Skip to main content

Posts

Showing posts with the label சிறுகதை

அன்பில் அவன் சேர்த்த இதை!

  ஐந்தாம் வகுப்புக்கான நுழைவுத்தேர்வு. ரிசல்ட்ஸ் பார்க்கப்போன அப்பா திரும்பும் நேரம். சென்ஜோன்ஸ் கல்லூரி அனுமதிக்கு தமிழ், கணிதம், ஆங்கிலம் என மூன்று பாடங்கள். மொத்தமாக அறுநூறு மாணவர்கள் தோற்றிய பரீட்சையில் வெறும் முப்பத்தைந்து பேர்களை மாத்திரமே தெரிவு செய்வார்கள். வீட்டில் நம்பிக்கையில்லை. எனக்கோ அந்த கதீடறல் கட்டிடக்கலையும், பிரின்சிபல் பங்களோவும், ஐந்தடிக்கு ஒன்றாய் நிற்கும் மகோகனி மரங்களில் தெறிக்கும் ஒரு வித ஆங்கில வாசமும், இது தான் என் பாடசாலை என்ற எண்ணத்தை வேரூன்றவைத்துவிட்டது. வந்த அப்பாவின் முகம் சரியில்லை. இரண்டு புள்ளிகள். மயிரிழை .. அரும்பொட்டு என்று ஏதோதெல்லாம் சொன்னார். கத்த ஆரம்பித்து, அழுது கண்ணெல்லாம் சிவந்து படுக்கையறைக்குள் போய் போர்வையை மூடிக்கொண்டு, யாழ் இந்து கல்லூரியின் நுழைவுத்தேர்வு விண்ணப்பபடிவத்தை அண்ணா கொண்டுவந்து தந்தபோது கிழித்து எறிந்தது இன்னமும் சன்னமாய் ஞாபகமிருக்கிறது. கடைசியில் அப்பா யார் காலையோ பிடித்து, டொனேஷன் ஐயாயிரம் ரூபாய் எங்கேயோ கடன் வாங்கி கொடுத்து, சென்ஜோன்ஸ் கல்லூரியில் சேர்த்துவிடும்போது, முதல் நாள் வகுப்பை தவறவிட்டு இரண்டாம் நாள் தயக்கத்

இலையான்!

  “உணவு சங்கிலி என்பது சுற்றாடலில் உள்ள ..” அரியலிங்கம் மாஸ்டர் ஒரு வலதுகைக்காரர். இடதுகை கரும்பலகையில் விறுவிறுவென்று எழுதிக்கொண்டிருக்கும்போதே, வலது கை லோங்க்ஸ் பொக்கெட்டில் வறு வறுவென்று சொறிந்துகொண்டிருக்கும். ரிவிரச ஒபரேஷன் முடிந்த ‘கையுடன்’ கழுத்தடியில் ஜெயசிக்குறு ஒபரேஷன் ஆரம்பிக்கும். நீங்கள் மைதானம் பக்கம் உள்ள மிடில் ஸ்கூல் கழிப்பறைக்கு ஒதுங்கினால், கிழக்கேயிருந்து சரியாக நான்காவது அறையின் உள் கூரையில் “சொறியலிங்கம் ஒரு சொறி…” என்று கரித்துண்டால் எழுதப்பட்டு, மிகுதிப்பகுதி, மாஸ்டரின் யாரோ ஒரு ஆஸ்தான மாணவனால் அழிக்கப்பட்டு இருப்பதை கவனிக்கலாம். பக்கத்திலேயே முருகானந்தம் மிஸ்ஸின்… “சேர்” என்று யாரோ கூப்பிட, மாஸ்டர் திரும்பி பார்க்காமலேயே சொன்னார். “ஐஞ்சு நிமிஷம் தான் .. டக்கென்று போயிட்டு வரோணும் .. அங்கனக்க இழுபட்டு கொண்டு திரிஞ்சாய் எண்டால் இழுத்துப்போட்டு அறுப்பன்” சொல்லிக்கொண்டே தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். “உயிரினங்களுக்கு இடையிலான உணவுத்தொடர்பை விளக்குகிறது..” “சேர்…” இம்முறை கொஞ்சம் அழுத்தமாகவே கூப்பிட, மாஸ்டர் திரும்பிப்பார்த்தார். மூன்றாவது வரிசையில் இருந

