Skip to main content

Posts

Showing posts from May, 2015

தீரா உலா

ஒரு திரைப்படத்தை பார்த்து முடித்தபின்னர், கிளைமக்ஸுக்கு பிறகு என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கும் கிறுக்கு குணம் எல்லோருக்கும் இருந்திருக்கும். காதல்கோட்டை தேவயானியும் அஜித்தும் தாங்கள் தவறவிட்ட சந்திப்புக்களைப்பற்றி எத்தனைதடவை பேசியிருக்கக்கூடும்? யோசித்தால் சுவாரசியமாக இருக்கும். “காதல் கவிதை” படத்தில் கமலிக்கும் சூரியாவுக்கும் கல்யாணம் என்று சின்னி ஜெயந்த் சொல்லுகின்ற காட்சி ஒன்றுகூட இருக்கிறது. அலைகள் ஓய்வதில்லையில் கார்த்திக்கும் ராதாவும் ஓடிப்போய் சந்தோசமாக குடும்பம் நடத்தியிருக்கமுடியுமா? பள்ளிக்கூட மாணவர்கள். உழைப்பில்லை. பணக்கார வீட்டுப்பெண் ராதாவால் சமாளித்திருக்கமுடியுமா? அலைகள் ஓய்வதில்லை மீதிப்பாகம் “காதல்” படமாகவே மாறியிருக்கும் சாத்தியம் அதிகம். பாவம் அந்தப்பெடி.

நெடுங்குருதி

  மழைக்கு பிந்திய கோவிலின் பிரகார வெளியில் மரங்கள் நீர்கோர்த்துக்கொண்டிருந்தன. பூக்கள் உதிர்வதைப்போல மழைத்துளிகள் உதிர்ந்துகொண்டேயிருந்தன.  திருமால் ஈரக்கல்லை புரட்டி அதனடியில் மண்புழு  ஒளிந்துகொண்டிருக்கிறதா என்று தேடிப்பார்த்தான். மண்ணைத் துளைத்துக்கொண்டு ஒரு புழு எட்டிப்பார்த்தது. அவன் அதோடு பேச விரும்பியவனைப்போல கேட்டான். “மண்ணு ருசியாவா இருக்கு. அதைப்போயி திங்குறே?” மண்புழு சப்தமில்லாமல் ஊர்ந்து திரும்பியது. அவன் தன விரல்களால் மண்புழுவை தொட்டுப் பார்த்தான். அது உடலை நெளித்தது. “உன் வீடு எங்கேயிருக்கிறது … அங்கே மழை பெஞ்சதா?” மண்புழு மண்ணை உமிழ்ந்தபடி சுருண்டது. அவன் ஆத்திரத்துடன் சொன்னான். “பதில் சொல்றயா … இல்லை மண்டையைத் திருகிப் போடணுமா?” மண்புழு எதையும் பொருட்படுத்தாதது போல ஊர்ந்து போகத்துவங்கியது. ஆத்திரத்துடன் மண் புழுவைக் கையில் எடுத்துக்கொண்டுபோய் கோவில் கிணற்றில் போட்டுவிட்டு வந்தான். அதே இடத்தில் இன்னொரு மண்புழு ஊர்ந்துகொண்டிருந்தது. பயத்துடன் அதினிடம் கேட்டான். “உனக்கு நீஞ்சத்  தெரியுமா? எப்படி மேலே ஏறி வந்தே?”

