Skip to main content

Posts

Go, Set A Watchman

இன்று "உலகம் முழுதும்" ஹார்ப்பர் லீ யின் "Go, Set  A Watchman" நாவல் வெளியாகிறது. புத்தகப்பிரியர்களுக்கு ஒரு பக்கம் கொண்டாட்டம். மற்றப்பக்கம் வயிற்றுக்கலக்கம். சில கடைகளில் வரிசையில்கூட மக்கள் நின்று வாங்கக்கூடும். ஹார்ப்பர் லீயின் முதல் நாவலான "To Kill A Mocking Bird" அறுபதுகளில் வெளியானது. வெளியான நாள் முதல் இன்று வரை அந்நாவல் ஏற்படுத்திய, ஏற்படுத்துகின்ற தாக்கம் கொஞ்சம் நஞ்சமில்லை. இப்போது அவருடைய் இன்னொரு நாவல் வெளியாகிறது என்ற ஆவல். ஐம்பத்தைந்து வருட காத்திருப்பு. சும்மாவா?

காத்திருந்த அற்புதமே

ரொபேர்ட் புரோஸ்ட் கவிதைகளை படிக்கும்போது கிடைக்கும் உணர்வுகளை எவரும் இலகுவில் விளக்கிவிட முடியாது. தனித்திருந்து மூழ்கி எழுந்தால் மாத்திரமே அர்த்தம் கொஞ்சம் புரியுமாப்போல இருக்கும். வாசிக்கும்போது நாமும் ரொபேர்ட்டோடு குதிரை வண்டியில் ஏறி உட்காரவேண்டியதுதான். பக்கத்திலேயே அவரும் அமர்ந்திருப்பார்.வண்டியை அமைதியாக ஓட்டுவார்.  பாதை போடுவது மாத்திரமே அவர் வேலை. எதுவுமே பேசமாட்டார். போகும் வழியை ரசிப்பது நம்மோடது. எப்போதாவது திடீரென்று ஒரு வசனம் சொல்லுவார். மற்றும்படி நீயே கவிதையை எழுதிக்கொள் என்று விட்டுவிடுவார். ஒரு நல்ல கவிஞன் வாசகனை கவிஞன் ஆக்குவான். ரொபேர்ட் புரோஸ்ட் தன் அத்தனை கவிதைகளிலும் அதனை செய்திருக்கிறார். தமிழில் நகுலன்அதை நிறையவே செய்திருக்கிறார்.  அது ஒரு இலையுதிர்கால பயணம். அறுவடை செய்யப்பட்ட விளை நிலங்கள், சோம்பலான பறவைகள்,  பச்சோந்திகளாக நிறம்மாறி மரம் பிரியும் பழுப்பு இலைகள் என்று காட்சிகள் விரியும். அவர் அமைதியாக இருப்பார். பயணத்தின்போது ஒரு மரம், தன் அத்தனை இலைகளையும் தொலைத்து, ஒரேயொரு இலையை மட்டும் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தது. என்னை விட்டு போகாதே பிளீஸ் என்று இலையிட

