Skip to main content

Posts

Showing posts with the label இசை

“கொச்சின் மாடப்புறா!”

1998ம் ஆண்டு தீபாவளி. காலையிலேயே பொதிகையில் புதுப்பட பாடல்கள் நிகழ்ச்சி ஆரம்பித்தது. அம்மாவிடம் ஏச்சு வாங்கிக்கொண்டு டிவி முன் உட்கார்ந்த போது,  முதல் பாடல் ஒரு சுலோகத்துடன் ஆரம்பித்து, “பச்சை மா மலை மேனி” என்று தொடர, தேவாவுக்கே உரிய வயலின் ரீங்காரத்துடன் கோரஸ் சஞ்சாரிக்க, ஹரிஹரன் கணீரென்று பாடத்தொடங்கினார். எனக்கோ ஒன்றுமே புரியவில்லை. ஒரு வித பரவசத்தில் பார்த்துக்கொண்டு இருந்ததில் எந்த படப்பாடல் என்றும் கவனிக்கவில்லை. பாடல் முடிந்த கையோடு, மிகுதி நிகழ்ச்சியை பார்க்காமல், நண்பன் பார்த்தியிடம் ஓடிப்போய் என்ன படம் என்று விசாரித்தபோது தான் தெரிந்தது அது "உன்னுடன்” என்று. வானம் தரையில் வந்து ! இந்த பாடலில், ஹரிகரனை ஷேவாக் மாதிரி அடித்து ஆட தேவா அனுமதித்திருப்பதாக தெரிகிறது. தலை சும்மா பின்னி எடுத்து இருப்பார். இன்றைக்கு வரைக்கும் யாரும் இந்த பாடலை மேடையிலோ வேறு நிகழ்ச்சியிலோ நன்றாக பாடியதாய் தெரியவில்லை. அத்தனை கடினம் இது. ஒருமுறை ஹரிஹரன் கூட மேடையில் பாடி சொதப்பி இருப்பார்! வைரமுத்துவுக்கு மெட்டை கேட்டவுடனேயே இது ஒரு கோகினூர் என்று தெரிந்து விட்டது. ஆரம்ப வரிகளே அம

“நிலவும் மலரும் பாடுது”

2001ம் ஆண்டு கொழும்பில் ஒருமுறை சக்தி FM  இன் “அழைத்து வந்த அறிவிப்பாளர்” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் நண்பன் கஜன் மூலமாக கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் நான் இரண்டாவதாக ஒளிபரப்பிய பாடல் இவருடைய பாடல். இவரை அறிமுகம் செய்யும்போது ஒரு கேள்வி கேட்டிருந்தேன். இந்த பாடலை பாடியவரை ஒரு இசையமைப்பாளர் என்று கூறுவீர்களா? இல்லை பாடகர் என்று கூறுவீர்களா? இரண்டு துறைகளையும் ஒரே விகிதத்தில் கலக்கியவர். இளையராஜா, ரகுமானை எடுத்துக்கொண்டால் அவர்கள் முதலில் கம்போசர்ஸ், பின்னர் தான் பாடகர்கள். ஹரிஹரன், SPB,  ஷங்கர் மகாதேவனை எடுத்துக்கொண்டால் அவர்கள் முதலில் பாடகர்கள். பின்னர் தான் கம்போசெர்ஸ். ரமேஷ் விநாயகம் கூட முதலில் ஒரு இசையமைப்பாளர் தான். ஆனால் இந்த இராட்ச்சனை அப்படி ஒரு வட்டத்திற்குள் அடக்கிவிட முடியாது. கம்போசிங், பாடல்கள் என்று ஒரு பத்து வருஷங்கள் திரையிசையை கலக்கியவர். ஆம், இந்த வாரம்  “உ.. ஊ.. ம ப த ப மா” வில் ஐம்பதுகளில் திரையிசை துறையில், கம்போசிங்கிலும், பாடுவதிலும் தனக்கென மூன்றாம் தலைமுறை ரசிகர்களை கூட உருவாக்கிய திரு A M ராஜா அவர்கள் பாடிய, இசையமைத்த பாடல்களின் தொக

தேடித்தேடி தேய்ந்தேனே!!