முதற் துளி

கொழுத்தும் வெயில். வியர்வை ஈரத்தில் நனையும் இரவு. வெறிச்சோடிய படுக்கையறைகள். ஓலை கிழிந்த விசிறிகள். ஓயாத இலையான்கள். உப்பேறிய கிணறுகள். முள்ளாய்க் குத்தும் துவாலைகள். கானல் நீரை துரத்தும். உதடு வெடித்த சிறுவர்கள். ஈரம் தேடும் எறும்புகள். குட்டை நாய்கள். கோழிச்செட்டைகள். மீன் முள்ளுகள். மேற்சட்டையில்லா ஆண்கள். குறுக்குக்கட்டு வறண்ட குளத்து மதகுகள். புழுதிவாரிய கேசங்கள். கணவன் மனைவி சண்டைகள். நாற்றமடிக்கும் கொல்லைப்புறங்கள். நிழல் தேடும் குடை மரங்கள். சூடு மிதிக்கும் கோயில் புறாக்கள். காடு ஏகிய கடவுள்கள். கோடை கடைநாளில் விழுந்தது முதற் துளி. குளிர்ந்தது ஊர். .

நாளை காலை நேரில் வருவாளா?

  தொண்ணூறுகள் காதல் படங்களில் காலம். முன்னரும் பின்னருமான காலப்பகுதியிலும் காதல் படங்கள வந்தனதான். ஆனால் தொண்ணூறுகளில் காதலை மட்டுமே மையப்படுத்தி, தலைப்பிலிருந்து எண்ட் கார்ட் வரை காதல் காதல் என்று இயக்குனர்கள் உருகினார்கள். எல்லாமே காதல் கோட்டை என்ற ஒரு படம் செய்த அநியாயம். நமக்குவேறு பதின்ம வயதா; சுவலட்சுமி, தேவயாணி, கௌசல்யா என்று வரிசையாக சேலையிலேயே கவுத்தார்கள். பிறகு சிம்ரன் பாஸ்கட் போல் விளையாடிக் கவுத்தார். ரம்பா மின் விசிறிக்கு முன்னாலே நின்றால், கீர்த்தியின் வாயிலிருந்த இலையான்கூட காத்துக்கும் பறக்காமல் ஆவெண்டு பார்க்கும். எல்லாமே காதல் படங்கள் என்பதால், இசையிலும் நிறைய காதல் இருந்தது. தேவாவின் பொற்காலம் அது. அப்போது ராஜா, ரகுமான், வித்யாசாகர் போன்ற இசையமைப்பாளர்கள் போட்ட மெலடிகளின் எண்ணிக்கையை விட தேவா அதிகமாகவே மெலடிப்பாடல்களை தந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. அதுவும் மரண மொக்கைப்படங்களுக்கெல்லாம் அருமையான பாடல்களை கொடுத்திருப்பார். அதற்காகவே சந்திரன் மாஸ்டரிடம் போய்த்தவம் கிடந்த காலங்கள் ஞாபகம் வருகின்றன. இனியவளே என்று ஒரு படம். பாடல்கள் அத்தனையும் செம. அன்பே டயானா என்ற

அன்புள்ள கம்பவாரிதி ஐயாவுக்கு

  கம்பன் விழா நிகழ்வுகள் இனிதே நிறைவேறியிருக்கும் என்று நம்புகிறேன். விழாவிலே கலந்துகொள்ளமுடியாவிட்டாலும் விழா நாட்களை நானும் கம்பனோடே கழித்தேன். இம்முறை விழா நாட்களில் மிகச்சிரத்தை எடுத்து படிக்க முயன்ற பாடல்கள் வாலி வதை சார்ந்தவை. எனக்கு நீங்கள் அடிக்கடி சொல்லுவதொன்று ஞாபகம் வருகிறது. இராமனது அம்பு தோற்ற ஒரே இடம் வாலிவதை. “செம்மை சேர் இராம நாமம்” எனும் இடத்தில் கம்பன் கூட சற்றே சறுக்கினான் என்று சொல்வீர்கள். வாலிமீது மறைந்திருந்தேனும் கணை வீசும் தகுதியும் துணிச்சலும் எவருக்கும் கிடையாது. அதானாலே தன்மீது ஒரு சரம் பாய்ந்ததும் அவன் ஆச்சரிய மிகுதியில் குழம்புவான். யாரவன் என்று வினவுவான். 'தேவரோ?' என அயிர்க்கும்; 'அத் தேவர், இச் செயலுக்கு ஆவரோ? அவர்க்கு ஆற்றல் உண்டோ?' எனும்; 'அயலோர் யாவரோ?' என நகைசெயும்; 'ஒருவனே, இறைவர் மூவரோடும் ஒப்பான், செயல் ஆம்' என மொழியும். “ஒருவனே, இறைவர் மூவரோடும் ஒப்பான், செயல் ஆம்” எல்லாம் கம்பன் மாத்திரமே பண்ணக்கூடிய நுட்பங்கள். நீங்கள் சொல்லச்சொல்ல, தெரு மணலில் உட்கார்ந்து கேட்டதில் கையில் வைத்திருந்த கச்சான் பக்கற் இளகிப்ப

