Skip to main content

Posts

Ladies Coupe

அகிலா, நாற்பத்தைந்து வயது சிங்கிள். அப்பா திடீரென்று விபத்தில் இறந்துபோக, அவர் பார்த்துவந்த  இன்கம் டக்ஸ் அலுவலகத்து கிளார்க் உத்தியோகம் இவளுக்கு கிடைக்க, குடும்பத்தின் “அவள் ஒரு தொடர்கதை” சுஜாதாவாகிறாள். இடையில் எட்டு வயது குறைந்த இளைஞனுடன் காதல், அதுவும் வேண்டாம் என்று விலகி, வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பார்கள் என்று காத்திருக்க, இவளுக்கு கலியாணம் செய்துவைத்தால் வீட்டுப்பாரத்தை யார் பார்ப்பார்கள் என்று அவர்களும் ஜகா வாங்க, அப்படி இப்படி என்று வயசாகிவிட்டது. இப்போதும் தங்கை குடும்பம் அவளோடு அவள் வீட்டிலேயே ஒட்டி இருக்க, வெட்ட தெரியாமல், ஒரு நாள் போதும் சாமி என்று பெங்களூரில் இருந்து கன்னியாகுமரி ட்ரெயின் ஏறுகிறாள். அது ஒரு பெண்களுக்கான பிரத்தியேக பெட்டி. Ladies coupe! அதிலே பயணிக்கும் ஐந்து பெண்கள் தங்கள் கதையை சொல்ல சொல்ல … ரயில் வேகமாக நகருகிறது. கதை அதை விட!

சச்சின்!

  Toy Story வெற்றியை தொடர்ந்து PIXAR அடுத்த படத்தை எடுக்கவேண்டும். Second system effect என்று சொல்லப்படும் இரண்டாவது அடி சறுக்கல் என்ற விஷயத்தை தவிர்க்கவேண்டும். எப்போதுமே முதல் ஹிட் கொடுப்பது இலகு. ஆண்டாண்டு காலமாக யோசித்து வைத்திருப்பதை, சக்தியை முதலாவது சிஸ்டத்தில் கொடுத்து வென்றுவிடலாம். ஆனால் தொடர்ந்து வெல்வது என்பது கடினம். Apple2 வின் வெற்றிக்கு பிறகு வந்த Apple3 அட்ரஸ் இல்லாமல் போனதுக்கு இந்த சிண்ட்ரோம் தான் காரணம். ஒரு சில இயக்குனர்கள் முதல் படத்தோடு காணாமல் போவதும் அதனால் தான். ஸ்டீவ் ஜோப்ஸ் முதல் வெற்றியை தொடர்ந்து PIXAR இயக்குனர்களுக்கு சொன்னது ஒன்றே ஒன்று தான். Toy Story செய்யும் போது எப்படி குழந்தைகள் போல வேலை செய்தீர்களோ அதை போலவே மீண்டும் குழந்தைகள் ஆகுங்கள். இந்த உலகத்தில் குழந்தைகள் அளவுக்கு புதுவிஷயங்களை கண்டுபிடிப்பவர்கள் வேறு எவரும் இல்லை. “A Bug’s Life”, PIXAR இன் இரண்டாவது படம் வெளிவந்து ஹாலிவுட்டையே ஒரு கலக்கு கலக்கியது. சமகாலத்தில் Toystory 2 எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். படம் ஓரளவுக்கு முடியும் தருவாயில் எல்லோரும் போட்டு பார்க்கிறார்கள். ஸ்டீவ் ஜாப்ஸ், ஜோ

கதை சொல்லாத கதை!

  ஏகலைவன் கவலையோடு தனது வலக்கை பெருவிரல் இருந்த இடத்தை தடவிக்கொண்டிருந்தான். குருஷேத்திரம் போர் தொடங்கி மூன்றாவது தினமே கரண்ட் தடைப்பட தொடங்கியது. இன்றைக்கு பதின்மூன்றாவது நாள். ஒரு நாளைக்கு அரை மணித்தியாலம் படி கரண்ட் தந்தாலாவது மோட்டர் போடலாம். ஒரு கையால் எக்கி எக்கி தண்ணி அள்ள சீவன் போகிறது. யோசித்துக்கொண்டே மனைவி குணாட்டி தந்த தேனிர் கோப்பையை இடக்கையால் வாங்கிக்கொண்டே ரேடியோவை திருகினான். “ஒலி 96.6, நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது குரு எப்.எம்மின் குருஷேத்திரம் சிறப்பு செய்திகள். போர் ஆரம்பித்து பதின்மூன்றாவது நாளான இன்று தந்திரோபாய பின்னகர்வில் சிக்குண்டு, சக்ரவியூகத்துள் புகுந்த பாண்டவரின் சிரேஷ்ட படைத்தளபதி அபிமன்யுவும் அவனோடு சேர்ந்த சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட படையினரும் பலி. இருநூறுக்கும் மேற்பட்ட யானைகளும் பெருந்தொகையான ஈட்டிகளும் ..….” அவசர அவசரமாக ஏஎம்முக்கு மாற்றினான் . “இது பாண்டவர் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் தமிழ் செய்திகள். வாசிப்பவர் விதூரன். பதின்மூன்றாம் நாள் போரிலே ஆயிரக்கணக்கான கௌரவ அரக்கர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர். யுத்த விதிகளுக்கு மாறாக, கௌரவர் நிராயுதப

என் கொல்லைப்புறத்து காதலிகள் : சூப்பர் ஸ்டார்!

