Skip to main content

Posts

Showing posts with the label சினிமா

விஸ்வரூபம்!

  “அண்ணே இண்டைக்கு நிச்சயமா ஓடுது, டிக்கட் புக் பண்ணீட்டேன்” என்று கேதா மதியமே சொன்னபோது நம்பமுடியவில்லை. இறுதிநேரத்தில் ஏதாவது முன்னேற்ற குழுவோ, முக்கா குழுவோ தடையுத்தரவு வாங்கிவிடுமோ என்ற அச்சம் இருந்தது. பெடரர் முரே செமி பைனல் வேறு. பெடரரா கமலா என்று ஒரு கணம் குழப்பம். “உன்னை பாராமலே.. நான்” என்று சங்கர் மகாதேவனின் ஆலாப் மனதுக்குள் இழுக்க, கமல் என்று முடிவுசெய்தாயிற்று. மாலை ஆறுமணி ஷோ. ஆஸியில் முதல் ஷோ!

Life of Pi - என் குளத்தில் எறியப்பட்ட பாறாங்கல்!

  விலங்கும் மனத்தால், விமலா உனக்கு கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே! -- மாணிக்கவாசகர் “கண்ணே கண் மணியே, கண்ணுறங்காய் பூவே” என்று ஜெயஸ்ரீ தன் மடியில் எங்கள் தலையை வைத்து 3D இல் வருடுவதோடு படம் ஆரம்பிக்கிறது. பாண்டிச்சேரியில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்து வாழும் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்று. அதை அவர் ஒரு எழுத்தாளருக்கு சொல்லுவதான கதை.

என் கொல்லைப்புறத்து காதலிகள் : சூப்பர் ஸ்டார்!

  கையில் கமரா. பிங்க் கலர். மேலே ஒரு பட்டன் இருக்கும். அமத்தினால் “பிய்ச் பிய்ச்” என்று தண்ணி சீரும்! கிணற்றடிக்கு இரண்டு படிக்கட்டுகள். ஒரு எட்டு எட்டினால் தோய்க்கிற கல்லு. மூன்றடி உயரம். அப்படியே ஒரு கை ஊன்றி டைமிங்குடன் ஜம்ப் பண்ணி நிற்கவேண்டும். அக்கா குசினிக்குள் இருந்து “டேய் தோய்க்கிற கல்லு, வழுக்கும், விழுந்து கிழுந்து எதையும் தேடிக்கொண்டு வராம, கால கைய வைச்சுக்கொண்டு சும்மா இரு!”. போன வருஷம் நல்லூரில் எட்டாம் திருவிழாவுக்கு வாங்கிய நீலக்கலர் ஐஞ்சு ரூபாய் கூலிங் கிளாஸ். அப்பிடியே ஒரு சுழற்று சுழற்றிக்கொண்டே போட்டுக்கொண்டு, ஒரு காலை சின்னதாக மடித்து மற்றக்காலில் ஊன்றிக்கொண்டு வானத்தை ஒரு ஆங்கிளில் பார்த்துக்கொண்டே இருக்க பாட்டு ஆரம்பிக்கும்! சிலு சிலுவென குளிரடிக்குது அடிக்குது, சிறு அரும்புகள் மலர் வெடிக்குது வெடிக்குது வனம் விட்டு வனம் வந்து மரங்கொத்தி பறவைகள் மனம் விட்டு சிரிக்கின்றதே! இப்போது தலைவர் கீழே குனிந்து மண்ணை மக்களை பார்க்கிறார். அம்மா தோயச்சு ஊத்தின சவர்க்கார தண்ணி பூங்கன்றுக்கு போகாதவாறு வேறு இடத்துக்கு பாத்தி மாற்றப்பட்டு இருந்தது. வெள்ளை நுரை தள்ளியது. இடை

