Skip to main content

டொக் …டொக் …டொக்

 

விசுக்கென்று அறைக்குள் நுழைந்து கதவை உள்பக்கமாக தாழ்பாள் போட்டான் நரேன். பக்கத்தில் நடுங்கியபடியே, ஓடிவந்த மூச்சிறைப்புடன் அபி. இத்தனை பதட்டத்திலும் கூட, அவளை அழகு என்று விவரிக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும் அழகு. பயத்தில் இன்னமும் சிவந்துபோய் இருந்தவளை பார்க்க நரேனுக்கு இந்த நேரத்திலும் முத்தமிடவேண்டும் போல .. “ஏன் ..ச்சே ..கதவை திறந்தால் உயிர் போய்விடும்.. இந்த இடத்தில் எதற்கு இப்பிடி ஒரு சிந்தனை?”, நரேன் அவளை அணைத்துக்கொண்டே அறையினுள்ளே வந்தான். ஒரேயொரு மேசை. மேலே ஒரு பல்ப். எரித்துக்கொண்டிருந்தது.

நாங்க எங்கடா இருக்கிறம் இப்ப?

உஷ் … இது ..

ஆள்காட்டி விரலை அவளின் உதட்டில் வைத்து அழுத்தினான் நரேன். ஹார்ட் பீட் நூற்றி இருபது இருக்கலாம். ட்ரெட்மில்லில் ஓடும்போது, நூற்றி ஐம்பதை தாண்டினால் தான் இரத்தத்தில் இருக்கும் கொலஸ்டரோல் குறைய தொடங்குமாம். பிரவீன் சொல்லியிருக்கிறான். பிரவீன் … எங்கே போயிருப்பான்? .. தப்பியிருப்பான் அவன் .. எமக்கு முன்னாலேயே ஓடிப்போனானே.

என்னத்தையாவது பேசடா … பயமா இருக்கு நரேன்

பேசவில்லை. அபி பயத்தில் மூடிய கண்ணை இன்னனும் திறக்கவில்லை. நரேன் இப்போது நிமிர்ந்து அறையை சுற்றும் முற்றும் பார்க்கிறான். மிக விசாலமாக தெரிந்தது ..மிக விசாலமாக .. வெளிச்சத்தில் அறையின் சுவர்களை கூட காணவில்லை. வந்த வழியை திரும்பிப்பார்த்தான். கதவு தெரிந்தது .. இரண்டு புறமும் சுவர் .. நீண்டு நீண்டு ..என்ன மாதிரியான கட்டடம் இது? அறையா? சுவரா? சுவரே இல்லாத அறையா? எதற்கு இந்த கதவு? ச்சே இப்படி வந்து மாட்டியாச்சு. அடியும் விளங்கேல்ல நுணியும் விளங்கவில்லை. நரேனுக்கும் அடிவயிற்றில் ஏதோ ஓரு பயம் .. காட்டிக்கொள்ளவில்லை. அபியைப்பார்த்து மெலிதாய் சிரித்தான்.

6306182-classic-light-bulb-on-the-da[1]அபி…

ம்ம்ம்..

இத பார்த்தா அறை போல தெரியேல்ல .. திடீரென்று ஒரு மூலையில் இருந்து அதுகள் வந்திட்டா?

என்னடா சொல்லுற? பயமுறுத்தாத.. ..இது அறை தானேடா .. அந்த கதவு ..வெளிய இருந்து திறக்கும்போது ..உள்ளுக்க பல்ப் ..மேசை கூட…ஆனா ஆனா .. இந்த மேசை ஏன் நீள் சதுரத்தில் ..

அபி பேசிக்கொண்டு இருக்கும்போதே அவசரமாக ஏதோ அரவம் கேட்டு அவளின் வாயைப்போத்தினான் நரேன். கதவுக்கு வெளியே தான் ஏதோ சத்தம் .. வந்துவிட்டுதுகளா?

டொக் …டொக்….டொக்

கதவு தான் தட்டப்படுகிறது. இருவருக்கும் ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டுப்போய்விட்டது. என்ன செய்வது? யாராக இருக்கும்? திறப்பதா? விடுவதா? நரேன் குழம்பினான். அபி இன்னும் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டாள். கட்டை மெதுவாக விலக்கி. அவளை மேசைக்கு அடியில் ஒளியும் படி சொல்லிவிட்டு, ஷூவை கழட்டி கையில் எடுத்துக்கொண்டு மெதுவாக நரேன் கதவடிக்கு போனான். ஆயுதம் இல்லை.