உனையே மயல் கொண்டு

  சந்திரன் அவுஸ்திரேலியாவிலே விஞ்ஞான முதுமானி ஆராய்ச்சி மாணவனாக இருக்கிறான். மனைவி ஷோபா,  மிக இளம்வயதில் திருமணம் முற்றாக்கப்பட்டு, புகைப்படத்தில் பார்த்த சந்திரனை நம்பி அவுஸ்திரேலியாவுக்கு வந்திறங்கியவள். அவுஸ்திரேலியா வந்து இரண்டாம் வருடமே  குழந்தை.குழந்தைப்பேற்றோடு  ஷோபாவின் தாயும் தந்தையும்  வந்திணைகிறார்கள். குழந்தை பிறந்த சில நாட்களிலேயே ஷோபாவின் நடவடிக்கைகளில் மாற்றம் உருவாகிறது. மனம் ஒரு நிலையில் இல்லாமல் திடீரென்று அதி உச்ச கோபத்தையும் சமயத்தில் அதியுச்ச மகிழ்ச்சியையும் காட்டத்தொடங்குகிறாள். இது உடலுறவு வாழ்க்கையிலும் பிரதிபலிக்க ஆரம்பிக்கிறது. ஷோபாவுக்கே தன்னில் ஏற்படும் மாற்றம் புரிகிறது. தன்மீதான கழிவிரக்கம், கோபம் மேலும் அதிகரிக்கிறது.   இந்தச்சமயத்தில் சந்திரன் ஜூலியா என்கின்ற நடுத்தர வயதுப் பெண்ணை சந்திக்கிறான்.  உதவி செய்கிறான். உறவு ஆரம்பிக்கிறது. ஜூலியா மூன்று முறை திருமணம் செய்து இப்போது தனித்திருப்பவள். இரண்டு பிள்ளைகள். இருவருமே பெரியவர்கள்.வயதுக்கு வந்த மகன் வீட்டில் இருக்கத்தக்கதாகவே ஜூலியா சந்திரனோடு உறவு கொள்கிறாள். சந்திர‌ன் ஷோபா, ஜூலியா என்ற இரு உறவுகளாலும

ஹரிஹரன் - சித்ரா

  தமிழ் திரையிசையில் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு பாடகர் ஜோடி இதுகாலமும் கொடிகட்டிப் பறந்து  வந்திருக்கிறது. “ஏ.எம் ராஜா - ஜிக்கி”, “சுசீலா- டி.எம்.எஸ்”, “எஸ். பி. பி - ஜானகி”, “சித்ரா - மனோ” என்று இப்படி ஒரு லிஸ்டே இருக்கிறது. ஒவ்வொரு ஜோடிக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல். ஒரு கொன்றாஸ்ட் இருக்கும். இவர்கள் சேர்ந்து பாடும்போது ஒரு தனித்துவம் கிடைக்கும்.

சப்பல் மன்னர்கள்

  மோகனவடிவேல். சிவலை. எட்டாம் வகுப்பிலேயே தாடி மீசை வளர ஆரம்பித்துவிட்டது. தினமும் வரும் வழியில் நல்லூரில் இறங்கி, அஷ்டாங்க நமஸ்காரம் செய்து, நெற்றி முழுக்க வீபூதி சந்தனம் பூசியபடியே பாடசாலைக்கு வருவான். அதிகம் பேசமாட்டான். பரீட்சை நாட்களில் நாமெல்லாம் கூடிப்பேசிக்கொண்டிருக்கையில் தனியாக அமர்ந்திருந்து இரண்டாய் மடித்த ஏ4 தாளில் குறிப்புகளை படித்து தனக்குத்தானே சொல்லிக்கொண்டிருப்பான். மிகக்குறுகலான எழுத்திலே  எழுதப்பட்டிருக்கும் கடைசிநேர தயார்படுத்தல் நோட்டுகள் அவை. ஆனால் நோட்ஸ் கொப்பியைவிட அதிகம் அதிலே எழுதப்பட்டிருக்கும்.  கதைக்கமாட்டான். சிரித்தால் பதிலுக்கு சின்னச் சிரிப்பு. “என்ன மச்சான் ரெடியா?” என்று கேட்டாலும் சின்னச் சிரிப்புத்தான். விடாமல் அலுப்படித்தால் “டிஸ்டர்ப் பண்ணாதே, ஒண்டுமே படிக்கேல்ல” என்பான். சொல்லும்போது கன்னம் எல்லாம் கொழுக்கட்டைபோல வீங்கி, வாயைத்திறந்தால் படித்ததெல்லாம் வாந்தி எடுத்துவிடுவானோ என்றமாதிரி நிற்பான். பரீட்சை சமயமும் குட்டை நாய் கவட்டை விசுக் விசுக்கென்று சொறிவதுபோல எதையோ எழுதிக்கொண்டேயிருப்பான். எக்ஸ்ட்ரா பேப்பர் வாங்குவான். டைம் அவுட் சொன்னாப்பிறகு

பீரை நினைச்சு மோரை அடிச்சும் ...

