Skip to main content

Posts

அன்புள்ள கம்பவாரிதி ஐயாவுக்கு

  கம்பன் விழா நிகழ்வுகள் இனிதே நிறைவேறியிருக்கும் என்று நம்புகிறேன். விழாவிலே கலந்துகொள்ளமுடியாவிட்டாலும் விழா நாட்களை நானும் கம்பனோடே கழித்தேன். இம்முறை விழா நாட்களில் மிகச்சிரத்தை எடுத்து படிக்க முயன்ற பாடல்கள் வாலி வதை சார்ந்தவை. எனக்கு நீங்கள் அடிக்கடி சொல்லுவதொன்று ஞாபகம் வருகிறது. இராமனது அம்பு தோற்ற ஒரே இடம் வாலிவதை. “செம்மை சேர் இராம நாமம்” எனும் இடத்தில் கம்பன் கூட சற்றே சறுக்கினான் என்று சொல்வீர்கள். வாலிமீது மறைந்திருந்தேனும் கணை வீசும் தகுதியும் துணிச்சலும் எவருக்கும் கிடையாது. அதானாலே தன்மீது ஒரு சரம் பாய்ந்ததும் அவன் ஆச்சரிய மிகுதியில் குழம்புவான். யாரவன் என்று வினவுவான். 'தேவரோ?' என அயிர்க்கும்; 'அத் தேவர், இச் செயலுக்கு ஆவரோ? அவர்க்கு ஆற்றல் உண்டோ?' எனும்; 'அயலோர் யாவரோ?' என நகைசெயும்; 'ஒருவனே, இறைவர் மூவரோடும் ஒப்பான், செயல் ஆம்' என மொழியும். “ஒருவனே, இறைவர் மூவரோடும் ஒப்பான், செயல் ஆம்” எல்லாம் கம்பன் மாத்திரமே பண்ணக்கூடிய நுட்பங்கள். நீங்கள் சொல்லச்சொல்ல, தெரு மணலில் உட்கார்ந்து கேட்டதில் கையில் வைத்திருந்த கச்சான் பக்கற் இளகிப்ப

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி பாத்திமா நலீம்

அன்பின் ஜேகே, முதன் முதலாக ஒரு நாவலுக்கு விமர்சனம் எழுதுகிறேன். நேரம் ஒதுக்கி கட்டாயம் எழுத வேண்டும் என்ற வாஞ்சையோடு எழுதுகிறேன். உங்கள் கொல்லைப்புறத்துக் காதலிகள் மீது எனக்கு அதீத காதல். எழுதிய உங்களை விடவும் சில பக்கங்களையும் சில பந்திகளையும் அதிகம் வாசித்திருப்பேன் என்றே நினைக்கிறேன். இலகு தமிழும் பேச்சு நடையும் அலட்டிக்கொள்ளாத ஆங்கிலமும் கலந்து கட்டி விளாசித்தள்ளி இருக்கிறீர்கள். சிம்பிளாய் உங்களின்ட பாஷையில் சொன்னால் கௌரியின் இன்னிங்க்ஸ் போல. எங்களின்ட பாஷையில் சொன்னால் ஜயசூரிய போல. காதலிகளின் கிராமத்து மணமும், அழகான ஓவியங்களும் எக்ஸ்ட்ரா அழகு. கொஞ்ச நாட்களாகவே வேலைச் சுமைக்குள்ளும் இறக்கி வைக்க மனம் வராது போனது இந்தக் காதலிகளை.

