Skip to main content

Posts

Showing posts from May, 2016

ராசாளி

நான் ஒரு பாட்டு வெறியன் என்று சொல்லுவதே under statement. ஒரு பாட்டின் இஞ்சி இடுக்கு, சின்னச்சின்னச் சங்கதிகள், இசைக்கோர்வைகள் என்று வரிசையாக, ஒரு பாடலைக் கேட்காமல் வெறுமனே நினைத்துக்கொண்டே ரசிக்கக்கூடியவன். "பொத்திவச்ச மல்லிகை மொட்டு" என்று யோசித்தாலே போதும். ஆரம்ப வயலின்களிலிருந்து கீபோர்ட், புல்லாங்குழல், தபேலா, நாதஸ்வரம், தவில், எஸ்பிபி, ஜானகி, முன்னே நோட்டுகளுடன் இளையராஜா என்று மூளைக்குள்ளேயே கச்சேரி நிகழ்ந்து முடியும். ஒன்பது மணிநேர வேலையில் குறைந்தது அறுபது எழுபது பாடல்களேனும் தினம் கேட்பேன். இசை கேட்டுக்கொண்டிருந்தால் புரோகிராமிங் தானாக இயங்கும். இது எனக்குக்கிடைத்த வரம்.

தமிழ் ஆங்கிலேயர்கள்

எனக்கு நீண்டகாலமாகவே ஒரு பிரச்சனை இருந்துவருகிறது. நான் ஓரளவுக்கு ஆங்கிலத்தைச் சரளமாகத் தொடர்பாடல் செய்யக்கூடியவன். ஆங்கிலத்தை முதன்மை மொழியாகக்கொண்டுள்ளவர்களோடு ஒரு உரையாடலையோ அல்லது பிரசெண்டேஷனையோ செய்வது அவ்வளவு சிக்கல் கிடையாது.  ஆனால் யாரேனும் தமிழ் தெரிந்தவர் என்னோடு ஆங்கிலத்தில் உரையாடத்தொடங்கினால் என்னுடைய ஆங்கிலம் திக்கித்திணற ஆரம்பித்துவிடுகிறது. எதிரிலே பேசுபவருக்கு நன்றாகத் தமிழ் தெரியும் என்று அறிகின்ற பட்சத்தில் குஷ்புவைகண்ட அண்ணாமலை ரஜனிக்காந்த்மாதிரி "பே பே" என்று திணற ஆரம்பித்துவிடுகிறேன். இது ஏன் என்று தெரியவில்லை.

நினைவரங்கும் இலக்கியச்சந்திப்பும்

செங்கை ஆழியான், புன்னியாமீன், கே. விஜயன் ஆகியோரின் நினைவரங்கும் இலக்கிய சந்திப்பும் நாளை இடம்பெறவுள்ளது. கந்தராஜாவின் தலைமையிலான இந்நிகழ்வில் ஈழத்திலிருந்து வருகை தந்திருக்கும் ஞானசேகரன், சந்திரசேகரன், பாலஸ்ரீதரன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.  செங்கையாழியான் நினைவுரையைச் செய்கின்ற சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்துள்ளது. செங்கை ஆழியான் உயிரோடு இருக்கும்போதே நானும் ஜூட் அண்ணாவும் அவருடைய புத்தக அறிமுக அரங்கைச் செய்யவேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தோம். கைகூடிவரவில்லை. இன்னொரு இருபது வருடங்களுக்குப்பிறகு செங்கையாழியான் எப்படி, எதற்காக வாசிக்கப்படலாம் என்பதை விரிவாக எடுத்துப்பேசலாம் என்று நினைக்கிறேன். வந்தால் கலந்துரையாடலாம். நிற்க. இலக்கியச்சந்திப்புகள், இயல் அரங்கங்கள் மீதான ஆர்வம் இப்போதெல்லாம் வடிந்துபோய்விட்டது. மேடைப்பேச்சுகளின் பயன் பற்றிய குழப்பங்களும் கூடவே எழுகின்றன. இதெல்லாம் எதற்காக?புத்தகங்களினூடு நாங்கள் எப்போதுமே பேசிக்கொண்டுதானே இருக்கிறோம்? எல்லாவற்றையும் தூக்கிக்குப்பையில் போட்டுவிட்டு ஒரு முடிவுறாத ரயில் பயணத்தில் யன்னல்கரையோரம் உட்கார்ந்துகொண்டு கூதல்காற்றில்

அசோகவனத்தில் கண்ணகி நாடகம் விமர்சனம் - ரஸஞானி

    "வேத்தியல் பொதுவியலாக இருந்த நாடகம், கோயில்களில் தஞ்சமடைந்து பின் தெருக்கூத்தாக இருந்து பார்சி நாடக வருகையால் மறு எழுச்சி பெற்றுப் புராணம், வரலாறு, சமூகம் என்ற வகைகளைப் பெற்று மேடையில் வளர்ந்தது, அதன்பின் நாடகம் படிப்பதற்கும் கேட்பதற்கும் உரியதாயிற்று. பதிவு செய்யப்பட்டுத் திரைப்படம் போலத் தொலைகாட்சியில் ஒளிபரப்பப் படுவதாகவும் அது ஆயிற்று." இவ்வாறு எழுதப்பட்ட குறிப்பொன்றை இக்கால நாடகவகைகள் என்ற ஒரு கட்டுரையில் அண்மையில் படித்தேன். இன்று தொலைக்காட்சி நாடகங்களின் தீவிரத்தால், மேடை நாடக அரங்காற்றுகைகள் நலிவடைந்து வருகின்றன. அத்துடன் குறும்படங்களும் அவ்விடத்தை ஆக்கிரமித்துவிட்டன. எனினும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கூத்து முயற்சிகளையும் மேடை நாடகங்களையும் அவதானித்து வருகின்றோம். இந்தப்பின்னணியில் நீண்ட நாட்களுக்குப்பின்னர் அவுஸ்திரேலியாவில் மெல்பனில் அரங்கேறிய இளம் படைப்பாளி ஜே.கே.ஜெயக்குமாரனின் அசோகவனத்தில் கண்ணகி என்ற நாடகம் பற்றிய எனது ரஸனைக்குறிப்பை இங்கு பதிவுசெய்கின்றேன்.

வாருங்கள் தோழர்களே

மேதினம். அதற்கு முதல்நாளே இயக்கவாகனங்கள் கம்பஸ் பக்கம் அலையத்தொடங்கிவிடும். எங்கள் பக்கத்து தோட்டக்காணிக்குள் 50கலிபர் பூட்டுவார்கள். கம்பசுக்கு பின்னாலே மேஜர் டயஸ் வீதியில் 90கலிபர் பூட்டப்படும். கலிபர் பொசிஷனைச் சுற்றி வட்டமாக பங்கர் வெட்டுவார்கள். ஆனால் பொம்மர் வந்து அவனுக்கு அடித்தால் எங்கள் மேலேயே விழும். அதனால் நாங்களும் வீட்டு பங்கரை முதல்நாளிரவு துப்பரவாக்கி வைப்போம்.