டொக் …டொக்….டொக் ..

ஒரு டொக்குக்கும் இன்னொரு டொக்குக்கும் இடையே இருந்த அமைதி மிரட்டியது.

ப்ளீஸ் கதவை திற .. ப்ளீஸ்

நரேனும் அபியும் உள்ளே இருப்பது தட்டுபவனுக்கு தெரிந்திருக்கவேண்டும். அல்லது பொதுவாக தான் சொல்லுகிறானா? திரும்பி அபியை பார்த்தால் .. நடுங்கிக்கொண்டு இருந்தாள். இன்னமும் சிவந்து ... கள்ளுறக்கனிந்த பங்கி இவளை அப்படியே .. அம்மாடி … ச்சே சனியன் பிடிச்ச கம்பனும் காதலும் காலம் நேரம் தெரியாமல் … புத்தியை செருப்பால அடிக்கோணும்.

நரேன் … நீ தான் எண்டு தெரியும் .. பிளீஸ் திற .. அவங்கள் வைகுண்டத்துக்கும் வந்திட்டாங்கள்!

திடுக்கிட்டான் நரேன். வைகுண்டமும் போச்சா. கடவுளே என்ன ஊழிடா இது.. கொஞ்சமே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மெதுவாக பேசினான் நரேன்.brahma_thumb3

நீ யார் என்று முதலில் சொல்லு .. உன்னை எனக்கு தெரியுமா?

தெரியுமாவா? உன்னை படைச்சதே நான் தாண்டா .. அப்பன்டா!

காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை தணிகாசலம், நரேனின் அப்பன், ஐஞ்சாம் வகுப்பு ஸ்கொலர்ஷிப்பில பெயிலானதுக்கு முதுகுல போட்டது சன்னமாக அவனுக்கு ஞாபகம் வர,

நரகத்தையும் பிடிச்சிட்டாங்களா?

டேய் நான் வேத முதல்வன்டா .. உன்னை .. அபியை … இந்த அறையை .. எல்லாத்தையும் படைச்சவன்!

கொஞ்சம் நம்பிக்கை வந்தது. பிரம்மன் பக்கத்தில் இருப்பது எப்போதும் நன்மை தானே. நரேன் அபியை திரும்பிப்பார்த்தான்.  அவளும் ஆயாசமாயானது போல தோன்றியது. கொஞ்சம் சிரிப்பும் வந்தது. பிரம்மனே வழியில்லாமல் ஓடும நிலை.

ஓ நீயா .. சொறி நீங்களா .. உங்களுக்கே ஆப்பு வச்சிட்டாங்களா?

என்று சொல்லிக்கொண்டே தாழ்ப்பாளை மெதுவாக திறந்துகொண்டிருக்கும்போதே வெடுக்கென்று புகுந்தான் அவன்.

அவன்! வேத முதல்வனா அவன்? ம்ம்ஹூம். கன்னங்ககறுப்பாக .. மூன்று தலைகளை வேறு காணோம்.. ஏமாற்றிவிட்டான் பாவி. இவன் அவன் ஆளா? எங்களை போல அகதியா? இனியும் அகதிகள் வந்தால் அடக்கலாமா? அவசரப்பட்டு விட்டோமோ? என்று நரேன் யோசித்துக்கொண்டே இருக்கும்போது இப்போதைக்கு நான்முகன் மேசைக்கு பக்கத்தில் போய்விட்டிருந்தான். இப்போது அபி மீண்டும் பயத்தில் விறைத்து சுருண்டு போயிருந்தாள்.

நீங்கள் நான்முகன் தான் என்பதற்கு என்ன அடையாளம்? நான்முகன் ஆரியன் அல்லவா? உங்களை பார்த்தால் கறுப்பாக இருக்கிறதே? நீங்கள் சிவனா? இல்லை திருமாலா? இல்லை சுமந்திரனா? சொல்லுங்களேன்.

2255781557_d7148597a7_thumb6சிரித்தான். பல்லெல்லாம் கறுப்பு. வெளியில் தெரியும் எந்த இடமும் வெள்ளை இல்லை. கறுப்பு. சனீஸ்வரன் போல .. ஏமாற்றுப்பட்டுவிட்டோம் ச்சே .. எழுந்து ஓடும்போது ஏழரை ஆரம்பித்ததை மறந்தேவிட்டேனே என்று நரேன் குழம்பிக்கொண்டிருக்க, நான்முகன் aka சனியன் இப்போது அபியை பார்த்தான். அபி சுருண்டு, நடுங்கி .. முன்னே சொன்ன எல்லா விவரணங்களும் இன்னமும் அப்படியே.

