Skip to main content

Posts

Showing posts from December, 2014

சொல்ல மறந்த கதைகள்

அப்போது ஜேவிபி கிளர்ச்சிக்காலம். 1971ம் ஆண்டு. சரத்ஹாமு தென்னிலங்கையிலே ஹக்மண என்ற ஊரில் வாழ்கின்ற தனவந்தர். ஊர் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர். கௌரவமாக வாழும் குடும்பம். சரத்ஹாமுவின் மனைவி உள்ளூர் பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக இருக்கிறார். ஒருநாள் அந்தப்பாடசாலையில் இன்னொரு ஆசிரியையும் இணைகிறார். அந்த ஆசிரியை அண்மையில் அந்த ஊருக்கு மாற்றலாகி வந்திருக்கும் இன்ஸ்பெக்டர் சமரநாயக்காவின் மனைவி. நாளடைவில் இரண்டு ஆசிரியைகளும் நண்பிகளாகிவிடுகிறார்கள். தினமும் பாடசாலை முடிந்தபின் மனைவியை ஜீப்பில் அழைத்துப்போகவரும் இன்ஸ்பெக்டர், அந்த தனவந்தரின் மனைவிக்கும் லிப்ட் கொடுக்க ஆரம்பிக்கிறார். ஒருநாள் அப்படி இறக்கிவிடும்போது உள்ளேபோய் ஒரு டீயும் குடிக்கிறார். இன்ஸ்பெக்டர் குடும்பமும் தனவந்தர் குடும்பமும் நட்பு கொள்கிறது. டீ குடிக்க தினமும் இன்ஸ்பெக்டர் வரத்தொடங்குகிறார். தனவந்தர் இல்லாத டைம் பார்த்தும் வரத்தொடங்குகிறார். இன்ஸ்பெக்டரின் சரளமான ஆங்கிலம், மிடுக்கான சீருடை. கம்பீரம். சரத்ஹாமுவின் மனைவியின் அழகு. சிரிப்பு … இப்படி பல காரணங்கள். இன்ஸ்பெக்டருக்கும் சரத்ஹாமுவின் மனைவிக்கும் கள்ளத்தொடர்

குவாண்டம் கொம்பியூட்டிங்

"I think there is a world market for maybe five computers." 1943ம் ஆண்டு ஐ.பி.எம் நிறுவனத்தின் தலைவர் தோமஸ் வாட்சன் அருளிய வார்த்தைகள் இது. எவ்வளவு அபத்தம். பின்னாளில் புகழ்பெற்ற வாட்சன் ஆய்வுகூடம் அவர் பெயரிலேயே நிறுவப்பட்டது. ஐபிம் அப்போது ஒரு பெரும்மாதா. பின்னாளில் எழுபதுகளில் அப்பிளும், மைக்ரோசொப்டும் பெர்சனல் கொம்பியூட்டர் என்ற இராட்சசனை உலகம் முழுதையும் ஆள வைக்கப்போகிறார்கள் என்பதை நாற்பதுகளிலேயே வாட்சன் அறிந்திருக்க ஞாயம் இல்லை. "மூரேயின் விதி (Moore's law)", கணனித்துறையில் இருப்பவர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். இரண்டு வருடங்களுக்கொருமுறை ட்ரான்சிஸ்டர்களின் வளர்ச்சி இரட்டிப்பாகும் என்றார் மூரே. வளர்ச்சி என்றால் இங்கே அது வினைத்திறன். அளவில் சிறுத்து வினைத்திறனில் இந்த கணனித் தொழில் நுட்பம் வளர்ந்துகொண்டேயிருக்கிறது. அந்த வேகம் அபரிமிதமானது. இதே ரேட்டில் போனால் இன்னும் சில பத்து வருடங்களில் மூரேயின் விதிப்படி ட்ரான்சிஸ்டர் அணுவின் சைஸுக்கு போகவேண்டும். வினைத்திறன் பல மடங்கு அதிகமாகும். சொல்லப்போனால் ட்ரான்சிஸ்டர் என்ற தொழில்நுட்பமே பென்ஷன் எடுத்துவிடவ

பச்சை மா

“எத்தினை மணிக்கு செத்துப் போனீங்கள்?” “இப்பத்தான் தம்பி … ஒரு அரை மணித்தியாலம் இருக்கும்” “சரியான டைம் சொல்லுங்கோ”. இண்டர்கொம் கேட்ட கேள்விக்கு நித்தியானந்தன் விழித்தான். மணிக்கூட்டைப் பார்த்தான். முள்ளு மிக வேகமாக சுழன்றுகொண்டிருந்தது. இது எந்த ஊர் மணிக்கூடு என்ற குழப்பம் வந்தது. நித்தியானந்தன் தூக்கு மாட்டிய சமயம், அடுத்த அறையில் மனைவி கோமதி கொம்பியூட்டரில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது. ஒரு ஏழு ஏழரை இருக்கலாம். நித்தியானந்தன் ரொட்டிக்கு மா பிசைந்துகொண்டிருந்தபோது எடுத்த திடீர் தற்கொலை முடிவு.  மா இன்னமும் அவன் கைகளில் ஒட்டியிருந்தது. முதல்தடவை மாட்டும்போது சுடுதளம் பிசகி, தவறி விழுந்து, இரண்டாம் தடவை சரியாக மாட்டும்போதுதான் அது சரி வந்தது. நன்றாக ஞாபகம் இருக்கிறது. அப்போது நேரம்,