Skip to main content

சிறப்பான தரமான சம்பவங்கள் மூன்று



சிறப்பான தரமான சம்பவங்கள் மூன்று.

சம்பவம் ஒன்று

‘பேட்ட’ ட்றெயிலரை அம்மாவிடமும் அப்பாவிடமும் போட்டுக்காட்டினேன்.
‘இந்த எடுப்பையும் நடப்பையும் வச்சு இவ்வளவு காலமும் இவன் விளையாடிட்டான், வீரன்தான்’, இது அப்பா.
‘நல்லாத்தான் இருக்கு … ஆனால் இந்தாள் உளறினதை எல்லாம் கேட்டாப்பிறகு இதைப்பார்க்க விசர் வருகுது’, இது அம்மா.
‘என்ன இப்டி சொல்லுறிங்கள், வெறும்படம்தானே, வடிவேலுவும்தான் அரசியல்ல உளறிக்கொண்டு திரிஞ்சுது, ஆனாலும் அந்தாளிண்ட கொமடியை நாங்கள் ரசிக்கிறதில்லையா?’
‘அது வடிவேலுடா … இது ரஜினிகாந்த் .. இவர் நடிப்பையும் அரசியலையும் போட்டுக் குழப்புறதாலதான் நாங்களும் குழம்பவேண்டியிருக்கு’, இது அம்மா.
‘விடு, அவன் தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்தென்ன, வராட்டியென்ன, அவங்கள் மட்டும் எங்கட சுமந்திரன், கஜா பற்றி பேசி அடிபட்டுக்கொண்டா இருக்கிறாங்கள்? நம்மளுக்கு படம் பிடிச்சா ரசிக்கலாம், இல்லாட்டி விட்டிட்டு சோலியை பார்க்கலாம்… அவங்கட அரசியல் அவங்களோட’ — அப்பா மீண்டும்.
இவ்வளத்தையும் கேட்டுக்கொண்டிருந்த அப்பாவின் சீனியர் சிட்டிசன் கிளப் அங்கிள் கேட்டார்.
‘எல்லாஞ்சரி …. ஆனா படத்துக்கேன் “பெட்டை” என்று பெயர் வச்சாங்கள்?’

சம்பவம் இரண்டு

அக்காவின் மகன், பத்து வயது, ட்றெயிலர் பார்த்தான்.
‘ஹாவ் இஸ் இட்?’
‘…இட்ஸ் ஓகே … இஸ் இட் லைக் விஜய் சேதுபதி மூவி?’
‘நோ நோ … ஹி இஸ் ஜஸ்ட் அ வில்லன்’
‘ஓ … தென் தட் ஓல்ட் கைஸ் மூவி’
‘நோ ஹனி … இட்ஸ் நொட் த அஜித் மூவி …. இட்ஸ் ரஜினிகாந்த்’
‘வட் எவர் … ஐ டோண்ட் லைக் ஹிம் … ஐ லைக் விஜய் மூவிஸ் … ஹி கான் … லைக் பைஃட் ஓல் தீஸ் ஓல்ட் போஃல்க்ஸ் எலோன்’
சீமான் ஒரு சிரி சிரிச்சான். என்னா நக்கல்டா.

சம்பவம் மூன்று

கஜனிடமிருந்து வைபர் மெஸெஜ்.
‘மச்சி, தல பின்னியிருக்காப்ள, அப்டியே தளபதி மாஸ். 2 hours 50 mins full on package.’ 
‘அவ்ளோ நேரம் நம்ம தல தாங்குமாடா?’ 
‘நம்பிக்கைதான் வாழ்க்கை.. 90ஸ் தலைவரை திருப்பிக் கொண்டந்துட்டாங்கள்.. அதுபோதும்.. என்ன ஒண்டு, சிம்ரனோடை சேர்த்து ஷோபனாவையும் போட்டிருந்தா நல்லா இருந்திருக்கும்!’ 
‘ஏண்டா மூதேவி… அப்டியே படாபட்டையும் சேர்த்துக்கேளேன்’ 
‘இல்ல மச்சி … கடைசி நாலைஞ்சு படங்களில தலையை வச்சு பாப்பிள்ளை விளையாட்டு விளையாடீட்டாங்கள். நான் கடுப்பில இருக்கிறன் … இதிலயாவது அந்தாளை உயிரோட நடக்கவிடுவாங்கள் எண்டு நினைக்கிறன்… பழைய ரஜினியை இனிப்பார்க்கலாம்’ 
‘அங்கதாண்டா பிரச்சனையே… எங்களுக்கு எப்பவுமே பழசுமாதிரி வேண்டும். அந்தக்கால யாழ்ப்பாணம், அந்தக்கால நட்புவட்டாரம், பாடசாலை ரீயூனியன், சிம்ரன், மதுபாலா, அந்தக்கால சுண்டுக்குளி வேம்படி, அந்தக்கால இளையராஜா, அந்தக்கால ரகுமான், எட்செற்றா எட்செற்றா. எப்பவுமே எமக்கு ரஜினியிடமிருந்து இன்னொரு பாஷா வேணும். ஆனா பாஷா வெளிவரேக்க பிறந்த குழந்தைக்கு இப்ப இருபத்துநாலு வயது. அதை நாங்கள் மறந்திட்டம். ரஜினிண்ட மிகப்பெரிய தோல்வியே அதுதான் … இரண்டாயிரங்களுக்குப்பிறகு ரஜினிக்கென்று ஒரு பரிமாணம் அமையாமலேயே போயிட்டுது ... கிளிண்ட் ஈஸ்ட்வுட்டை பாரு, எழுபதுகளில் டேர்ட்டி ஹரி நடிச்ச ஆள்தான் இரண்டாயிரத்தில மில்லியன் டொலர் பேபி நடிச்சுது. ஷோலே நடிச்ச அமிதாப்தான் கிட்டடில ‘பிகு’ நடிச்சது … அந்த ட்றான்ஸ்போர்மேஷன் நம்ம தலக்கு மிஸ்ஸிங் …’ 
'நீ உந்த பேக்கதைகளை படலையோட வச்சிரு … நமக்குத் தலைவர் படம் …சின்னதா ஒரு ஸ்டைல், நடை, தலைவியோட ஒரு வெருளல், அப்டியே ஒரு ரொமான்ஸ், அடிபாட்டில வேறெங்கையோ பார்த்துக்கொண்டு வில்லன் மூஞ்சில விடுறது, பாம்பைக் கண்டு பயப்பிடுறது … அவ்வளவும் போதும்... நீ பெரிய இவன்மாதிரி கதைக்காம அம்மிகொண்டு இரு. காலமை எழும்பினா ஆரெண்டாலும் கக்கூஸ் போகத்தான் வேணும்’ 
‘அதை ஏன் இப்ப எனக்கு சொல்லுறாய்? சரி விடு … நீங்களெல்லாம் திருந்தப்போறதில்லை… என்னவோ பண்ணுங்கடா ’ 
‘வெயிட் மச்சி, இவ்வளவு கதைக்கிறாய் .. நீ படம் பாக்கமாட்டியா?’ 
‘மசிரை விட்டான் சிங்கன்!’
000 

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக