அரைப்பு “அடி அரைச்சு அரைச்சுக் குழைச்சு குழைச்சுத் தடவத் தடவ மணக்குஞ் சந்தனமே...!” மகராசன்; தொண்ணூறுகளில் வெளியான ஒரு மரணவதைத் திரைப்படம். கமல் நட்புக்காக நடித்திருப்பார். அதில் வெளிவந்த சங்க இலக்கியப் பாடல்தான் இந்த "அரைச்சு அரைச்சு". பாடலின் வரிகள் படான் என்றாலும் (உ.தா சின்ன சேலம் மாம்பழமே, மச்சான் தட்டுற மத்தளமே), வழமைபோல ராஜாவின் இசை நுணுக்கமானது. “சந்தனமே..”யில் விழும் சங்கதியை ரசிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். இதற்கு மேல் டீடெயிலாக எழுத இதுவொன்றும் இசைப்பதிவு கிடையாது. நிற்க. “அரைச்சு அரைச்சு” பாடல், வெளிவந்த காலத்தில் பயங்கரப் பேமஸ். யாழ்ப்பாணத்தில் சரிந்து கிடந்திருந்த நியூமார்க்கட் வழியாக நடந்து செல்கையில் குறைந்தது இரண்டு புடவைக்கடை, ஒரு தேத்தண்ணிக்கடையிலாவது இதனைக் கேட்கமுடியும். இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் பட்சத்தில் வேம்படிச் சந்தியிலிருந்து கஸ்தூரியார் ரோட்டுக்குச் சைக்கிள் மிதிப்பதற்குள் முழுப்பாடலையும் கேட்டு ரசிக்கலாம். எல்லாக்கடைகளிலும் ஒரே வானொலி. ஒரே பாடல். பயணவழி முழுதும் தொடர்ச்சியாகப் பாடல் அறுபடாமல் ஒலித்துக்கொண்டேயிருக்கும