Skip to main content

Posts

ஒற்றன்

பெங்களூர் சென்ற சமயம் அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ நாவலை வாங்கியிருந்தேன். பெயரைப் பார்த்ததும் ஏதோ திரில்லர் கதையாக்கும் என்று இரண்டு வருடங்களாக வாசிக்காமலேயே இருந்துவிட்டேன். கிருமிக்காலத்தில் அதிகம் அழுத்தம் தராத புத்தகத்திலிருந்து மீளவும் வாசிப்பைத் தீவிரமாக ஆரம்பிக்கலாம் என்று தூக்கிய புத்தகம் ஒற்றன்.

பராபரம்

எல்லோரும் வீட்டினுள் முடங்கிக்கிடக்கையில் வெளியில் நடமாடுவதில் ஒரு சுகம் உண்டு. எங்காவது ஓரிரு மனிதர்கள். மனிதர்களைக் கண்டு ஆச்சரியமாகத் திரும்பிப்பார்க்கும் கங்காருக்கூட்டங்கள். கூட்டம் கூட்டமாகப் பறவைகள்.  இவர்களோடு நானும்.

ஊபர் ஈட்ஸ்

நேற்று ஊபர் ஈட்ஸ் விநியோகத்துக்கான பொதியை எடுப்பதற்கு இலங்கை உணவகம் ஒன்றுக்குச் செல்லவேண்டியிருந்தது. பொதியில் ஒட்டியிருந்த பெயரைப்பார்த்ததும் அது ஒரு ஈழத்தமிழரின் ஓர்டர் என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன். கொத்துரொட்டியும் அப்பமும் ஓர்டர் பண்ணியிருந்தார்கள். அரைக்கட்டை தூரத்தில் உள்ள கடையின் கொத்து ரொட்டிக்கு ஊபர் ஈட்ஸ் ஓர்டர் பண்ணும் தமிழர்களும் இருப்பார்களா என்ற ஆச்சரியத்துடன் பொதியை வாங்கிக்கொண்டு அந்த வீடு நோக்கிப்புறப்பட்டேன்.

சமாதானத்தின் கதை - யாழ் நூலக சந்திப்பு

நண்பர்களுக்கு வணக்கம். வரும் சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு யாழ் நூலகத்தில், ஆதிரை வெளியீடான ‘சமாதானத்தின் கதை’ பற்றிய உரையாடல் ஒன்றை வெண்பா நிறுவனம் ஒழுங்குசெய்துள்ளது. கதைகளினூடான உரையாடல் என்பது எப்போதுமே உற்சாகத்தைக் கொடுக்கக்கூடியது. ஒருவித எண்ணச்சுழற்சியில் எழுதப்படும் கதைகள் வாசிக்கப்படும்போது முற்றிலும் பிறிதொரு வடிவம் எடுத்து எழுதப்பட்டவரிடமிருந்து பிரிந்து அந்நியப்பட்டு நிற்கையில் நிறைய ஆச்சரியமும் கொஞ்சம் ஆயாசமும் சேர்ந்துவரும். அவ்விடத்தில் எழுதியவர் தொலைந்துபோய் அவரும் அந்தக்கதைகளின் இன்னொரு வாசகராகவே ஆகிறார். அந்தப்புள்ளியிலிருந்து விரிவடையும் உரையாடலை இந்நிகழ்வில் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். வாசிப்பினூடாக இணைந்திருக்கும் நண்பர்கள் அனைவரும் முடிந்தால் வருகை தாருங்கள். உங்கள் அனைவரையும் சந்தித்து உரையாட மிக ஆவலோடு இருக்கிறேன். சந்திப்போம் சனி பிற்பகம் 4.00 மணி, குவிமாடக் கேட்போர் கூடம் யாழ் பொது நூலகம் அன்புடன்.

"சமாதானத்தின் கதை" பற்றி சுபாசிகன்

"நான் வழிகாட்டிகளை நடு வழியிலேயே அடித்துத்துரத்தி விடுகிறேன். புத்தகங்களையும்தான்" சமாதானத்தின் கதை ஜேகேயின் புத்தகம் வெளிவந்து, வாங்கி நாட்கள் கடந்து விட்டன. வாசித்து முடித்து, மனதில் தோன்றியதை எழுத வேண்டும் என்ற உந்துதல் இருந்தது. வழமைபோல் பரபரவென வாசிக்கத் தொடங்கி இரண்டாவது கதையில் ஒரு இடைவெளி வந்து விட்டது. இந்த இரண்டாவது கதை பற்றி கொஞ்சம் விரிவாகவே கூறுகிறேன். கூற வேண்டும்! சிறிது நாட்கள் இடைவெளியின் பின் மீண்டும் வாசித்து முடிக்கையில், அவரவர் ஏற்கனவே விமரிசனங்கள் எழுதி முடித்து விட்டனர். இதற்குள் நான் என்னத்தைச் சொல்லிக் கிழிக்க? எனினும் நான் நினைத்ததை முடிக்காமல் விடுவதெப்படி?