Skip to main content

கக்கூஸ் - வானொலி நாடகம்

பொதுக்கழிப்பறையில் இருக்கும்போது பக்கத்து அறைக்காரன் நம் "சவுண்டை" கேட்டால் அந்தரமாக இருக்குமே என்று நினைக்காதவர்கள் இருக்கமாட்டோம்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் எழுதிய சிறுகதை இது. "பண்புடன்" இதழுக்காக ஸ்ரீதர் நாராயணன் ஒரு சிறுகதை கேட்டபோது எழுதிக்கொடுத்தது.

சென்றவருடம் "என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" நூல் வெளியீட்டு புரோமஷனுக்காக "தமிழ் அவுஸ்திரேலியன்" பத்திரிகை அவுஸ்திரேலிய  தேசிய வானொலியான எஸ்.பி.எஸ் இல் ஒரு பேட்டியை ஓழுங்கமைத்து கொடுத்தது. பேட்டியை எடுத்தவர் றைசல். என் அதிர்ஷ்டம், றைசல் வெறுமனே கடனுக்கு பேட்டியை எடுக்காமல், பேட்டிக்கு முன்னர் படலையை ஒரு நோட்டம் விட்டிருக்கிறார். அப்போதே இந்த "கக்கூஸ்" மற்றும் "குட் ஷாட்" சிறுகதைகள் அவருக்கு பிடித்துவிட்டது. அவற்றை வானொலி வடிவமாக்க அனுமதி கேட்டார். சந்தோஷமாக சரி என்றேன். குட்ஷொட்டை சென்ற வருடமே ஒலி வடிவமாக்கினார்.

ஆறு மாதங்கள் கழித்து "கக்கூஸ்" ஒலிவடிவமாகியிருக்கிறது. றைசலின் நெறியாள்கையில் குரல் தந்திருப்பவர் பாலசிங்கம் பிரபாகரன்.  வழமைபோலவே தரமும் நேர்த்தியும் நிறைய ஈடுபாடும் கொண்டு தயாரித்திருக்கும் வானொலி வடிவம்.  சொன்னாப்ல, இறுதியில் என்னுடைய சிறிய பேட்டியும் இருக்கிறது.


மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

கக்கூஸ் சிறுகதை
குட் ஷோட் சிறுகதை ஒலி வடிவம்

Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘ உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம் ’ கதை வாசிக்கப்படுகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது. நிகழ்வு அறிவித்தல் _______________ அன்புக்குரியவர்களே! அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.