Skip to main content

Posts

Showing posts with the label வியாழ மாற்றம்

1984

  “சுதந்திரம் என்பது  இரண்டும் இரண்டும் நான்கு என்று சொல்ல அனுமதிப்பது” வின்சன். உண்மைகளுக்கான அமைச்சு (Ministry of Truth) திணைக்களத்திலே அவனுக்கு சாதாரண கிளறிக்கல் உத்தியோகம். கட்சியின் வெளிவட்ட மெம்பர். நாற்பது வயது இருக்கலாம். புத்திசாலி. சுயசிந்தனை உள்ளவன். கட்சியின், நாட்டின் தலைவர் பெரிய அண்ணர் (Big Brother). கட்சிக்குள் மூன்று வட்டங்கள். உள்வட்டம; மொத்த சனத்தொகையில் இரண்டுவீதத்துக்கும் குறைவானவர்களே இந்த உள்வட்ட கட்சியில் இருக்கிறார்கள். இவர்களுக்கு சகலவித வசதியும் உண்டு. வைன் அடிக்கலாம். வீட்டு வேலையாள் வைத்திருக்கலாம். சீனி, சொக்கலேட், கோப்பி என்று எல்லாமே தண்ணியாக கிடைக்கும்.  சக்திவாய்ந்தவர்கள். தலைமைப்பீடம். முடிவெடுப்பவர்கள். இயக்குபவர்கள். The power house.

Still Counting The Dead.

வைத்தியர் மே 15, 2009. ஒரு சின்ன கட்டிடத்தில் இயங்கிக்கொண்டிருந்த கடைசி வைத்தியசாலையையும் கைவிட்டாயிற்று. ஏனைய வைத்தியர்கள் இராணுவத்திடம் சரணடைய சென்றுவிட்டார்கள். வைத்தியர் நிரோனும் அவரின் உதவியாளர் மட்டுமே பங்கருக்குள். முந்தைய தினத்து பொஸ்பரஸ் குண்டு தாக்குதலில் நிரோனின் முதுகு, கைப்பகுதி எல்லாமே எரிந்து சிதிலமாகி இருந்தது. அகோர பசி. வெளியேயோ குண்டு மழை. பங்கருக்கால் கொஞ்சம் தலையை நீட்டி எட்டிப்பார்த்தால் ஒரே புகை மூட்டம். தூரத்தே கடற்கரை மணலில் ஒரு பனங்காய் விழுந்துகிடக்கிறது. ஓடிச்சென்று அதை எடுத்துவருமாறு தன் உதவியாளரிடம் நிரோன் சொல்லுகிறார். தாமதித்தால் இன்னொரு பங்கருக்குள் இருப்பவர்கள் முந்திவிடலாம். கொஞ்சம் குண்டுகள் தணிந்த சமயம் பார்த்து உதவியாளரும் ஓடிச்சென்று அதை எடுத்துக்கொண்டு வேகமாக பங்கருக்குள் திரும்புகிறார். அப்போது தான் அந்த உதவியாளன் கையில் இருந்ததை நிரோன் கவனிக்கிறார்.