சொல்லுங்க .. நீங்க யாரு … நீ..ங்க தான் பிரம்மன் எண்டதுக்கு

வாயை மூடுமாறு சைகை செய்துகொண்டே மேலே எரிந்துகொண்டிருந்த பல்ப்பை பார்த்து கை நீட்டினான் அவன்.. பல்ப் பட படவென்று மின்னத் தொடங்கியது .. வெளிச்சமும் இருளும் .. வெளிச்சமும் இருளும் … இருண்டபோது தான் தூரத்தில் சின்னதாய் இன்னொரு எல்ஈடி பல்ப்பும் இருந்தது தெரிய .. திடீரென்று ஒட்டுமொத்தமாய் பல்ப் அணைந்துவிட்டது. வீல்…… என்று கத்தினாள் அபி. எல்ஈடி இன்னமும் எரிந்துகொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில், மிரண்டுபோயிருந்தாலும் அபியின் அழகு. எல்ஈடி தோத்துது போ!

ஹ ஹ ஹ .. சிரித்துக்கொண்டே “இப்ப பாரு” என்று நான்முகன் aka சனியன் சொல்ல மீண்டும் பல்ப் எரிந்தது. அறை முழுதும் வெளிச்சம். காய்த்துகொண்டிருந்த எல்ஈடியை காணவில்லை!

கடவுள் என்று சொல்லிக்கொண்டு வந்தவன் வித்தை காட்டுகிறான். அபி நரேனிடம் “இவனை எப்படியாவது வெளியே அனுப்பு” என்று கிசுகிசுக்கிறாள். நமக்கே சாப்பாடு இல்லை. மூன்றுபேரை இந்த அறை தாங்குமா?. நரேனுக்கு ஒன்றுமே புரியவில்லை. பிரச்சனைக்கு ஒளிந்து ஓடி அறைக்குள் வந்தால் இவன் இப்படி வந்து ஒட்டிகொண்டானே. பிரம்மஹத்தி!IMG2716-L_thumb10

“பசிக்குதா அபி ?”

கேட்டுக்கொண்டே அவன் தன் கறுப்புக்கோட்டுக்குள் இருந்து எதையோ எடுக்கும்போது தான் அபி கவனித்தாள். அட … கறுத்தக்கொழும்பான். கோண்டாவில் உயர் சாதி மாம்பழம்! இப்போது அபியின் சிவந்த உதடுகளில் இலேசாக எச்சில் ஊறத்தொடங்கியது. “எத்தனை நாளாயிற்று இந்த மாம்பழத்தை சாப்பிட்டு. இவர் கடவுளே தான்!” என்று அபி யோசிக்கும்போது, அந்த கிரனைட்டை கண்ட நரேன் வெலவெலத்து போனான். இவன் ஏன் கிரனேட்டை எடுக்கிறான்? .. என்ன இது! சோதனை உள்ளேயுமா? அட ஆண்டவா!

டொக் …டொக்….டொக்

 

------------------------------ முற்றியதா? -------------------------------------

 

பிற்குறிப்பு: இந்த சிறுகதை 31-05-2012 வியாழ மாற்றத்தில் வெளிவந்தது. தனிப்பதிவாக போடகூடிய கதை என்று நண்பர்கள் சொல்லியதால் பல மாற்றங்களோடு மீண்டும் இங்கே தந்திருக்கிறேன்!

Comments

  1. வியாழமாற்றத்தில் இருந்து இங்கே பகிரும் கருத்து.

    மயிலன் : டொக் டொக் டொக் முடித்த இடம் சற்று விளங்க இல்லை நண்பரே.. விளக்கம் ப்ளீஸ்...

    ஜேகே : மீண்டும் அந்த கடைசி பந்தியை வாசியுங்கள். கதவு தட்டப்படுகிறது .. யாராக இருக்கலாம் என்ற ஹின்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது..

    ReplyDelete
  2. (ஜெகேக்கும் எனக்கும் நடந்த ஜீ-சாடை இங்கே உங்கள் பார்வைக்காய்)

    ஜேகே: ஒரே குஷ்டமப்பா, அட சீ கஷ்டமப்பா.