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி பாத்திமா நலீம்

அன்பின் ஜேகே, முதன் முதலாக ஒரு நாவலுக்கு விமர்சனம் எழுதுகிறேன். நேரம் ஒதுக்கி கட்டாயம் எழுத வேண்டும் என்ற வாஞ்சையோடு எழுதுகிறேன். உங்கள் கொல்லைப்புறத்துக் காதலிகள் மீது எனக்கு அதீத காதல். எழுதிய உங்களை விடவும் சில பக்கங்களையும் சில பந்திகளையும் அதிகம் வாசித்திருப்பேன் என்றே நினைக்கிறேன். இலகு தமிழும் பேச்சு நடையும் அலட்டிக்கொள்ளாத ஆங்கிலமும் கலந்து கட்டி விளாசித்தள்ளி இருக்கிறீர்கள். சிம்பிளாய் உங்களின்ட பாஷையில் சொன்னால் கௌரியின் இன்னிங்க்ஸ் போல. எங்களின்ட பாஷையில் சொன்னால் ஜயசூரிய போல. காதலிகளின் கிராமத்து மணமும், அழகான ஓவியங்களும் எக்ஸ்ட்ரா அழகு. கொஞ்ச நாட்களாகவே வேலைச் சுமைக்குள்ளும் இறக்கி வைக்க மனம் வராது போனது இந்தக் காதலிகளை.

தீராக் காதலன்

  படகு மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது.. கங்கைத்தாய் இப்படி துக்கம் அனுஷ்டித்து இதற்குமுன் எவருமே பார்த்ததில்லை. சிறு அலையோ, அசைவோ, நீரோட்டமோ அற்று எவ்வித சலனமுமின்றி அவள் கிடந்தாள். அந்தப் படகோட்டிகூட நீர்த்திவலைகள் தெறிக்காவண்ணம் மிகப்பக்குவமாக துடுப்பு வலித்துக்கொண்டிருந்தான். ஒப்பாரி முடிந்து தூங்குகின்ற பாலைத் தலைவியின்  இரவு போன்று சுற்றுவட்டாரம் முழுதும் ஒருவித நிசப்தம் நிரவியிருந்தது.   தினமும் ஆற்றிலே பாய்மரமேற்றி மீன் பிடிக்கும் வலைஞர்களின் பாடல்கள் எங்கேயும் ஒலிக்கவில்லை. காலையில் மேலாற்று வழியாக தாவிக்குதித்து சூரிய நமஸ்காரம் செய்யும் வாலை மீன்கள் ஆற்றின் படுக்கையடியில்  இருந்த கற்களுக்குள் ஒளிந்திருந்தன.  கர்ணனின் கவச குண்டலங்களை கவர்ந்து சென்ற நாளது போன்று இன்றைக்கும் சூரியன் தயங்கித்தயங்கி வெளிவரலானான். அவனோடு இழவுவீட்டில் ஊடல் கொண்டன தாமரைச்செடிகள். என்றுமே இணை பிரியாத மகன்றில் பறவைகள் தன் துணைகளைக்காணாமல் தென்திசை தேடி பறந்துகொண்டிருந்தன. இராமன் காடேகிவிட்டான்.