது. வாசிக்கும் போது ஒரே முகங்கள் வந்துகொண்டு இருந்தன. என்ன ஒன்று ரஷீத் என்ற அரக்கனை தணிகாசலத்தோடு ஒப்பிடவேமுடியாது! ஆப்கான் கதை தான். மரியம், ஒரு பணக்கார தியேட்டர் முதலாளியின் சட்டவிர

திரட்டிகளில் என்ன தான் நடக்கிறது?

  கடந்த சில நாட்களாய் பதிவர்களுக்கு ஒரு ஆச்சரியம். தங்கள் பதிவுகளில் உள்ள திரட்டிகளில் வாக்குப்பட்டி எல்லாம் துடைத்து கிளீன் ஆக இருக்கிறது. தமிழ்மணம், தமிழ்10, உடான்ஸ், இன்டெலி என எல்லாமே மக்கர் பண்ணுகிறது. ஏன் இந்த சிக்கல் என்று மண்டையை பிய்த்துக்கொண்டவர்களுக்கு இதோ! எல்லாம் கூகுளின் கண்டறியாத புதிய பிரைவசி பாலிசி தான். எல்லா blogger.com பதிவுகளையும் அந்தந்த நாட்டு டொமைன்களுக்கு மாற்றுகிறது. உதாரணமாக நீங்கள் இந்தியாவில் இருந்தால் நீங்கள் செல்லும் blogger தளங்கள் எல்லாம் blogger.com.in என்று redirect ஆகும். ஆஸ்திரேலியாவில் இருந்தால் blogger.com.au என்று முடியும். பதிவுகளை வாசிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. திரட்டியில் தான் சிக்கல். எப்படியா? உதாரணமாக நான் இந்த பதிவை தமிழ்மணத்தில் இணைக்கிறேன். நான் இணைக்கும் URL “http://orupadalayinkathai.blogspot.com. au /2012/01/blog-post_30.html ” என்று இருக்கிறது இல்லையா. இப்போது நீங்கள் இந்தியாவில் இருந்து பதிவுக்கு வருகிறீர்கள். உங்கள் URL http://orupadalayinkathai.blogspot.com. in /2012/01/blog-post_30.html . இதனால் நீங்கள் வாக்களிப்பது எனக்கு