Skip to main content

Posts

அரங்கேற்ற வேளை !

“நீ எங்க சுத்தினாலும் கடைசில சுப்பரின்ட கொல்லைக்க தான் வந்து சேரோணும்” அக்கா அன்று சொன்னபோது நான் அவளை ஏளனமாக பார்த்து இன்றோடு ஆறு வருடங்கள்  இருக்குமா? நான் ஒவ்வொரு முறை எழுதும்போதும் என் வீட்டில் இருந்து இப்படி ஒரு கமெண்ட் வருவது எனக்கு இப்போது பழகி விட்டது. பத்து வயது இருக்கும், தனியார் வகுப்பறையில் நான் எழுதிய முதல் கதை எல்லோருடைய பாராட்டையும் பெற்றபோது எனக்கு அம்மா சொன்னது. “கதை எழுதி கிழிச்சது போதும், புத்தகத்தை எடுத்து படிக்கிற வழிய பாரு” நான் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தது 2004இல் என்று நினைக்கின்றேன். அப்போதெல்லாம் “The Namesake” வாசித்து கொண்டிருந்த காலம். மனதிலே ஒரு Jhumpa Lahiri யாகவோ அல்லது இன்னொரு Khaled Hosseini ஆகவோ எங்கள் வாழ்கையை எழுதி  ஒரு காலத்தில் வருவேன் என்ற நம்பிக்கை இருந்தது. ஒரு " Island of Blood " உம் " Broken Palmyrah " உம் எழுதுவதற்கு  அனிதா பிரதாப்  உம்  ரஜனி திரணகமவும் வேண்டி இருந்திருக்கிறது என்ற ஆதங்கம் எப்போதும் எனக்குள் இருந்திருக்கிறது. ஷோபா ஷக் தி யின் "Traitor" வாசித்த போது எங்கே இந்த புத்தகம் ஈழத்தமி