The White Tiger

Apr 24, 2012 0 comments
The White Tiger”. ஆஸ்திரேலியாவில் பிறந்து சென்னையில் வளர்ந்த அரவிந்த் ஆதிகா எழுதிய நாவல்.

இந்தியாவுக்கு விஜயம் செய்யும் சீன அதிபருக்கு, பெங்களூரில் ஒரு சின்ன கோர்ப்பரேட் ட்ரான்ஸ்போர்ட் கம்பனி நடத்தும் அசோக் சர்மா aka பலராம் எழுதும் கடிதம் தான் நாவல். அது சும்மா உத்திக்காக. கதை என்னவோ வழமையான சேட்டன் பகத் வகை கதை தான். போதிகாயாவுக்கு அருகே உள்ள குக்கிராமத்தில், இனிப்புகள் செய்யும் கீழ் சாதி(?)யில் பிறக்கும் ஒருவன், எப்படி ட்ரைவராகி, ஒரு கட்டத்தில் தன் முதலாளியையே கொன்றுவிட்டு, பணத்தை எடுத்துக்கொண்டு பெங்களூர் வந்து பிசினஸ் செய்வது தான் லைன். இப்படி வளருவதற்கு என்னென்ன தகிடுத்தனங்கள் செய்யவேண்டியிருக்கிறது, எந்த வித தார்மீக நெறிகளும் இருக்கக்கூடாது என்று சொல்லும் பத்தோடு பதினொன்று வகை நாவல். டிரைவர்கள் வாழ்க்கையை ஓரளவுக்கு டீடைலாக சொல்லியிருக்கும் நாவல். கொஞ்சம் மைக்ரோஸ்கோப் வைத்து பார்த்தால் இது தான் விகாஸ் சோப்ரா எழுதிய Q&A நாவலின் கதையும் கூட. சேட்டன் பகத்தின் “Revolution 2020” கதையும் இது தான். அயர்ச்சி! கீ.ரா, சுஜாதா, புதுமைப்பித்தன் போன்றோர் ஆங்கிலத்தில் எழுதாததால் போனவன் வந்தவன் எல்லாம் புக்கர் வாங்கிக்கொண்டு இருக்கிறான்! பெஸ்ட் செல்லர் கொடுக்கிறான்!

இந்த நாவலில் கவனத்தை ஈர்த்த ஒரு சம்பாஷனை வருகிறது. வட இந்தியர்கள், பெங்களூர்காரர்களை பற்றி பேசும் வசனம் இது!
“One in every three new office buildings in India is being built in Bangalore. It is the future.”
“Fuck all that. I don’t believe a word. The south is full of Tamils.You know who the Tamils are? Negroes. We’re the sons of the Aryans who came to India. We made them our selves.And now they give us lectures. Negroes”
இந்த புத்தகம் எழுதப்பட்டது 2008இல். அலுவலகத்தில் ஹர்ஷாலிடம் காட்டி “இப்படித்தான் வட இந்தியர்கள் நினைப்பார்களா?” என்று கேட்க, “ஒரு காலத்தில், ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது, என்னுடைய நெருங்கிய நண்பர்கள் எல்லோரும் தென் இந்தியர்களே ..ஈவின்  நீ உட்பட” என்றான். நான் இந்தியன் இல்லை என்று மீண்டும் ஒருமுறை சொல்ல விழைந்தாலும், அட இலங்கையனாக சாவதிலும் அவ்வளவு பெருமை இல்லை என்பதால் பேசாமல் விட்டுவிட்டேன்!

இந்த குப்பைக்கு எப்படி புக்கர் கிடைத்தது என்று ஒரு சின்ன ரிசேர்ச்! அரவிந்த் டைம்ஸ் பத்திரிகையில் வேலை பார்த்திருக்கிறார். நூல் வெளியானவுடன், வெள்ளைக்காரன் ஆகா ஓகோ என்று இரண்டு வரி எழுதியதோடு மட்டுமில்லாமல் புத்தகத்தை பதித்தும் வெளியிட, அவ்வளவு அங்க இங்க ஆளை பிடிச்சு புக்கர் வாங்கியாச்சு. சாகித்திய அக்காடமி ஒன்றும் உலகில் தனித்து இயங்கவில்லை!

Comments

Contact Form