Skip to main content

Posts

Showing posts from November, 2013

1984

  “சுதந்திரம் என்பது  இரண்டும் இரண்டும் நான்கு என்று சொல்ல அனுமதிப்பது” வின்சன். உண்மைகளுக்கான அமைச்சு (Ministry of Truth) திணைக்களத்திலே அவனுக்கு சாதாரண கிளறிக்கல் உத்தியோகம். கட்சியின் வெளிவட்ட மெம்பர். நாற்பது வயது இருக்கலாம். புத்திசாலி. சுயசிந்தனை உள்ளவன். கட்சியின், நாட்டின் தலைவர் பெரிய அண்ணர் (Big Brother). கட்சிக்குள் மூன்று வட்டங்கள். உள்வட்டம; மொத்த சனத்தொகையில் இரண்டுவீதத்துக்கும் குறைவானவர்களே இந்த உள்வட்ட கட்சியில் இருக்கிறார்கள். இவர்களுக்கு சகலவித வசதியும் உண்டு. வைன் அடிக்கலாம். வீட்டு வேலையாள் வைத்திருக்கலாம். சீனி, சொக்கலேட், கோப்பி என்று எல்லாமே தண்ணியாக கிடைக்கும்.  சக்திவாய்ந்தவர்கள். தலைமைப்பீடம். முடிவெடுப்பவர்கள். இயக்குபவர்கள். The power house.

டமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்!

  என் அன்புக்குரிய டமில் மக்களே, ஐ தின்க், எங்க பிரசிடெண்ட் செய்யுற அபிவிருத்தி இஸ் குட். என்னால ஸ்ரீலங்கன் கிரிக்கட் அணில லீடிங் ஸ்பின்னரா இருக்கமுடியுமின்னா ஏன் இந்த ஜனங்களால முடியாது? என்னால எய்ட் ஹண்ட்ரட் விக்கட்ஸ் எடுக்கமுடியுதுன்னா, வை கான்ட் அதர்ஸ்? தமிழ் சிங்களம் என்று யாரையும் பிரிச்சு பாக்காதீங்க. நான் டீமில இருக்கறப்போ பீஸ் இருந்தது. சமாதானம். ஒருதடவை ஏசியன் லெவன் டீமுல கப்டினாக இருந்தன் தானே. ஸ்ரீலங்கன் டீமுல வைஸ் கப்டினாவும் இருந்தன். கப்டினா ஆக முடியல்ல. பட் அதுக்கு வன் ரீசன் இருக்கி. நான் சிங்களம் மிச்சம் பேசுவேன். ஆல் டமில்ஸ் நிச்சயமா சிங்களம் படிக்கணும். பிரித் ஒதேக்க நூலைப்பிடிச்சுகிட்டு கும்பிடணும். நீங்க சிங்கள படிச்சா சிங்களீஸ் தமிழ் படிக்க தேவையில்ல தானே. எதுக்கு பிறகு அவங்களும் தமிழ் படிச்சு, அப்புறமா தமிழன் சிங்களத்திலயும் சிங்களவன் தமிழிலையும் பேசி குழம்பி போய், வேஸ்ட்டு. அச்சுவலி வி நீட் வன் பாஷா திட்டம்.

