பதின்மத்தில் எப்போதும் என்னோடு நெருங்கிய தோழிகளாக பயணித்த இருவர் "என் கொல்லைப்புறத்துக் காதலிகளில்" வருகிறார்கள். ஒருவர் "ஏகன் அநேகன்" இளையராஜா. அடுத்தது "என் மேல் விழுந்த மழைத்துளியே" ஏ. ஆர். ரகுமான். இசையை ரசிக்கவைத்தவர்கள். அதேபோல தோழர்கள் "இருவர்". அகிலன், கஜன். அந்த மூன்று அத்தியாயங்களையும் எழுதும்போது கிடைத்த சந்தோசம் கொஞ்ச நஞ்சமில்லை. எல்லாப்பாடல்களையும்கேட்டுக்கொண்டே, ரசித்து ரசித்து எழுதிய தருணங்கள், எழுத்துப் பிழை திருத்த உட்கார்ந்தால் கூட, திரும்பவும் புதிதாக ஒரு பந்தி முளைத்துவிடும். புத்தக அறிமுகத்துக்கென்று ஒரு நிகழ்ச்சி செய்வோம் என்று முடிவெடுத்தகணம், அகிலனையும் கஜனையும் ஒரே மேடையில் ஏற்றி அழகு பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் கஜனை சிங்கப்பூரிலிருந்து அழைப்பதுமுதல், அப்படிப்பட்ட மேடைக்குரிய அரங்கைத் தயார்படுத்துவது என எல்லாமே என் சக்திக்கு மீறிய விஷயங்கள் என்று விளங்கியது. மெதுவாக ஜூட் அண்ணாவிடம் இதைப்பற்றிக் கேட்டேன். சென். ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர் சங்கத்துக்கூடாக ஒரு கை கொடுப்பதாக சொன்னார். இன்னொரு கை வ