வலைப்பதிவு ஆரம்பித்தபோது சிறுகதை மட்டும்தானே எழுதப்போகிறாய் என்று பலர் கேட்டனர். ஒரு சிலர் ஈழத்து வாழ்க்கையின் வலிகளை பதிவு செய்யவேண்டும் என்றனர். சிலர் நான் எழுதுவதை சீரியஸ் ஆகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் எனக்கென்னவோ அவர்கள் தான் முக்கியமானவர்கள் போல படுகிறது. “இவன் இது தான் எழுதுவான்” என்ற ஒரு தோற்றப்பாட்டை உருவாக்காமல் இருக்கவேண்டும் என்று முயற்சிக்கிறேன். ஆனால் அது தவிர்க்கமுடியாது போலும். Originality will become stereotyped someday. அதிலிருந்து யாரும் தப்ப முடியாது. யாரும் எழுத்தில் ஒரு பாணியை தமக்கென உருவாக்க முயல்வதில்லை. But it happens. எல்லோருமே ஒரு கட்டத்தில் தேங்கி விடுவோம். ஓடிக்கொண்டே இருப்பது நதிகளால் கூட முடியாத காரியம். அதிகம் வேண்டாம், அலைகளுக்கு கூட ஒரு வித repetition வந்து விடுகிறது இல்லையா. எனவே இந்த கட்டுப்பாடுகளுக்குள் எதை சொல்ல போகிறோம் என்பது தான் கேள்வியே. இந்த சிறுகதை போட்டி அறிவுப்பு வந்திராவிட்டால் மூன்றாவது பதிவிலேயே தேங்கி இருப்பேனோ என்னவோ? நானும் ஒரு துப்பறியும் கதை, அதுவும் யாழ்ப்பாணத்தளத்தில் எழுதுவது என்பதை எல்லாம் சென்றவாரம் நினைத்துக்கூட