  கையில் கமரா. பிங்க் கலர். மேலே ஒரு பட்டன் இருக்கும். அமத்தினால் “பிய்ச் பிய்ச்” என்று தண்ணி சீரும்! கிணற்றடிக்கு இரண்டு படிக்கட்டுகள். ஒரு எட்டு எட்டினால் தோய்க்கிற கல்லு. மூன்றடி உயரம். அப்படியே ஒரு கை ஊன்றி டைமிங்குடன் ஜம்ப் பண்ணி நிற்கவேண்டும். அக்கா குசினிக்குள் இருந்து “டேய் தோய்க்கிற கல்லு, வழுக்கும், விழுந்து கிழுந்து எதையும் தேடிக்கொண்டு வராம, கால கைய வைச்சுக்கொண்டு சும்மா இரு!”. போன வருஷம் நல்லூரில் எட்டாம் திருவிழாவுக்கு வாங்கிய நீலக்கலர் ஐஞ்சு ரூபாய் கூலிங் கிளாஸ். அப்பிடியே ஒரு சுழற்று சுழற்றிக்கொண்டே போட்டுக்கொண்டு, ஒரு காலை சின்னதாக மடித்து மற்றக்காலில் ஊன்றிக்கொண்டு வானத்தை ஒரு ஆங்கிளில் பார்த்துக்கொண்டே இருக்க பாட்டு ஆரம்பிக்கும்! சிலு சிலுவென குளிரடிக்குது அடிக்குது, சிறு அரும்புகள் மலர் வெடிக்குது வெடிக்குது வனம் விட்டு வனம் வந்து மரங்கொத்தி பறவைகள் மனம் விட்டு சிரிக்கின்றதே! இப்போது தலைவர் கீழே குனிந்து மண்ணை மக்களை பார்க்கிறார். அம்மா தோயச்சு ஊத்தின சவர்க்கார தண்ணி பூங்கன்றுக்கு போகாதவாறு வேறு இடத்துக்கு பாத்தி மாற்றப்பட்டு இருந்தது. வெள்ளை நுரை தள்ளியது. இடை

The White Tiger

The White Tiger”. ஆஸ்திரேலியாவில் பிறந்து சென்னையில் வளர்ந்த அரவிந்த் ஆதிகா எழுதிய நாவல். இந்தியாவுக்கு விஜயம் செய்யும் சீன அதிபருக்கு, பெங்களூரில் ஒரு சின்ன கோர்ப்பரேட் ட்ரான்ஸ்போர்ட் கம்பனி நடத்தும் அசோக் சர்மா aka பலராம் எழுதும் கடிதம் தான் நாவல். அது சும்மா உத்திக்காக. கதை என்னவோ வழமையான சேட்டன் பகத் வகை கதை தான். போதிகாயாவுக்கு அருகே உள்ள குக்கிராமத்தில், இனிப்புகள் செய்யும் கீழ் சாதி(?)யில் பிறக்கும் ஒருவன், எப்படி ட்ரைவராகி, ஒரு கட்டத்தில் தன் முதலாளியையே கொன்றுவிட்டு, பணத்தை எடுத்துக்கொண்டு பெங்களூர் வந்து பிசினஸ் செய்வது தான் லைன். இப்படி வளருவதற்கு என்னென்ன தகிடுத்தனங்கள் செய்யவேண்டியிருக்கிறது, எந்த வித தார்மீக நெறிகளும் இருக்கக்கூடாது என்று சொல்லும் பத்தோடு பதினொன்று வகை நாவல். டிரைவர்கள் வாழ்க்கையை ஓரளவுக்கு டீடைலாக சொல்லியிருக்கும் நாவல். கொஞ்சம் மைக்ரோஸ்கோப் வைத்து பார்த்தால் இது தான் விகாஸ் சோப்ரா எழுதிய Q&A நாவலின் கதையும் கூட. சேட்டன் பகத்தின் “Revolution 2020” கதையும் இது தான். அயர்ச்சி! கீ.ரா, சுஜாதா, புதுமைப்பித்தன் போன்றோர் ஆங்கிலத்தில் எழுதாததால்