கவிதையும் வேண்டாம் கன்சிகாவும் வேண்டாம் :(

  சென்ற ஞாயிறு மெல்பேர்னில் பொங்கல் விழா.  கேஸி மன்றம் நடத்தியது. மன்றத்து தலைவர் call பண்ணினார். “ஹலோ மேகலாவா” “சாரி டீ இன்னும் வரல” “ஆ நான் அப்புறமா பேசறேன்” “கொய்யால, நீ எப்ப பேசினாலும் மேகலா இருக்கமாட்டா!!, தெரியும்டா ஒங்கள பத்தி!” “இல்ல ஒரு கவியரங்கம், மேகலா தான் கவித எழுதுவாளே அதான்” “ஓ சாரி , ஹன்சிகாவ ட்ரை பண்ணுங்களேன்” “ஓ ஓகே, ட்ரை பண்ணுறன், சாரி போர் த டிஸ்டர்பான்ஸ்” தலைவர் போனை வைத்துவிட, இந்த வாரம் யாரு கொல்லைப்புறத்து காதலி என்று ஐ ஆம் திங்கிங், போன் எகைன்! “ஜேகே .. நீயும் எழுதுவ தானே” “எழுதினான், பட் சரி வரல!” “ஆனா பதிவு சிலது நல்லா இருக்கே!” “ஓ அதுவா, அது சும்மா அள்ளுது, கொலை செய்யுது, அபாரம் என்று ஒரு சில வாரத்தைகள போட்டு எழுதுறது” “கவியரங்கத்துக்கு ஆறுபேரு தேவை. ஒரு கை குறையுது! அப்பிடியே ஒரு பதிவ கவிதையா எழுதி வாசிக்கிறயா?” “What the …  கவிதை என்றாலே நான் நாளு நாள் டாய்லட் போவேன். அவ்வளவு அலெர்ஜி” “இல்ல உன்னோட கேதா, உதயா கௌரி எல்லாம் கவிஞர்கள் தானே” “நான் எப்பவாச்சும் அவங்க கவிஞர் எண்டு சொன்னேனா?” “இல்ல, அவங்கட பதிவ பார்த்தா அப்புடித்தான் தெரியுது”

என் கொல்லைப்புறத்து காதலிகள் : மணிரத்னம்

ஆரம்பம் ஒரு சின்ன ஒளிப்புள்ளியில் இருந்து ஆரம்பிக்கிறது. பின்னணி இசையின் எலெக்ட்ரிக் பேஸ் கிட்டார் பிட்ச் திகிலூட்டுகிறது. அப்புறம் சேசிங். ஐந்து நிமிடத்தில் காஷ்மீரிய போராளி வாசிம்கான் சுற்றி வளைக்கப்படுகிறான். கட். அடுத்த காட்சி சுந்தரபாண்டியபுரத்தில். சின்ன சின்ன ஆசை பாடல். 

மணிரத்னம் எழுதிய கவிதை!

தளபதி திரைப்படத்தின் இந்த தாய் மகன் பிரிவுத்துயர் காட்சி எல்லா இணையங்களிலும் மற்றும் Facebook, Twitter தளங்களிலும் தமிழ் ரசிகர்களால் பிரித்து மேயப்பட்டுவிட்டது. தாயும் மகனும் அந்த புகைவண்டி சத்தம் கேட்கும்போது திரும்பி பார்க்கையிலும், அதன் பின்னர் மீண்டும் திரும்பிய பின் ரஜனி காட்டும் முகபாவனையும்,  தலைவர் இளையராஜாவும் இணைந்து நம்மை உண்டு இல்லை ஆக்கிவிடுவார்கள், நாமெல்லாம் அப்படியே கனத்து போய் அமர்ந்து இருப்போம் .. எந்த சலனமும் இல்லாமல் .. அந்த காட்சியை மீண்டும் பாரத்து இரசியுங்கள்! But There's One More Thing. இந்த காட்சியின் 0:44 --- 0:51 நேரத்து காட்சியை மீண்டும் பாருங்கள். தாய் மெதுவாக திரும்பி புகைவண்டி செல்லும் திசை பார்க்கும் தருணத்தில் கேமரா மகன் பக்கம் திரும்பும். அங்கே மகன் ஏற்கனவே, அதாவது தாயுக்கும் முன்னமேயே அந்த திசை நோக்கி ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருப்பான்.    தாய் தன் மகனை பிரிந்து ஏங்கும் தவிப்பை விட, தாயில்லாமல், வளர்ந்து பட்ட வேதனையும் ஏக்கமும் மகனுக்கு அதிகம், பிரிவுத்துயர் தாயை விட அவனுக்கு தான் இன்னும் அதிகம் என்பதை இயக்குனர் அங்கே காட்டியிருப்பார்.