Skip to main content

என் கொல்லைப்புறத்து காதலிகள் - புதிய தொடர் அறிமுகம்!



அடுத்தடுத்து எழுதாதே, கொஞ்சம் இடைவெளி விட்டால் தான் நாங்களும் படிவோம், நீயும் படிவாய் என்றான் நண்பன் ஒருவன். எழுதுவது என்பது ஒருவித ecstasy மனநிலையை உருவாக்கும் போல, ஒரு கட்டத்தில் நாம் நினைத்தாலும் நிறுத்தமுடியாது. எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் போலத்தோன்றும். பின்னர் ஒரு விதமாக படிந்து அடங்கிவிடும். சும்மா சொல்லப்போனால் இதுவும் ஒருவித orgasm தான். ஜெயகாந்தனுக்கும் அது "இன்னும் ஒரு பெண்ணின் கதை" யில் நிகழ்ந்தது என்று சொல்லலாமா?, சப்ஜெக்டிவ் தான். என்ன சிலர் எப்போதுமே எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். எப்படி என்று தெரியவில்லை. ஜெயமோகனின் எழுதும் ரேட் என்னை ஆச்சரியப்படுத்தும். அதிலும் ஒரு perfection இருக்கிறது இல்லையா? சொல்லும் கருத்தை விட்டுவிடுங்கள். ஜாக்கி சேகர் எழுதுவது வருடத்துக்கு சராசரி 275 பதிவுகள். எப்படி முடிகிறது? எது உந்துகிறது? எழுதுவதற்கும் வயாக்ரா ஏதும் இருக்கிறதா என்ன? மீண்டும் மீண்டும் அவர்களுக்கு substance கிடைத்துக்கொண்டே இருப்பது மேலும் ஆச்சரியப்படுத்தும் விஷயம். தேடல் தான்.



மற்றவன் அந்தரங்கம் என்றால் குழல் புட்டு தொண்டைக்குள் போவது தெரியாமல் ரசித்துக்கொண்டிருப்போம். அதுவும் ஒரு கிளர்ச்சி தான். இதற்குள் சிக்கி சின்னாபின்னப்படுவது நடிகர் கமல், ஐயோ பாவம். தமிழ் திரையுலகில் நடிகராகவும் இருந்து ஒரு சிந்தனையாளராகவும் இருப்பது ஒரு கிரிமினல் குற்றம். அதை கமல் இன்னமும் விரும்பி செய்வது ஆச்சரியமே. நம்மில் பலர் எவற்றையுமே முன்முடிபு செய்தபின்னரே வாசிக்கிறோம், கேட்கிறோம், பார்க்கிறோம். இவன் இப்படித்தான் என்றும் இது இப்படித்தான் என்றும் தீர்மானித்துவிட்டால் பின் அவன் எதை சொன்னாலும் அது எதுவென்றாலும் அவ்வளவு தான். நமக்கு தெரியாததா என்ன?!


இன்னொருபக்கம் நம்முடைய அந்தரங்ககளை பகிர்வதிலும் எமக்கு ஒரு அலாதியான பிரியம் இல்லையா? நான் மூன்று வயதில் அம்மா சேலையில் தொங்கியத்தை பார்த்து நான்கு பெண்கள் so cute என்று Facebook இல் சொன்னால் அது பிறவிப்பயன். இரண்டு நிமிடத்துக்கு ஒருமுறை எத்தனை likes என்று check பண்ணிக்கொண்டு இருப்போம், இதன் நீட்சி தான் video பகிர்வும் twitter உம், எம்மைப் பலர் அவதானிப்பதை ரசிக்கிறோம். இன்னொருவன் போடும் ஒரு மொக்கை status க்கு கிடைக்கும் comments எரிச்சல் வர வைக்கிறது. அவன் எங்கே இருந்து அதை களவாடினான் என்று கூகுளில் தொலைவோம். இதெல்லாமே ஒரு “survival of the fittest” என்ற விலங்கு கூறின் butterfly effect நீட்சிகள் தாம்.


தொடருக்கு வருவோம். யார் அந்த கொல்லைப்புறத்து காதலிகள். அது தான் கொல்லைப்புறம் என்று சொல்லிவிட்டேனே! நீங்களே பின்னாலே வந்து எட்டிப்பார்த்தால் தான் உண்டு. ஆனால் சிலரை முன்னே அழைத்து வரப்போகிறேன். வாரம் வாரம், ஒவ்வொரு ஞாயிறும் ஒவ்வொரு காதலிகள் வருவார்கள். தீரும்வரை அல்லது தீர்மானிக்கும் வரை !!!

ddd

 “எனக்கொரு காதலி இருக்கின்றாள், அவள் எழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்!”

--------------------------- முதல் காதல் வரும் ஞாயிறு --------------------------