என் கொல்லைப்புறத்து காதலிகள் : சச்சின் & சச்சின் & சச்சின் & …

  சனிக்கிழமை காலை பாணும் சம்பலும் இறக்கியபிறகு சரியாக ஒன்பது மணிக்கு ஆட்டம் ஆரம்பிக்கிறது. வெட்டிக்கிடந்த வாழைமரத்தின்  அடித்தடலை எடுத்து, இரண்டு அடுக்கு சரிக்கட்டி, இரண்டு கால்களிலும் முழங்கால் வரைக்கும் வைத்து கட்டுவேன்.  இன்னொரு தடலை சின்னனா வெட்டி காற்சட்டையின் ஒருபக்கம் செருகினால் அது சைட் பாட். கயர் ஊறி, தோய்க்கும்போது அம்மா திட்டுவார் என்று தெரியும். அதை அப்போது பார்த்துக்கொள்ளலாம். போல் கார்ட் என்ற விஷயம் இருப்பது அந்த வயதில் தெரியாது. அப்பா அந்தக்காலத்தில யமாகா-350 மோட்டர்சைக்கிள் வச்சிருந்தவர். அதிண்ட பிஞ்சுபோன ஹெல்மட்டை எடுத்து தலையில் மாட்டி, பட்டி இழுத்து டைட் பண்ணியாயிற்று. லக்ஸ்பிறே பை இரண்டை கொளுவினால் கிளவ்ஸ். பிரவுன் கலருக்கு மாறியிருந்த பழைய லேஸ் தொலைந்த டெனிஸ் ஷூவை, கரப்பான் கலைத்து, போட்டுக்கொண்டு, தென்னைமட்டையில் சரிக்கட்டின பேட்டை கையில் தூக்கினால், ஐயா ரெடி.

கம்பவாரிதியிடம் இருந்து ஒரு மடல்!

  உ திரு ஜே.கே அவர்கட்கு,                                                                                         06.11.2013 அவுஸ்திரேலியா. அன்புத்  தம்பிக்கு, நலம் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன். நலமே நாடு சேர்ந்தோம். மனம் அங்கும் இங்குமாய்த் தத்தளிக்கின்றது. அவுஸ்திரேலியா வருகை மகிழ்வு தந்தது. மண் பிடிக்காவிட்டாலும் மக்கள் பிடித்துப் போயினர். கம்பனும் தமிழ்த்தாயும் உறவுகளைப் பெருக்குகின்றனர். நீண்டநாள் எதிர்ப்பார்த்த உங்கள் சந்திப்பு, நிகழ்ந்து நெஞ்சை நெகிழ்வித்தது. ஆற்றல் கண்டு அதிசயித்தேன். பேச்சாள நிலைகடந்து, சிந்தனையாளனாய் என் உளம் புகுந்தீர்கள். எழுத்தாற்றல் வியப்பேற்படுத்துகின்றது. சுஜாதாவின் ஆன்மா நிச்சயம் மகிழும். கருத்துக்களை மக்கள் மனதேற்றும் நுட்பம் வாய்த்தது பெரிய பேறு. விமர்சகளுக்காய் மட்டுமே எழுதும் எங்கள் எழுத்தாளர்கள், மக்கள் மனமேறி மகிழ விரும்புவதில்லை. நீங்கள் நினைந்தால் ஈழத்து எழுத்துலகை எழுச்சியுறச் செய்யலாம். இந்திய சஞ்சிகைகளுக்கு நிறைய எழுதுங்கள். வெளிநாட்டு எழுத்து அங்கே வரவேற்கப்படும். மற்றை இனத்தார் தமது தகுதிகளை, அன்றாடம் உலகறியச் செய்து உயர்கின்றனர். ஈழ

அடேல் அன்ரி

முல்லைத்தீவிலிருந்து படகு மூலமாக பாலாவும் அடேலும் வெளியேறுகிறார்கள். கூடவே துணைக்கு சூசையும் சில போராளிகளும். தூரத்தில் சக்கையோடு இரண்டு படகுகள் காவலுக்கு. ஆபத்து மிகுந்த இந்த பயணம் முடிவில் ஒரு சரக்கு கப்பலை அடைகிறது. அந்தக்கப்பலில் சிலநாட்கள் பயணம். பின்னர் அதிலிருந்து இன்னொரு சரக்கு கப்பலுக்கு தாவுகிறார்கள். அதில் பலநாட்கள் பயணம். முடிவில் தாய்லாந்து நாட்டு கரையிலே மேலும் இரண்டு படகுகள் மாறி, நள்ளிரவில் கரையை அடையும் அதி பயங்கர அனுபவத்துடன் அடேல் பாலசிங்கம் எழுதிய “The Will To Freedom”, தமிழில் “சுதந்திர வேட்கை” நூல் ஆரம்பிக்கிறது.