2001ம் ஆண்டு கொழும்பில் ஒருமுறை சக்தி FM இன் “அழைத்து வந்த அறிவிப்பாளர்” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் நண்பன் கஜன் மூலமாக கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் நான் இரண்டாவதாக ஒளிபரப்பிய பாடல் இவருடைய பாடல். இவரை அறிமுகம் செய்யும்போது ஒரு கேள்வி கேட்டிருந்தேன். இந்த பாடலை பாடியவரை ஒரு இசையமைப்பாளர் என்று கூறுவீர்களா? இல்லை பாடகர் என்று கூறுவீர்களா? இரண்டு துறைகளையும் ஒரே விகிதத்தில் கலக்கியவர். இளையராஜா, ரகுமானை எடுத்துக்கொண்டால் அவர்கள் முதலில் கம்போசர்ஸ், பின்னர் தான் பாடகர்கள். ஹரிஹரன், SPB, ஷங்கர் மகாதேவனை எடுத்துக்கொண்டால் அவர்கள் முதலில் பாடகர்கள். பின்னர் தான் கம்போசெர்ஸ். ரமேஷ் விநாயகம் கூட முதலில் ஒரு இசையமைப்பாளர் தான். ஆனால் இந்த இராட்ச்சனை அப்படி ஒரு வட்டத்திற்குள் அடக்கிவிட முடியாது. கம்போசிங், பாடல்கள் என்று ஒரு பத்து வருஷங்கள் திரையிசையை கலக்கியவர். ஆம், இந்த வாரம் “உ.. ஊ.. ம ப த ப மா” வில் ஐம்பதுகளில் திரையிசை துறையில், கம்போசிங்கிலும், பாடுவதிலும் தனக்கென மூன்றாம் தலைமுறை ரசிகர்களை கூட உருவாக்கிய திரு A M ராஜா அவர்கள் பாடிய, இசையமைத்த பாடல்களின் தொக