வியாழமாற்றம் 31-01-2013 : கமல்


கமல்

நேற்றைய பிரஸ்மீட்டை பார்த்தபோது கவலையாக இருந்தது.  நாட்டைவிட்டே வெளியேற போகிறேன் என்று வெறுத்துப்போய் சொன்னார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் பெருமையாக விஜய்டிவி நிகழ்ச்சி ஒன்றில் வந்து, images
உணர உணரும் உணர்வுடையாரைப்
புணரின் புணருமாம் இன்பம் - புணரின்
தெரியத் தெரியும் தெரிவிலாதாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்

விஸ்வரூபம்!

 

viswaroopam-movie-photos-1382“அண்ணே இண்டைக்கு நிச்சயமா ஓடுது, டிக்கட் புக் பண்ணீட்டேன்” என்று கேதா மதியமே சொன்னபோது நம்பமுடியவில்லை. இறுதிநேரத்தில் ஏதாவது முன்னேற்ற குழுவோ, முக்கா குழுவோ தடையுத்தரவு வாங்கிவிடுமோ என்ற அச்சம் இருந்தது. பெடரர் முரே செமி பைனல் வேறு. பெடரரா கமலா என்று ஒரு கணம் குழப்பம். “உன்னை பாராமலே.. நான்” என்று சங்கர் மகாதேவனின் ஆலாப் மனதுக்குள் இழுக்க, கமல் என்று முடிவுசெய்தாயிற்று. மாலை ஆறுமணி ஷோ. ஆஸியில் முதல் ஷோ!

வியாழமாற்றம் 24-01-2013 : மண்டைக்காய்


வாடைக்காற்று!
vaadaik_kaarru“நெத்தலி மீன் மட்டும் எழுபது அந்தர் வரை தேறும்” என்றான் செமியோன்.
“இந்த கடலில் நெத்தலியிருப்பது முந்தி தெரியாது” என்று வியந்தார் யூசுப்பு சம்மாட்டியார்.
மரியதாஸ் தோணியை விட்டு கீழே குதித்தான். எல்லோரும் மரியாதையோடு பார்த்தார்கள். அவன் ஏளனமாக எல்லோரையும் ஒருமுறை சுற்றிபார்த்தான். அவனுடைய கண்கள் ஓரிடத்தில் ஒருகணம் நிலைத்தன. ஒருகணப்பொழுது தான்.
நாகம்மா தலையைக் குனிந்துகொண்டாள்.

வாடைக்காற்று

vaadai 7

“நெத்தலி மீன் மட்டும் எழுபது அந்தர் வரை தேறும்” என்றான் செமியோன்.
“இந்த கடலில் நெத்தலியிருப்பது முந்தி தெரியாது” என்று வியந்தார் யூசுப்பு சம்மாட்டியார்.
மரியதாஸ் தோணியை விட்டு கீழே குதித்தான். எல்லோரும் மரியாதையோடு பார்த்தார்கள். அவன் ஏளனமாக எல்லோரையும் ஒருமுறை சுற்றிபார்த்தான். அவனுடைய கண்கள் ஓரிடத்தில் ஒருகணம் நிலைத்தன. ஒருகணப்பொழுது தான்.
நாகம்மா தலையைக் குனிந்துகொண்டாள்.

உயிரிடை பொதிந்த ஊரே!

 

pongal-celebrationஇந்த ஆண்டு பொங்கல்விழா கவியரங்கில் வாசித்த கவிதை(?) இது. கரும்பிடை ஊறிய சாறு என்ற தலைப்பில் என்னது “உயிரிடை பொதிந்த ஊரே” என்ற உபதலைப்பு.

சென்றமுறை கவிதை சொன்னபோது போது “அண்ணே சந்தம் சுட்டுப்போட்டாலும் அண்டுதில்ல” என்று வாலிபன் நங்கென்று குட்டியதால், இம்முறை சந்தம் கொஞ்சம் சேர்க்க ட்ரை பண்ணியிருக்கிறேன். ஓரிரண்டில் நேரிசை வெண்பா முயற்சிகளும் உண்டு. மாட்டருக்கு போவோம்!


மறப்போரில் மாண்டிட்ட புறத்திணைக்கு அஞ்சலிகள்
இருப்போரில் தமிழ் வளர்க்கும் உயர்த்திணைக்கு வந்தனங்கள்
அக்கப்போராம் என்கவிதை அதை சொல்ல அழைத்து வந்த
ஆராரோ அவராரோ அவர்க்கெல்லாம் வணக்கங்கள்

வியாழமாற்றம் 17-01-2013 : ஆண்கள் இல்லாத வீடு


டேய் ஜேகே!
imagesசுமந்திரன்
c/o கல்க்ஸியும் கந்தசாமியும், சபரி
ஷிராணி பண்டாரநாயக்காவை மாமா தூக்கிட்டாரே?

