அசோகவனம், சோலையாய், விதம் விதமான மரங்களும் பூக்களும் என அழகை அள்ளி தெளித்துக்கொண்டிருந்தது. சுற்றிவர நீலலில்லி பூக்கள். நுவரேலியா குளிர். தூரத்திலே மலைச்சாரல். வெயில் குறைந்த வானம், மலைகளில் பட்டு தெறித்தோ என்னவோ, மெல்லிய நீல வண்ணத்தில் தூரத்தில் மலைத்தொடர்களை பார்க்கும்போதே கண்ணுக்கு இதமாக, குளிர் பதினெட்டு பத்தொன்பது டிகிரி இருக்கலாம். மரத்தடியில் முழங்கால்களுக்குள் முகம்புதைத்து தன் சிலம்புகளை பார்த்தபடியே கண்ணகி சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். மரத்தின் மேலே உச்சியில் இருந்து விதம் விதமான பறவைகளின் சத்தங்கள். அவ்வப்போது உஸ் உஸ் என்ற சத்தம். இது எதுவுமே கண்ணகி காதில் எட்டவில்லை. அவளுக்கு ஊர் ஞாபகம். பூம்புகார் வெயில் அவ்வப்போது நினைவுக்கு வந்து வந்து மிரட்டிக்கொண்டிருந்தது. கோவலன் வந்து தன்னை மீட்டபின்னர் அப்படியே இங்கேயே ஒரு கடை வைத்து செட்டிலாகவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். மாதவியிடம் இருந்தும் கடல் தாண்டி தொலை தூரத்தில் இருந்துவிடலாம். இவனும் அங்காலே இங்காலே அசையமாட்டான். கோவலன் நினைவில் கண்ணகிக்கு இரண்டு செல்சியல் குளிர் இன்னமும் கூடியது. சாக்கு போன்ற ஒரு போர்வையை நேற்று தா