முதற் துளி

May 21, 2015
கொழுத்தும் வெயில்.
வியர்வை ஈரத்தில்
நனையும் இரவு.
வெறிச்சோடிய படுக்கையறைகள்.
ஓலை கிழிந்த விசிறிகள்.
ஓயாத இலையான்கள்.
உப்பேறிய கிணறுகள்.
முள்ளாய்க் குத்தும் துவாலைகள்.
கானல் நீரை துரத்தும்.
உதடு வெடித்த சிறுவர்கள்.
ஈரம் தேடும் எறும்புகள்.
குட்டை நாய்கள்.
கோழிச்செட்டைகள்.
மீன் முள்ளுகள்.
மேற்சட்டையில்லா ஆண்கள்.
குறுக்குக்கட்டு வறண்ட
குளத்து மதகுகள்.
புழுதிவாரிய கேசங்கள்.
கணவன் மனைவி சண்டைகள்.
நாற்றமடிக்கும் கொல்லைப்புறங்கள்.
நிழல் தேடும் குடை மரங்கள்.
சூடு மிதிக்கும் கோயில் புறாக்கள்.
காடு ஏகிய கடவுள்கள்.
கோடை கடைநாளில்
விழுந்தது முதற் துளி.
குளிர்ந்தது ஊர்.
.

Contact Form