சிறுவயதில் உங்களுக்கு அந்த பெண்ணை பிடித்திருக்கும்! ஒரு பதினைந்து வயது என்று வையுங்கள். அப்போது அவளுக்கு தெரியாமலேயே அவளை நோட்டம் விட்டிருப்பீர்கள். கணக்கே எடுத்திருக்கமாட்டாள்.  அவள் போகும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து, அத்தனை இளையராஜா டூயட்களையும் அவளோடு வயற்காட்டிலோ இல்லை இண்டோர் செட்டிலோ பாடிப்பார்த்து இருப்பீர்கள். ஒரு மழைக்கால இரவில் “புதுவெள்ளை மழை” பாட்டை ரேடியோவில் போட்டுவிட்டு அவளின் கண்கள் இரண்டையும் உங்கள் கைகளால் பொத்திக்கொண்டு கூட்டிச்சென்று காஷ்மீர் பனிமலைகள் காட்டி இருப்பீர்கள். அவளும் சொக்கிப்போய் சுத்தி சுத்தி பார்க்க, கண்ணாடி சில்லுகளாய் இசை சிதறி கிறங்கடிக்கும். ஆனால் நிஜத்தில் அவள் நேரில் வந்தால் அப்போது தான் பனைமரத்தில் எத்தனை நொங்குகள் இருக்கின்றன என்று எண்ணியிருப்பீர்கள். சரி, காலம் ஓடிவிட்டது, இப்போது வளர்ந்து பெரியவன் ஆகி விட்டீர்கள். ஒருநாள் திடீரென்று அவள் எதிரே வந்து நிற்கிறாள். ஒரு உறவுக்கார திருமணம் என்று வைய்யுங்களேன்! நீங்கள் நினைத்த கலரிலேயே சேலை, நீங்கள் நினைத்ததுபோலவே சிரிக்கிறாள். உங்களை ஞாபகம் வைத்து பேசுகிறாள்.  ரோஜா மதுபாலா போல “சிறு பறவை நீய

The Spirit Of Music

1992ம் ஆண்டு, ஒருநாள் எங்கள் நண்பி யசோ அக்கா வேக வேகமாக வீட்டுக்குள் நுழைந்தார். ஒருவித படபடப்பும் பரவசமும் அவர் முகத்தில்,  என்ன என்று எல்லோரும் பார்த்தோம். ரோஜாவின் இசை இப்போது தான் கேட்டேன். ஆச்சரியம் தாங்க முடியவில்லை, சொல்லுவதற்கு வந்தேன் என்று தன்னுடைய walkman ஐ எடுத்து headphone ஐ ஒவ்வொருவர் காதுகளிலும் மாறி மாறி மாட்டினார். பரவசம் எம்மையும் கொஞ்சம் கொஞ்சமாக தொற்றத் தொடங்கியது. சின்ன சின்ன ஆசையின் சின்ன சின்ன சத்தங்கள் என்னென்னவோ செய்தது. இறுதிப்பல்லவியில் வரும் ஒவ்வொரு இறுதி note இலும் ஒவ்வொரு ஜாலம் காட்டினார். "காதல் ரோஜாவே" காதலிக்கச்சொல்ல,  புதுவெள்ளை மழை யாழ்ப்பாணத்தையே குளிரவைக்க ஒரு மாலை நேரத்தில், ரோஜாவின் மயக்க வைக்கும் பின்னணி இசை A R ரகுமான் பிறந்தாரே! சென்ற ஏப்ரலில் அவருடைய உத்தியோகபூர்வ சுயசரிதை “The Spirit Of Music” வெளிவருகிறது என அறிந்து சிங்கப்பூர் முஸ்தபா கடைக்கு போன் மேல் போன் போட்டும் வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. எனக்கோ இருப்புக்கொள்ளவில்லை. தலைவர் ஒவ்வொரு பாடலையும் எப்படி உருவாக்கினார், அதற்றுக்குப்பின்னால் இருந்த

சீனி கம்

“ஜானே டோ னா, ஜானே ஜானே” என்று ஸ்ரேயா கோஷல் கொஞ்சும் போது கண்ணெல்லாம் ஒரு விதமாக சொருகி இதழ்களின் ஓரத்திலே ஒரு புன்சிரிப்பு ஒவ்வொருமுறையும் வரும்போது,  மெல்பேர்ன் புகைவண்டியின் முன் இருக்கையில் இருப்பவர் ஒரு மாதிரியாக என்னைப்பார்ப்பது வழக்கம். முற்பிறப்பில் செய்த புண்ணியத்தில் என்றாவது ஒருநாள்  அவள் முன்னாலே வந்து உட்கார்ந்தால் இந்த பாடலை full volume இல் வைத்து கேட்கவேண்டும். இந்த பாடலை கேட்கும் இவனை பிடிக்காத பெண்கள் இருப்பார்களா என்று தெரியவில்லை. இருந்தால் இருந்து விட்டுப்போகட்டும். யாருக்கு வேண்டும்? தமிழில் விழியிலே மணி விழியிலே நான் ஸ்ரேயா கோஷலை காதலிக்க ஆரம்பித்தது இந்த படத்தில் இருந்து தான். குரலிலே தேன் வடியும் என்பார்கள். ஆனால் தேன் எல்லாம் அத்தனை இனிப்பு கிடையாது. ச்சோ ஸ்வீட் என்று சுஜாதா சொல்லும் பெண் ஸ்ரேயா இல்லை, அவளுடைய குரல் என்று சொன்னால் ஒருவரும் நம்பப்போவதில்லை தான். சான்சே இல்லை. இளையராஜாவுக்கு நீண்ட நாட்களுக்குப்பிறகு சேப்பாக்கம் மாதிரி ஒரு பாட்டிங் பிட்ச்.  ஹாண்ட்சம் லுக்குடன் அமிதாப், லண்டனில் ஒரு வசந்தகாலத்து காதல் கதை. 34 வயது தபுவுடன் காதல்