சென்ற ஞாயிறு மெல்பேர்னில் பொங்கல் விழா. கேஸி மன்றம் நடத்தியது. மன்றத்து தலைவர் call பண்ணினார். “ஹலோ மேகலாவா” “சாரி டீ இன்னும் வரல” “ஆ நான் அப்புறமா பேசறேன்” “கொய்யால, நீ எப்ப பேசினாலும் மேகலா இருக்கமாட்டா!!, தெரியும்டா ஒங்கள பத்தி!” “இல்ல ஒரு கவியரங்கம், மேகலா தான் கவித எழுதுவாளே அதான்” “ஓ சாரி , ஹன்சிகாவ ட்ரை பண்ணுங்களேன்” “ஓ ஓகே, ட்ரை பண்ணுறன், சாரி போர் த டிஸ்டர்பான்ஸ்” தலைவர் போனை வைத்துவிட, இந்த வாரம் யாரு கொல்லைப்புறத்து காதலி என்று ஐ ஆம் திங்கிங், போன் எகைன்! “ஜேகே .. நீயும் எழுதுவ தானே” “எழுதினான், பட் சரி வரல!” “ஆனா பதிவு சிலது நல்லா இருக்கே!” “ஓ அதுவா, அது சும்மா அள்ளுது, கொலை செய்யுது, அபாரம் என்று ஒரு சில வாரத்தைகள போட்டு எழுதுறது” “கவியரங்கத்துக்கு ஆறுபேரு தேவை. ஒரு கை குறையுது! அப்பிடியே ஒரு பதிவ கவிதையா எழுதி வாசிக்கிறயா?” “What the … கவிதை என்றாலே நான் நாளு நாள் டாய்லட் போவேன். அவ்வளவு அலெர்ஜி” “இல்ல உன்னோட கேதா, உதயா கௌரி எல்லாம் கவிஞர்கள் தானே” “நான் எப்பவாச்சும் அவங்க கவிஞர் எண்டு சொன்னேனா?” “இல்ல, அவங்கட பதிவ பார்த்தா அப்புடித்தான் தெரியுது”