பீரை நினைச்சு மோரை அடிச்சும் ...

Jun 16, 2015 2 comments
பீரை நினைச்சு மோரை அடிச்சும்
போதை ஏறாது, புரிஞ்சுக்கோ.
காரை நினைச்சு தேரை உருட்டியும்
ஸ்பீடு ஏறாது, அறிஞ்சுக்கோ.
கீரை கடைக்கு எதிர போட்டும்
வாங்க ஆள்வேணும், உணர்ந்துக்கோ.
கூரை பிரிச்சு அள்ளிக் கொட்டியும்
சாமி இல்லை நீ, தெரிஞ்சுக்கோ

ஒட்டகத்தை கூட்டிக்கொண்டு
பெட்டிக்கடை போகாதே.
வெட்டிப்பயல் லைக்குக்காக
ஒட்டடைய போடாதே.
சொட்டைப்பயல் படம் போட்டா
தொப்பி கொழுவிப்பார்க்காதே.
பிட்டு லிங்கை கிளிக்குப்புட்டு
டக்கு பண்ணி மாட்டாதே..

கல்லாமையோட நிண்டு நீயேன்
கட்டிப்பிடிச்சு உருளவேணும்?
மல்லுப்பிடிச்சி ஆருக்கு
என்ன லாபம் சொல்லு பார்ப்பம்?
இல்லுக்கிட்ட வில்லுப்பிடிச்சி
வெண்டவன காட்டு பார்ப்பம்?
சொல்லாத சொல்லைப்போல
நல்ல சொல்லு சொல்லு பார்ப்பம்?

வண்ணாத்திப் பூச்சிபோல
வாழுநாளு கொஞ்சக்காலம்.
எல்லாமே புரிய உனக்கு
இல்ல காணும் ரொம்ப நேரம்.
உள்ளகாலம் கொஞ்சத்தையும்
வெஞ்சினத்தில் கரைச்சுப்புட்டா
இல்லாமப் போனபின்னும்
கரையாது அண்டங் காகம்!

************* 

Photo : Peter Mueller

Comments

 1. Thala pinnitteenga ... Kavidha Kavidha ... Idhavida aazndha karuththulla oru kavidhaya naan ezhudha muyarchi pannirukken ... read here ...

  ReplyDelete
 2. கீரை கடைக்கு எதிர போட்டும்
  வாங்க ஆள்வேணும், உணர்ந்துக்கோ.
  வெட்டிப்பயல் லைக்குக்காக
  ஒட்டடைய போடாதே.

  ReplyDelete

Post a comment

Contact form