    நான்: ஏன் ஜேகே ?

    ஜேகே: நம்ம பேஸ் புக்கு படலையில ஒரே விளம்பரம் கூடிட்டுது. அதை கட்டி மேய்க்க முடியல.

    நான்: அட இதெல்லாம் இருந்தா தானே நீங்கள் பிரபல பதிவர். இல்லாட்டி பிரபல பதிவர் கவிஞ்ஞர் எண்டு சொல்லும் பதிவர்.

    ஜேகே: நக்கல் ? டேய் நானே கடுப்பில இருக்குறான் நீ அடுப்பில வாட்டாத - அகா சாந்தம் சீ சந்தம்.

    நான்: என்ட குருவாயூரப்பா - நித்தியா மேனனிட்ட கேட்டு ஒரு தாயத்து வாங்கி கட்டுங்கோ

    ஜேகே: போடாங், நாம குச்சு மிட்டாயும் குருவி ரொட்டியும் வேண்டியே கந்தறுந்துடுவம் போல.

    நான்: அட விடுங்க ஜேகே எவ்ளோ பண்ணிடீங்க இதைப் பண்ண மாடீங்களா

    ஜேகே: பாஸ், கொமென்ட் பாத்தன், முடிவை சொல்லீட்டீங்க, நல்லது தான். பலருக்கு அது ரீச் ஆக இல்ல.

    நான்: அட பய புள்ளைக பாவமில்லை, நானும் எவளோதான் பொறுக்குறது

    ஜேகே: அத தனியா கொஞ்சம் elaborate panni சிறுகதையா போடுற ஐடியா இருக்கு; அந்த தேன் நூல் .. சிற்றின்பம் விஷயமும் சரியா போய் சேர இல்லை

    நான்: வாசிப்பவனின் பின் புலம் மற்றும் வாசிப்பு தளம் ஒரே மாதிரி இருக்காதே - நீங்கள் கொஞ்சம் ஹின்ட் குடுக்கலாம்.
    நான் விட்டா இதை ஆதாம் ஏவாள் கதை எண்டும் சொல்லுவன், ஆனா எல்லாத்தையும் நானே சொல்லுறது சேரி இல்லை – இல்லை ?

    ஜேகே: இது ஆதாம் ஏவாள தான் remake
    கருத்தக்கொழும்பான் தான் ஆப்பிள்!
    உள்ளுக்கு வந்தது சாத்தான்.
    கடவுளை மனிசன் வெளிய விட்டு பூட்டிட்டான்!

    நான்: அட இதை இப்படிக் கூட சொல்லலாம் ->
    I Am Legend படக் களத்தில நடக்குது எண்டு. (//கதவுக்கு வெளியே தான் ஏதோ சத்தம் .. வந்துவிட்டுதுகளா?//)
    எனக்கு ஆதாம் ஏவாள் விளங்கீட்டிது - நான் கொஞ்சம் முட்டாள் தான் ஒத்துக்குறன் ஆனா அவ்ளோ இல்லை. அது மனிதத்தின் தொடக்கத்தில எண்டால் இது முடிவில - லைக் ஊழி.

    ஜேகே: apocalyptic களமாக யோசிக்கலாம் ... நாங்களும் அப்படி தான் உருவானவர்கலாகவும் இருக்கலாம் .. ஏதோ ஒன்றின் apocalyptic தான் நாங்கள்

    நான்: ( மனசுக்குள், apocalyptic அது மரமில்லை ?)
    ஆனா கடவுளை வெளியில வைச்சு பூட்டின எண்டுறதை விட
    கடவுள் கூப்பிட்ட பிறகும் கதவு தட்டிக் கொண்டிருக்குறார் எண்டு எகத்தாளமா ? நீங்க தான் எஸ் ஜே சூரியா ரகம் –> இருக்கு ஆனா இல்லை.

    ஜேகே: அது பொருந்துது இல்ல,
    சனியனை பார்த்து ஏமாந்தால கடவுளையே நம்பாம போனது மாதிரி தான் முடித்தது ...
    இதில கடவுள் perspective missing தான் ..
    அதை கூட சிறுகதையா எழுதலாம்

    நான்: உள்ளே ஒரு பிரச்சனை கடவுள் தேவைப்படும் போது - அழைப்பும் இருக்கையில்
    கூப்பிட்ட பிறகு
    கதவு தட்டிக் கொண்டு இருக்கும் கடவுள்
    நம்ம டெலி சீரியல் பெட்டரோ ?


