Skip to main content

Posts

Showing posts from October, 2015

ஊரோச்சம் : வட்டக்கச்சி 1

நன்றாக இருட்டி விட்டிருந்தது. படகிலே ஒரு நாற்பது ஐம்பது பேர் இருந்திருப்போம். எல்லோரும் கடல் தண்ணீர் தெறிக்காவண்ணம் துவாயையோ சாரத்தையோ சுற்றிக்கொண்டு அமர்ந்திருந்தோம். ஒரு சிலர் ஒல்லிக்கோம்பைகளை இடுப்பில் கட்டியிருந்தனர். சிலர் இடுப்பில் தேங்காய் மட்டைகள். சந்நிதியானுக்கும் அம்மாளுக்கும் அவசர நேர்த்திகள் வைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. குழந்தைகள் அழ ஆரம்பித்திருந்தன. சிறுவர்கள் பாணும் வாழைப்பழமும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். பெரியவர்கள் எவருமே பேசவில்லை.   அக்காவும் நானும் அம்மாவின் கைகளை இறுக்கப்பற்றியிருந்தோம். அல்லது அம்மாதான் எங்கள் கைகளை பற்றியிருந்தாரா என்று தெரியவில்லை. எம்மிடம் பேசுவதற்கு எதுவுமே இருக்கவில்லை. வாயைத் திறக்கும்போதெல்லாம் தாடைகள் தம்பாட்டுக்கு அடித்துக்கொண்டன. பயத்தாலும் மார்கழி கடல்காற்றின் குளிராலும் உடல் நடுங்கியது.   படகின் ஓரமாக கட்டப்பட்டிருந்த டயர்களில் பட்டுத்தெறிக்கும் கடலலைகளின் சத்தம்மட்டும் அவ்வப்போது உப்புத்தண்ணியோடு காதுகளில் விழுந்துகொண்டிருந்தது. எம் படகுக்குப்பின்னே இரண்டு படகுகள் கட்டி இழுக்கப்பட்டு வந்தன. ஒரு படகு முழுதும் சைக்கிள்களும் சில ம

வரலாறு என்கின்ற பசப்புக்காரி

அவள் மரணித்தபோது வரலாற்றுக் கிடங்கை கிளறி அவளை வெளியே தூக்கிப்போட்டார்கள். உடல் துடித்தது. வெளிச்சம் பாய்ச்சினார்கள். அவள் நிர்வாணம் கூசியது. குறிப்பெடுத்தார்கள். ஒலி பரப்பினார்கள். ஒளி பரப்பினார்கள். சொல் பரப்பினார்கள்.

வேலியே பயிரை மேய்ந்த கதை

  இது அறுபதுகளில் இடம்பெறும் கதை. ஜீன் லூயிஸ் நியூ யோர்க்கில் வசிப்பவள். விடுமுறைக்கு தன்னுடைய சொந்த ஊரான மேகொம்புக்கு வருகிறாள். அமெரிக்காவின் தென்மாநிலமான அலபாமாவில் அமைந்திருக்கும் சிற்றூர் மேகொம்ப். தென்மாநிலங்களுக்கேயுரிய பழமைவாத, கொஞ்சம் பிற்போக்கான சிந்தனைகள் ஊறிய கொன்சர்வேட்டிவ் மனிதர்கள் வசிக்கும் ஊர். அங்கே வெள்ளையினத்தவருகிடையிலேயே சாதிப்பிரிவினைகள் இருக்கிறது. கறுப்பின நிற வேற்றுமையை கேட்கவே வேண்டாம். ஜீன் லூயிஸின் தந்தை அத்திக்கஸ் மேகொம்பின் ஒரு பிரபல வழக்கறிஞர். எல்லோராலும் மதிக்கப்படுபவர். அத்திக்கஸுக்கு எழுபது வயதாகிறது. அவரோடு அவருடைய தங்கை அலக்சாந்திராவும் வசிக்கிறார். அலக்சாந்திரா மேகொம்பின் அத்தனை குணாதிசயங்களையும் கொண்ட மேட்டுக்குடிப் பெண்மணி. கறுப்பினத்தவரையும் ஏனைய சாதியினரையும் எந்நேரமும் வெளியே தெரியாமல் நாசூக்காக ஏளனம் செய்துகொண்டிருப்பார். ஊரிலே அவர் வயதை ஒத்த ஏனைய பெண்களையும் சேர்த்து வாரம்தோறும் சந்தித்து ஊர்த்துலாவாரம் பேசுவார். ஜீன் லூயிஸையும் இப்படி உடுப்பு போடு, இப்படி நட, இப்படி பேசாதே என்று நிறைய கட்டுப்பாடுகள் போடுவார். ஜீன் லூயிஸின் சிறுவயது நண்பன

ஊரோச்சம் 3 : பஸ்

  காலை பத்து மணி. யாழ்ப்பாணம் பொதுப்பேரூந்து நிலையம்.  வவுனியா பஸ் புறப்படுவதற்கு இன்னமும் அரை மணிநேரம் இருந்தது. கூட்டம் இல்லை. உள்ளே ஏறி சீட் பிடித்துவைத்துவிட்டு பராக்குப்பார்க்கலாமென வெளியே இறங்கினேன்.  ஒரே சத்தமாகவிருந்தது. எந்தநேரமும் பேரூந்துகள் புழுதியைக் கிளப்பியவாறு வந்துபோய்க்கொண்டிருந்தன. நிலையத்தில் அவ்வப்போது இடம்பெறும் தமிழ் அறிவிப்புகளை வாகன ஹோர்ன்கள் அடக்கிக்கொண்டிருந்தன. பின் வீதியில் மினிபஸ்காரர்கள் குரல்வளை கிழிய கத்திக்கொண்டிருந்தார்கள். நிறைய மோட்டார் சைக்கிள்கள். லொறிகள். அவ்வப்போது கார்கள். ஒரு பி.எம்.டபிள்யூகூட ஹோர்ன் அடித்துக்கொண்டே சென்றது . சைக்கிள்களை காண்பது அரிதாக இருந்தது. தூரத்தே விஜய் கண்டாங்கி கண்டாங்கி என்று பாடிக்கொண்டிருந்தார். காந்தி சிலைக்கு மேல் நின்ற காகமும் விடாமல் கரைந்துகொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் யாரேனும் எவரோடேனும் பேசிக்கொண்டேயிருந்தனர். யாருமே அருகில் இல்லை என்றால் போனோடு சாய்ந்தனர். சத்தம் எல்லாவிடமும் வியாபித்திருந்தது. பஸ்ஸுக்கு காத்திருப்பவர்கூட பஸ் ஸ்டாண்ட் குந்திலே படுத்து குறட்டைச்சத்தம் எழுப்பிக்கொண்டிருந்த்தார்.   துப்ப