images (1)“நாட்டாமை தீர்ப்பை மாத்து” என்று சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறன். இவன் என்னடான்னா “நாட்டாமையையே மாத்து”  என்று கடும் பிடி பிடிக்கிறான். ஆணியே புடுங்கேலாது பாஸ். ஆனாலும் இந்த சுமந்திரன் லேசுப்பட்ட ஆளு இல்ல. ஒரு கேஸை போட்டு மாமாண்ட பெயரை அப்பிடியே போல்டு ஆக்கியாச்சு. அம்மணியை ஊட்டுக்கு அனுப்பியாச்சு. இனிமேல இவரோட பருப்பு மொகான் பீஃரிசோட செல்லுபடியாகுமோ தெரியாது. ஆளை வேற பார்த்தா ஓ.பன்னீர்செல்வத்திண்ட பக்கத்து வீடு மாதிரி கிடக்கு.  என்னமா பம்முறான்யா!

Life of Pi - என் குளத்தில் எறியப்பட்ட பாறாங்கல்!

 

lifeofpiவிலங்கும் மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே!
-- மாணிக்கவாசகர்

“கண்ணே கண் மணியே, கண்ணுறங்காய் பூவே” என்று ஜெயஸ்ரீ தன் மடியில் எங்கள் தலையை வைத்து 3D இல் வருடுவதோடு படம் ஆரம்பிக்கிறது. பாண்டிச்சேரியில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்து வாழும் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்று. அதை அவர் ஒரு எழுத்தாளருக்கு சொல்லுவதான கதை.

கந்தசாமியும் கலக்ஸியும்: காட்டமான விமர்சனம்

 

கந்தசாமியும் கலக்ஸியும் ஆரம்பித்தது முதல் மூன்று விதமான விமர்சனங்கள். “நனைவிடை தோய” (தொடர்ச்சியாக தோய்ந்தால் சளி பிடிச்சிடாது?) தெரிந்த நீ ஈழத்து வாழ்க்கையை எழுதாமல் என்ன மண்ணுக்கு விஞ்ஞான கதைக்கு போனாய்? என்பது. இரண்டாவது விமர்சனம் வாசகர்களுக்கு இவ்வளவு ஆழமாகவும் அதே நேரம் நகைச்சுவையும் சேர்க்கும்போது போய்ச்சேராது. அதுவும் பதிவுகளை மேம்போக்காக தான் வாசிப்பார்கள். நீ ஏன் குத்தி முறிகிறாய்?. மூன்றாவது மொக்கை அதிகமாக இருக்கிறது என்பது, இதிலே எங்கே நல்ல விஷயம் இருக்கபோகிறது?

வியாழமாற்றம் 10-01-2013 : மரண தண்டனை


மீண்டும் ஒரு காதல் கதை!
some pagesஅந்த இரவில் அவளின் மடியில் சாயும் நேரம் கணநேரம்,
குளிர் நிலவும் இணையை தேடி ஏங்காதோ?
முதல் முத்தம் சத்தம் இன்றி களவாய் கனிவாய் நீ தந்தால்
குழல் இசையும் தென்றலும் தூக்கம் தொலைக்காதோ?
எந்தை எப்பிறப்பிலும், உன்னை மிஞ்சும் வஞ்சியில்லை
கண்ணை கண்ணில் உண்ட பின்னே கம்பன் கவியும் மிஞ்சியில்லை
பெண்ணோடு நான் கண்ணோக்க …மண்ணோடு அவள் நன்னோக்க!


அதென்ன மண்ணோடு அவள் நன்னோக்க? எழுதிய கவிஞனை கண்டுபிடித்து சிரச்சேதம் செய்யலாம் என்று நினைத்தால் அடுத்த பகுதியை வாசியுங்கள்.

வியாழமாற்றம் 03-01-2013 : நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி


நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி!
rani-bday-25ஏழு மணிக்கு அலார்ம் அடிக்க, அலுத்துக்கொண்டே சோம்பல் முறித்தவாறு விழித்தாள் மேகலா. கண்களை திறக்காமல் கைகளால் எட்டி படுக்கை விளக்குக்கடியில் இருந்த கொன்டக்ட் லென்ஸையும் ஹியரிங் எய்டையும் எடுத்து அணிந்தாள். பக்கத்தில் குமரன், அவன் தூங்கும்போது மேல்மூச்சின் ஸ்ஸ்ஸ்ஸ் சத்தம் ஏதோ செய்தது. பத்து செக்கன்கள் அவனையே உற்றுப்பார்த்துக்கொண்டிருக்க, “நீ பார்த்த பார்வைக்கு நன்றி” என்று ஹரிகரன் பாட்டு மெல்லிய சவுண்டில் திடீரென்று காதில் கேட்க ஆரம்பிக்கிறது. “கெட்ட ராஸ்கல்” என்று மனதுக்குள் திட்டியவாறே,