    ஜேகே: ஆனா நாங்க அறியவில்ல? .. சூப்பர்.

    நான்: இதை இன்னமும் நீட்டி முழக்கலாம்….செரி விடுங்க.

    ஜேகே: கொஞ்ச நாளா டூ மச்சா இலக்கியப் பதிவா போயிட்டு இருக்கு… நாம்மள இலக்கிய வாத்தியார் எண்டு நினைச்சிடப் போறாங்கள், விடக் கூடாது.

    thanks machchi!

    நான்: (ஜெர்க் ஆகி, மனசுக்குள் “அட நம்மள அப்படியா நினைக்குறாங்க - சொல்லவே இல்லை”, இலக்கியப் பதிவு எண்டு இந்தாள் எதை சொல்லுது ஓரளவு விளங்காத பதிவா இல்லை ஒரேடியா விளங்காத பதிவா - இது விளங்கிடும்.)
    ஆமா விடக் கூடாது (எதை?)

    ReplyDelete
  3. :)
    அன்றே அந்த உருவகத்தை உணர்ந்துகொண்டேன் ஜேகே..
    மறுபதிவு செய்ய தூண்டிய நண்பர்களுக்கு நன்றி...

    ReplyDelete
  4. நன்றி மயிலன் ... அன்றைக்கு வந்த கமெண்ட்டுகள் எல்லாம் சேர்த்து போட்டுவிட்டேன் ..

    உங்களுக்கு தனியாக மடல் ஒன்று அனுப்பியிருக்கிறேன் ... இன்றைக்கு குளிரில் மெல்பேர்ன் வேறு நடுங்குகிறது :) நன்றி

    ReplyDelete
  5. கருத்தக் கொழும்பான் - அப்பிள், ஆதாம் , ஏவாள் அந்த வழில கொஞ்சம் யோசிச்சிட்டு,
    //எங்களை போல அகதியா? இனியும் அகதிகள் வந்தால் அடக்கலாமா?//
    //நான்முகன் ஆரியன் அல்லவா?//
    இந்த மாதிரி வசங்களை மீண்டுப் படித்துப்பார்த்து குழம்பிட்டேன் அன்று! நம்ம 'அறிவு'க்கு புரியல பாஸ்! :-)

    ReplyDelete
  6. பார்த்த உடனேயே பிடிச்சுப் போனது இந்த வரிகள்தான்!

    //தெரியுமாவா? உன்னை படைச்சதே நான் தாண்டா .. அப்பன்டா!

    காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை தணிகாசலம், நரேனின் அப்பன், ஐஞ்சாம் வகுப்பு ஸ்கொலர்ஷிப்பில பெயிலானதுக்கு முதுகுல போட்டது சன்னமாக அவனுக்கு ஞாபகம் வர,

    நரகத்தையும் பிடிச்சிட்டாங்களா?//

    செம்ம!:-)

    அதென்னமோ தெரியல பாஸ்...இப்படியான மேட்டர்தான் அதிகமாப் பிடிக்குது!

    ReplyDelete
  7. நன்றி ஜீ

    ////எங்களை போல அகதியா? இனியும் அகதிகள் வந்தால் அடக்கலாமா?////
    வெளிநாடு வந்தவர்கள் சிலருக்கு ஒரு குணம் இருக்கிறது. தமக்கு பிறகு அகதிகளாக வருபவரை மட்டம் தட்டுவது. ஏன் இவனெல்லாம் வந்து நாட்டை கெடுக்கிறான் என்று யோசிப்பது .. அதை சும்மா லைட்டாக தொட்டேன்.

    ////நான்முகன் ஆரியன் அல்லவா?//
    வந்தவன் கறுப்பு ... ஆனால் நாங்கள் வெள்ளை ஆரியன் தானே கடவுள் என்று நினைத்து கூட இருக்கும் கடவுளை விட்டுவிடுவோம் இல்லையா? எங்கள் அரசியலையே யோசியுங்கள் .. ஹா ஹா

    ReplyDelete
  8. ஜீ

    //
    காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை தணிகாசலம், நரேனின் அப்பன், ஐஞ்சாம் வகுப்பு ஸ்கொலர்ஷிப்பில பெயிலானதுக்கு முதுகுல போட்டது சன்னமாக அவனுக்கு ஞாபகம் வர,
    நரகத்தையும் பிடிச்சிட்டாங்களா?//