டொக் …டொக் …டொக்

  விசுக்கென்று அறைக்குள் நுழைந்து கதவை உள்பக்கமாக தாழ்பாள் போட்டான் நரேன். பக்கத்தில் நடுங்கியபடியே, ஓடிவந்த மூச்சிறைப்புடன் அபி. இத்தனை பதட்டத்திலும் கூட, அவளை அழகு என்று விவரிக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும் அழகு. பயத்தில் இன்னமும் சிவந்துபோய் இருந்தவளை பார்க்க நரேனுக்கு இந்த நேரத்திலும் முத்தமிடவேண்டும் போல .. “ஏன் ..ச்சே ..கதவை திறந்தால் உயிர் போய்விடும்.. இந்த இடத்தில் எதற்கு இப்பிடி ஒரு சிந்தனை?”, நரேன் அவளை அணைத்துக்கொண்டே அறையினுள்ளே வந்தான். ஒரேயொரு மேசை. மேலே ஒரு பல்ப். எரித்துக்கொண்டிருந்தது. நாங்க எங்கடா இருக்கிறம் இப்ப? உஷ் … இது .. ஆள்காட்டி விரலை அவளின் உதட்டில் வைத்து அழுத்தினான் நரேன். ஹார்ட் பீட் நூற்றி இருபது இருக்கலாம். ட்ரெட்மில்லில் ஓடும்போது, நூற்றி ஐம்பதை தாண்டினால் தான் இரத்தத்தில் இருக்கும் கொலஸ்டரோல் குறைய தொடங்குமாம். பிரவீன் சொல்லியிருக்கிறான். பிரவீன் … எங்கே போயிருப்பான்? .. தப்பியிருப்பான் அவன் .. எமக்கு முன்னாலேயே ஓடிப்போனானே. என்னத்தையாவது பேசடா … பயமா இருக்கு நரேன் பேசவில்லை. அபி பயத்தில் மூடிய கண்ணை இன்னனும் திறக்கவில்லை. நரேன் இப்போது நிமி

கதை சொல்லாத கதை!

  ஏகலைவன் கவலையோடு தனது வலக்கை பெருவிரல் இருந்த இடத்தை தடவிக்கொண்டிருந்தான். குருஷேத்திரம் போர் தொடங்கி மூன்றாவது தினமே கரண்ட் தடைப்பட தொடங்கியது. இன்றைக்கு பதின்மூன்றாவது நாள். ஒரு நாளைக்கு அரை மணித்தியாலம் படி கரண்ட் தந்தாலாவது மோட்டர் போடலாம். ஒரு கையால் எக்கி எக்கி தண்ணி அள்ள சீவன் போகிறது. யோசித்துக்கொண்டே மனைவி குணாட்டி தந்த தேனிர் கோப்பையை இடக்கையால் வாங்கிக்கொண்டே ரேடியோவை திருகினான். “ஒலி 96.6, நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது குரு எப்.எம்மின் குருஷேத்திரம் சிறப்பு செய்திகள். போர் ஆரம்பித்து பதின்மூன்றாவது நாளான இன்று தந்திரோபாய பின்னகர்வில் சிக்குண்டு, சக்ரவியூகத்துள் புகுந்த பாண்டவரின் சிரேஷ்ட படைத்தளபதி அபிமன்யுவும் அவனோடு சேர்ந்த சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட படையினரும் பலி. இருநூறுக்கும் மேற்பட்ட யானைகளும் பெருந்தொகையான ஈட்டிகளும் ..….” அவசர அவசரமாக ஏஎம்முக்கு மாற்றினான் . “இது பாண்டவர் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் தமிழ் செய்திகள். வாசிப்பவர் விதூரன். பதின்மூன்றாம் நாள் போரிலே ஆயிரக்கணக்கான கௌரவ அரக்கர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர். யுத்த விதிகளுக்கு மாறாக, கௌரவர் நிராயுதப

கணவன் மனைவி!

  “நிகழும் மங்களகரமான ஸ்ரீமுக வருடம், கார்த்திகை திங்கள், முதலாம் நாள்(16.11.1993)  செவ்வாய் கிழமை, வளர்பிறை …..” குமரன் கொடுத்த அழைப்பிதழை மண்ணெண்ணெய் கடை சங்கரப்பிள்ளை முதலாளி மேலோட்டமாக நோட்டம் விட்டார். தாலி கட்டு எத்தனை மணிக்கு தம்பி? பதினொன்றுக்கும் பதினொன்றரைக்கும் நடுவில.. கோயில்லையோ? இல்ல, பொம்பிள வீட்ட, கொக்குவில் .. குளப்பிட்டி சந்திக்கு கிட்ட, ஓ, இவன் காந்தன் விரும்பி இருந்த பிள்ளை என்ன? கொக்குவில் பெட்டையே? ஆர் ஆக்கள் எண்டு தெரியுமோ? இன்றைக்கு மட்டும் இது பத்தாவது தடவை. எதை கேட்க மறந்தாலும் எது சாதி என்று கேட்க யாழ்ப்பாணத்தார் மறக்க மாட்டார்கள்.  சரியா தெரிய இல்லை முதலாளி,  வானதியிண்ட தாய் புங்குடுதீவு அடி. .. அப்பர் நயினாதீவாம். ‘எங்கட’ ஆக்கள் தானாம். ஆனா தீவாரல்லோ தம்பி? சரி சரி, இந்த காலத்தில இத பாக்கேலுமே? வெளில கதைச்சாலும் சட்டம்பிமார் பங்கருக்க போட்டிடுவினம். குமரன் பதில் சொல்லவில்லை. சங்கரப்பிள்ளை மண்ணெண்ணெய் பதுக்கியதை கண்டுபிடித்து, இயக்கம் அவரை பங்கருக்குள் இரண்டு வாரம் வைத்திருந்தது. அதற்கு பின்பு முதலாளி தீவிர புலி எதிர்ப்பாளர் ஆகிவிட்டார். பத்து

என்ர அம்மாளாச்சி!

  “மெல்பேர்ன் சென்ரல் செல்லும் அடுத்த புகையிரதம் இன்னமும் ஐந்து நிமிடத்தில் புறப்படும்"   எப்பிங் நிலையத்தில், பச்சை நிற பொத்தான் அழுத்தியபோது சொல்லியது. ஆஸ்திரேலிய வசந்தகாலம் காதில் கூசியது. ஜாக்கட்டின் ஜிப்பை இன்னும் மேலே இழுத்துவிட்டேன். ஐபாட் காதுக்குள் இளையராஜா “தென்றல் வந்து தீண்டி”னார். சற்று தூரத்தில் ஐந்து இளைஞர்கள், VB பியர் கானில் பெனால்டி கோல் போட்டுக்கொண்டு இருந்தனர். இருவர் ஆஸிக்காரராக இருக்கவேண்டும். மற்றவன் நெற்றியை பார்த்தால் கிழக்கு ஐரோப்பாவாக இருக்கலாம். மாசிடோனியனா? எனக்கு முன்னமேயே அகதியாக  வந்திருப்பான் போல. அடுத்தவன் கறுப்பன்.  ஒரு பெண்ணும் இருந்தாள். கால் ஓட்டும் leggies, குட்டை பாவாடை, மேலே பெயருக்கு பனியன் அணிந்திருந்தாள். இவர்களுக்கெல்லாம் குளிராதா? இல்லை காட்டுவதற்காக குளிரை சமாளிக்கிறார்களா? எல்லோருக்கும் பதினேழு பதினெட்டு வயசுக்குள் தான். ஒரே சிகரெட்டில் எல்லோர் மூச்சும் மாறி மாறி. அவர்களில் ஒருவன் என்னை கவனித்தான் போல இருந்தது. ஆஸி ஸ்லாங்கில் ஏதோ அவர்களுக்குள் பேசிக்கொண்டிருக்க, என்னை பற்றியோ தெரியாது. நான் பார்த்ததை கவனித்திருப்பார்களோ? என் பாக

கக்கூஸ்

  ர யிலில் இருந்து இறங்கும்போதே வயிற்றை கலக்க ஆரம்பித்துவிட்டது. அடக்க முடியவில்லை. இந்த டக்கீலா கருமத்தை இரவு அடிச்சாலே இதே பிரச்சினை தான். அவதானமாக இருந்திருக்கவேண்டும், இருக்கத்தான் டக்கீலா விடவில்லையே! காலையிலேயே ஒரு மாதிரி மார்க்கமாக தான் இருந்தது. கொஞ்சம் இஞ்சி போட்டு கோப்பி குடிச்சதால அவ்வளவு தெரியவில்லை. ஆனால் ரயில் ஜோலிமொன்ட் ஸ்டேஷன் கடக்கும் போது வயிறு கொஞ்சம் மக்கர் பண்ண தொடங்கியது. அட இதெல்லாம் நமக்கு சாதாரணம் என்று அதை பற்றியே யோசிக்காமல் பாட்டு கேட்டுக்கொண்டு வந்ததில் ஒருமாதிரி சமாளித்தாயிற்று. மெல்போர்ன் சென்ட்ரல் ஸ்டேஷனில் இறங்கும்போது புரிந்துவிட்டது. இன்றைக்கு சங்கு தான். அலுவலகத்துக்கு பதினைந்து நிமிடங்கள் நடக்கவேண்டும். இந்த வயிற்றோடு தாம் தாம் என்றும் நடக்கமுடியாது. கொஞ்சம் கவனமாக நடக்கவேண்டும். நின்று அடக்கிப்பார்த்துவிட்டு போகலாமா? வேண்டாம் யோசிக்காதே. அதைப்பற்றி யோசிப்பது தான் எமன். ஏதாவது பாட்டு. ம்ஹூம். புத்தகம். ஆ, புத்தகம் பற்றி யோசிக்கலாம். என்ன புத்தகம். “The Namesake”? சுத்தம்! இந்த நேரத்தில அந்த  புத்தகத்தை எல்லாமா யோசிப்பது? “Too Perfect” , போன வாரம் வ