இரவு உணவுக்கு நண்பர்கள் வருவதாக இருந்தது. வீடு படு குப்பையாக இருந்தது. சமையல் சாமான்கள் எல்லாம் தீர்ந்திருந்தது. வாங்கவேண்டும். சமையலறை சின்ங் முழுதும் ஒருவாரத்துப் பாத்திரங்கள் நிறைந்திருந்தன. மினுக்கவேண்டும். வேலைக்கு லீவு போடலாம் என்றால் அன்றைக்கு என்று பார்த்து ஒரு ரிலீஸ் இருந்தது. போயே தீரவேண்டும். அவளும் பிஸி. காலை ஐந்தரைக்கே அன்றைய நாள் மிரட்ட ஆரம்பித்தது. மிக நீண்ட நாளுக்கான காலை மிக அலுப்புடனேயே விடியும். அன்றும் அப்படித்தான். எல்லாவற்றையும் மறந்துவிட்டு சற்றுநேரம் தூங்கினால் என்ன என்று இருந்தது. முடியவில்லை. தேநீரை ஊற்றி ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தேன். “மாஸ்டர் அண்ட் மாகரிட்டா” நாவல் அலுப்படித்தது. கடவுள் தத்துவ விசாரங்கள் எல்லாம் இப்போது பயங்கரமாக அலுப்படிக்கின்றன. இருக்கு இல்லை என்ற விவாதங்கள் வெறும் வெற்று. இருக்கு என்றால் இருக்கு. இல்லை என்றால் இல்லை. இரண்டாலும் எந்தப்பயனும் இல்லை என்பதே உண்மை. புத்தக வாசிப்பு மனிதர்களின் இயல்புகளைப் பெரும்பாலும் மாற்றியமைப்பதில்லை. அவை கொடுக்கும் விசுவரூப தருணங்களின் நீளம் மிகக்குறைவு. அதிகம் போனால் சேம் பின்ஞ் சொல்ல வ