பீரை நினைச்சு மோரை அடிச்சும் போதை ஏறாது, புரிஞ்சுக்கோ. காரை நினைச்சு தேரை உருட்டியும் ஸ்பீடு ஏறாது, அறிஞ்சுக்கோ. கீரை கடைக்கு எதிர போட்டும் வாங்க ஆள்வேணும், உணர்ந்துக்கோ. கூரை பிரிச்சு அள்ளிக் கொட்டியும் சாமி இல்லை நீ, தெரிஞ்சுக்கோ ஒட்டகத்தை கூட்டிக்கொண்டு பெட்டிக்கடை போகாதே. வெட்டிப்பயல் லைக்குக்காக ஒட்டடைய போடாதே. சொட்டைப்பயல் படம் போட்டா தொப்பி கொழுவிப்பார்க்காதே. பிட்டு லிங்கை கிளிக்குப்புட்டு டக்கு பண்ணி மாட்டாதே.. கல்லாமையோட நிண்டு நீயேன் கட்டிப்பிடிச்சு உருளவேணும்? மல்லுப்பிடிச்சி ஆருக்கு என்ன லாபம் சொல்லு பார்ப்பம்? இல்லுக்கிட்ட வில்லுப்பிடிச்சி வெண்டவன காட்டு பார்ப்பம்? சொல்லாத சொல்லைப்போல நல்ல சொல்லு சொல்லு பார்ப்பம்? வண்ணாத்திப் பூச்சிபோல வாழுநாளு கொஞ்சக்காலம். எல்லாமே புரிய உனக்கு இல்ல காணும் ரொம்ப நேரம். உள்ளகாலம் கொஞ்சத்தையும் வெஞ்சினத்தில் கரைச்சுப்புட்டா இல்லாமப் போனபின்னும் கரையாது அண்டங் காகம்! *************  Photo : Peter Mueller

வீராவின் விதி

  “The present determines the past” -- Veera’s Theorem இன்றைக்கு மட்டும் இரண்டாயிரம் தடவைகள் இதனை வாசித்துவிட்டேன். தமிழில் இன்னொரு ஆயிரம் தடவைகள். “நிகழ்காலத்தின் எந்தவொரு அவதானிப்பும் கடந்தகாலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்” -- வீராவின் விதி. என்னாலேயே நம்பமுடியவில்லை. மீண்டும் மீண்டும் சரி பார்த்துவிட்டேன். நிறுவல்கள் எல்லாமே சரியாக இருக்கின்றன. உலகத்தில் அத்தனை விஞ்ஞானிகளாலும் கணித மேதைகளாலும் தீர்க்கமுடியாமல் தண்ணி காட்டிகொண்டிருந்த நிறுவல். உலகத்தையே புரட்டிப்போடப்போகின்ற சமன்பாடு. என் கைகளில். மொத்தமாக முன்னூற்றுப்பத்து பக்கங்கள். உலகமே வீராஸ் விதி என்று அலறப்போகிறது. யோசித்துப்பார்க்கவே ... உள்ளயிருந்து ஸ்ஸ்ஸ் என்று ஒரு பட்டாம்பூச்சி. “நீ சாதிச்சிட்டாய் வீரேயிங்கம்” வரும் வாரங்களில் எல்லாமே நான் நினைப்பதுபோல சரியாக அமைந்துவிட்டால் பேராசிரியர் வீரசிங்கம் என்ற பெயர் விஞ்ஞான உலகின் தவிர்க்கமுடியாத பெயராக அமைந்துவிடும். உலகின் அத்தனை மூலைகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களிலிருந்தும் உரையாற்ற அழைப்புகள், டெட் டோக், பட்டங்கள், கௌரவ பேராசிரியர் பதவிகள் தேடிவரும். முயன்றால் லூக்கேசியன்