    செம்ம!:-)
    //

    முதுகில போட்ட அப்பன் நரகத்திற்கு தான் போயிருப்பான் என்ற கடுப்பில் இருக்கும் மகன் :) .. சிரிச்சு சிரிச்சு எழுதியது .. கண்டுபிடித்து நீங்களும்ரசித்ததுக்கு .. நன்றி தல :)

    ReplyDelete
  9. தனிப்பதிவாக வாசிக்க கிடைத்ததுக்கு நன்றி
    முற்றியதா என்று முடித்து இருக்கிறீர்கள் மேலும் தொடரலாமே

    ReplyDelete
  10. இரண்டு முறை வாசித்தபின் தான் கதை ஓரளவு புரிந்த மாதிரி இருக்கிறது. ஆனால் எதிலிருந்து தப்பித்து ஓடுகிறார்கள்?

    இது நம் அறிவுக்கு மீறிய ஒரு கதை போல இருக்கிறது.

    ReplyDelete
  11. கதையின் கரு என்னவென்பதை கடைசிவரை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை .

    ReplyDelete
  12. பல கருக்களை தொகுத்து ஒரு கதையை எழுதியிருக்கிறாய் ,"அடுத்து என்ன நடக்கும்" என்ற ஒரு வாசகனின் கேள்வியே படைப்பாளியின் வெற்றி..அதை சரியாக நிறைவேற்றியிருக்கிறாய்.. கலக்கியிருக்கிறய்

    ReplyDelete
  13. மடையன்6/13/2012 3:01 pm

    வியாழமாற்றத்தில் தான் இப்படி கதையை போட்டு சாகடிக்கிரீர்கள் என்றால் இதில தனிப்பதிவு வேற இதுகளை விட்டுட்டு கக்கூசு, மாஸ்டர் மாதிரி கதைகளை போடுங்கள்

    ReplyDelete
  14. நன்றி .. சுகுமாரன் .. முற்றியதா என்று போட்டதுக்கு இரண்டு அர்த்தங்கள் ... :) .. தொடருவதா என்று கேட்டால் தெரியாது :)

    ReplyDelete
  15. @ஹாலிவுட் ரசிகரே .

    சும்மா ஒரு முயற்சி தான் ..

    கதையின் சில சாரங்களை தருகிறேன் ... ஆதாம் ஏவாள் சாத்தான். ஆப்பிள். சிற்றின்பம். உலகம் உருவாகும் போது கடவுள் எங்கே போனான்? ... எந்த எல்ஈடி .. சந்திரன் ... பல்ப் .. சூரியன் .. இப்போது வாசித்துவிட்டு சொல்லுங்கள் .. விவாதிக்க நிறைய open ends விட்டு வைத்திருக்கிறேன்..

    எதிலிருந்து தப்பி ஓடுகிறார்கள் ... அந்த ஆங்கிளில் மனித இனம் எப்போதாவது யோசித்ததுண்டா? ஏன் ஓடுகிறோம் என்று தெரியாமலேயே ஓடுகிறோமே?

    சும்மா ஒரு ஐடியா தான் .. இது தான் என்று கதையில் தீர்மானமாக எதையும் நிர்ணயிக்கவில்லை.

    ReplyDelete
  16. @முருகேசன் ... ஹாலிவுட் ரசிகனுக்கு கொடுத்த பதிலில் கொஞ்சம் விளக்கியிருக்கிறேன் .. இது தான் கரு என்று ஒரு அறுதி இந்த கதைக்கு இல்லை..

    ReplyDelete
  17. நன்றி மன்மதகுஞ்சு.

    ReplyDelete
  18. மடையன் சார் ... அவ்வப்போது செத்து செத்து விளையாடினா தான் ஆட்டத்தில ஒரு திருப்பம் இருக்கும் :)

    ReplyDelete
  19. வெளியிலுருந்து குரல்,

    எல்லாவற்றையும் மூடி வைக்காதே கதவை திற காற்று வரட்டும்.

    டேய் உள்ள என்ன நடந்தாலும் சரி, சாத்தானோட செத்தாலும் சரி, நீ வந்து கடவுளை காட்டுறன் எண்டு எம்பி எம்பி குதிக்க வைச்சு இருக்கிற ஒண்டி பிகரையும் பிக்கப் பண்ண பார்க்கிறியா?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட