Skip to main content

Posts

பூப் புனிதக் கொலைகள் : பாகம் 1

செல்வி திரிக்‌ஷா சரவணின் பூப்புனித நீராட்டு விழா தாஜ்மஹால் மண்டபத்தில் தடபுடலாக நிகழ்ந்துகொண்டிருந்தது. வாசலில் பாவை விளக்குகள்போல அலங்கரித்து நின்ற இளம்பெண்கள், வந்தவர்களைக் கற்கண்டு கொடுத்தும் பன்னீர் தெளித்தும் வரவேற்றுக்கொண்டிருந்தார்கள். மின்வெட்டு நேரமாகையால் வாசலுக்கருகே ஒரு ஜெனரேட்டர் இரைந்துகொண்டிருந்தது. மண்டபத்தின் உள்ளே குளிரூட்டி நிறுத்தப்பட்டு வலுக்குறைந்த மின்சாரத்தில் மின் குமிழ்களும் விசிறிகளும் தூங்கி வழிந்தன. வந்தவர்களின் பலவித பெர்பியூமுகளுடன் அவர்களின் வியர்வையும் கலந்து புதிதான ஒரு நாற்றத்துடன் உடல்கள் எல்லாம் கசகசத்துக்கொண்டிருந்தன. நிறையப் பட்டுவேட்டிகளும் காஞ்சிபுரங்களும் தாவணிகளும் குறுக்கும் மறுக்கும் ஓடித்திரிந்தன. பிரதான மேடைக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த சிறு மேடையில் நாதஸ்வரக் கோஷ்டியினரின் கச்சேரி இடம்பெற்றுக்கொண்டிருந்தது. ஆரம்பத்தில் இரண்டு பக்திப் பாடல்களை இசைத்துவிட்டு இப்போது கண்ணான கண்ணேயும், கண்டாங்கி கண்டாங்கியும் மூத்த வித்துவான் வாசிக்க முயன்றுகொண்டிருந்தார். அருகே அமர்ந்திருந்த அவருடைய பத்து வயது ஒப்பு, பால்போச்சியைச் சூப்புவதுபோல பீப்பி முனையை

சமாதானத்தின் கதை குறித்து நடராஜா முரளிதரன்

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே நாளில் 110 பக்கங்கள் வரை ஒரே நூலைப் படித்திருக்கின்றேன். “சமாதானத்தின் கதை" - தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜெயக்குமரன் சந்திரசேகரம் என்ற ஜேகே எழுதிய சிறுகதைத் தொகுப்பு. பதினொரு சிறுகதைகள். 224 பக்கங்கள். ஆதிரை வெளியீடு, புத்தகத்தைப் பதிப்பித்திருக்கிறது. இந்த நூலிலுள்ள 'கனகரத்தினம் மாஸ்ரர்' மற்றும் 'சமாதானத்தின் கதை' ஆகிய கதைகள் எனக்கு மிகவும் நன்றாகப் பிடித்திருந்தன. படலை.கொம் என்ற இணையத்தளத்தில் எழுதிவரும் ஜே.கே, இந்த நூலின் மூலம் ஈழத்துச் சிறுகதையுலகின் சிறந்த கதைசொல்லிகளில் ஒருவராகத் தன்னை ஆழமாகப் பதித்துள்ளார்.

தர்மசீலன்

ஆறாம் ஆண்டில்தான் தர்மசீலனை நான் முதன்முதலில் சந்திக்கிறேன். அனுமதிப் பரீட்சையினூடாக அந்த ஆண்டு தெரிவு செய்யப்பட்ட முப்பத்தாறு பேரில் நாங்களும் உள்ளடக்கம். அச்சுவேலி ஆரம்பப் பாடசாலையிலிருந்து அவன் வந்திருக்கவேண்டும். அப்போது வகுப்புக்கு வருகின்ற ஒவ்வொரு ஆசிரியருக்கும் எங்கள் பெயர், எந்தப் பாடசாலையிலிருந்து வந்திருக்கிறோம் என்று அனைவருமே ஒப்பிக்கவேண்டுமென்பதால் அவனது ஆரம்பப் பாடசாலையின் பெயர் சன்னமாக இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது.

வாணி ஜெயராம்

  “எது சுகம் சுகம் அது, வேண்டும் வேண்டும்” என்று அந்தப்பாட்டு ஆரம்பிக்கும். வழமைபோல கொஞ்சம் உயர் சுருதிதான். இந்தப்பாட்டு இங்கே ஆரம்பித்தால் எங்கே போய் முடியுமோ என்று நமக்கெல்லாம் கவலை வரலாம். “கூடும் நேரம், யுகங்கள் கணங்கள் ஆகும், நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்கள் ஆகும்” என்று மேலே போய் “வா, வா, மீண்டும் மீண்டும் தாலாட்டு” என்று பல்லவியே முதல் மாடிக்குச் சென்றுதான் ஓயும். ஆனால் அந்தப்பெடி ரகுமான் பல்லவியில் செய்தது போதாது என்று சரணத்தைத் தூக்கி அடுத்த மாடியில ஏத்திவிட்டிருக்கும். “சாம வேதம் நீ ஓது, வாடைத்தீயைத் தூவும்போது” என்று சொல்லி கூரையில் ஏறிவிட்டு, இதுக்குமேலே போனால் பேதம் என்று “வா இனி தாங்காது தாங்காது, கண்ணோரம் இந்நேரம் செந்தூரம் உண்டாக” என்று பெடி மீண்டும் பாட்டைக்கொண்டுவந்து பல்லவியில் இணைத்துவிடும். இந்தக் கொம்பசிசனை அதிகம் பேஸ் உள்ள ஒரு குரல்காரி பாடமுடியாது. சித்ராவினுடையது போன்ற மென்மையான குரல் வேண்டும், ஆனால் ஹை பிட்சில் குரல் கம்பிமாதிரி நிக்கோணும். அதுக்கு இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒருவர் சுவர்ணலதா. அடுத்தது வாணி ஜெயராம்.

சின்னான்

“இந்த நாட்டில் இனப்பிரச்சனை என்ற ஒன்றே கிடையாது, தமிழர்களுக்கு இந்த நாட்டில் சகல உரிமைகளும் உண்டு, எண்பத்து மூன்று இனப் படுகொலைபோன்று ஆரம்பக்காலங்களில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள் எல்லாம் அரசாங்கங்களால் நிகழ்த்தப்பட்டது. போர் ஆரம்பித்த பின்னர் நாட்டில் நிகழ்ந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் தீவிரவாதமே. இறுதிப்போரில் இனப் படுகொலையே நிகழவில்லை. இப்போது நாட்டில் தீவிரவாதம் ஒழிந்துவிட்டதால் தமிழரின் பிரச்சனையும் தீர்ந்துவிட்டது. வெள்ளவத்தையில் தமிழ் மக்கள் சகல உரிமைகளோடும் வாழவில்லையா? தேவையில்லாமல் இந்தப் புலம்பெயர் புலிகள்தான் இனவாதத்தைத் தூண்டிக்கொண்டிருக்கிறார்கள்”

பொங்கல் நிகழ்வுகள்

அண்மைக்கால பொங்கல் நிகழ்வுகளில் அவதானித்த சில விசயங்கள். பொங்கல் அரசியலாக்கப்பட்டுவருகிறது. இது தமிழர்களுக்கான நிகழ்வு, இது ஒரு மத நிகழ்வு அல்ல என்ற வாதம் வலியுறுத்தப்படுகிறது. எனக்கு மிகவும் நெருக்கமான பாடும்மீன் சிறிஸ்கந்தராசா அண்ணா இதுபற்றி விரிவாக எழுதி பொங்கலுக்கு மத அடையாளம் சூட்டுவதை கடுமையாக எதிர்த்திருந்தார். எனக்கு இந்த விசயத்தில் சின்னக் கருத்துவேறுபாடு உண்டு. பொங்கல் ஒரு மண் சார்ந்த நிகழ்வு. அது ஒரு மதத்தின் போதனைகளிலிருந்து உருவானதல்ல. வேதங்களோ விவிலியமோ பொங்கலை நமக்கு அறிமுகம் செய்யவில்லை. உண்மைதான். மாற்றுக்கருத்து இல்லை. நாம் உழுதுண்டு வாழ்ந்த மண்ணில் இயற்கைக்கு உழவரும் மற்றவரும் நன்றி செலுத்துமுகமாகக் கொண்டாடப்படும் நிகழ்வு இது. அந்த நன்றி செலுத்தும் நிகழ்வு அவரவர் வாழ்வியலை அடிப்படையாகக்கொண்டு அமைந்திருக்கும். இயற்கையின் இருப்பான சூரியனுக்கு நன்றி செலுத்தி அதற்குப் புற்கை படைக்கும் புள்ளியிலேயே இயற்கையை இறைக்கு நாம் ஒப்பிட ஆரம்பித்துவிடுகிறோம். அந்த நிலையில் இயற்கையோடு சேர்த்து நாம் நம்பும் ஏனைய இறைகளுக்கும் துதி பாடுவதில் தவறு இல்லை என்றே படுகிறது. அது வீட்டின் கொல்ல

ஶ்ரீரங்கத்து தேவதைகள்

காலையிலிருந்து “ஶ்ரீரங்கத்து தேவதைகள்” வாசித்துக்கொண்டிருக்கிறேன். முப்பது வருடங்களுக்கு முன்னர் வாசித்த புத்தகம். இப்போது மீண்டும் வாசிக்கையில் கதைகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன் என்று தெரிகிறது. ஆனால் அவற்றின் ஆதார விசயங்களை மறக்கவில்லை. இச்சிறுகதைகளின் மூலப் பாத்திரமான ரங்கராஜனின் வயதுதான் அப்போது எனக்கும். கிட்டத்தட்ட அந்தப் பதின்மத்துச் சிறுவனின் குணமும்தான் எனக்கு. எல்லாவற்றிலும் கூர்ந்த அவதானிப்பு இருக்கும். ஆனால் எதனையும் முன்னின்று செய்வதில்லை. என் கொல்லைப்புறத்துக் காதலிகளில் வருகின்ற பல கதைகளில் வரும் குமரனிடம் ஶ்ரீரங்கத்து தேவதைகளின் ரங்கராஜன் எட்டிப்பார்ப்பது தற்செயல் அல்ல. கடந்த சில வருடங்களாக தமிழில் வாசித்தவை எல்லாமே மண்டையைக் காயவைக்கும் கதைகளே. ஆங்கிலத்தில் அப்படியல்ல. ஆங்கில இலக்கியத்தில் சமகாலத்தில் மிகவும் கொண்டாடப்படும் கதைகள்கூட எளிமையான வடிவமைப்பையே கொண்டிருப்பவை. மண்டைகாய வைக்கும் கதைகள்வீது விமர்சனம் ஏதும் கிடையாது. கதைக்குத் தேவை. எழுதுகிறார்கள். ஆனால் அதுதான் இலக்கியம் என்றொரு மாயை பொல்லாதது. மனிதர்களுடைய நுண்ணுணர்வுகளை அற்புதமாக விவரிக்கக்கூடிய அலிஸ் மன்ற