தீராக் காதலன்

  படகு மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது.. கங்கைத்தாய் இப்படி துக்கம் அனுஷ்டித்து இதற்குமுன் எவருமே பார்த்ததில்லை. சிறு அலையோ, அசைவோ, நீரோட்டமோ அற்று எவ்வித சலனமுமின்றி அவள் கிடந்தாள். அந்தப் படகோட்டிகூட நீர்த்திவலைகள் தெறிக்காவண்ணம் மிகப்பக்குவமாக துடுப்பு வலித்துக்கொண்டிருந்தான். ஒப்பாரி முடிந்து தூங்குகின்ற பாலைத் தலைவியின்  இரவு போன்று சுற்றுவட்டாரம் முழுதும் ஒருவித நிசப்தம் நிரவியிருந்தது.   தினமும் ஆற்றிலே பாய்மரமேற்றி மீன் பிடிக்கும் வலைஞர்களின் பாடல்கள் எங்கேயும் ஒலிக்கவில்லை. காலையில் மேலாற்று வழியாக தாவிக்குதித்து சூரிய நமஸ்காரம் செய்யும் வாலை மீன்கள் ஆற்றின் படுக்கையடியில்  இருந்த கற்களுக்குள் ஒளிந்திருந்தன.  கர்ணனின் கவச குண்டலங்களை கவர்ந்து சென்ற நாளது போன்று இன்றைக்கும் சூரியன் தயங்கித்தயங்கி வெளிவரலானான். அவனோடு இழவுவீட்டில் ஊடல் கொண்டன தாமரைச்செடிகள். என்றுமே இணை பிரியாத மகன்றில் பறவைகள் தன் துணைகளைக்காணாமல் தென்திசை தேடி பறந்துகொண்டிருந்தன. இராமன் காடேகிவிட்டான்.

நானாகிய நீ

    நான் மழையானால் நீ கடலாகிறாய். நான் மணலானால் நீ அலையாகிறாய். நான் விழி திறந்தால் நீ இரவாகிறாய். நான் மடை திறந்தால் நீ சுரமாகிறாய். நான் உலையானால் நீ திரையாகிறாய். நான் திரையானால் நீ வெளியேறுகிறாய். நான் வெளியாகையில் நீ சிறை போகிறாய். நான் சிறை பூணுகையில் நீ சிற்றறை ஆகிறாய்.  

ஓ காதல் கண்மணி

  ஒரு இயல்பான நிச்சயத் திருமணம். பரஸ்பரம் அறிமுகமில்லாத இருவரின் ஈகோ, அதெல்லாம் கடந்து ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ளும்போது மலரும் இனிமையான காதல். திருமணத்துக்கு பின்னரான காதல். “மௌனராகம்”. எண்பதுகளில். காதலிக்கிறார்கள். இருவீட்டிலும் சம்மதமில்லை. தன்னிச்சையாக திருமணம் முடிக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியே வந்து குடும்பம் நடத்துகிறார்கள். ஈகோ. ஊடல். சின்னதாய் பிரிவு. அப்போது அவர்களுக்குள்ளேயே இருக்கும் அந்த ஈர்ப்பும் காதலும் புரியவே மீண்டும் சேருகிறார்கள். “அலைபாயுதே”. தொண்ணூறுகளில். காதலிக்கிறார்கள். சேர்ந்து வாழுகிறார்கள். திருமணம் எல்லாம் தேவையில்லாத கொமிட்மெண்ட் என்று சொல்லுகின்ற “லிவிங் இன் ரிலேஷன்ஷிப்” காதலர்கள். இருக்கும்வரைக்கும் சந்தோசமாக இருப்போம். எதுக்கு திருமணம் செய்து தேவையில்லாத சண்டை, ஊடல், கோபம், அங்கலாய்ப்பு எல்லாம் அனுபவிப்பான் என்கின்ற எண்ணத்தை பிரதிபலிக்கும் இளம் ஜோடி. வாழ்க்கை நன்றாகவே போகிறது. ஆனாலும் அதே சண்டை, ஊடல், கோபம் எல்லாமே லிவிங் இன் ரிலேஷன்ஷிப்பிலும் வருகிறது. ஒரு கட்டத்தில், தாம்பத்யம் என்பது வெறும் இருபதுகளோடு முடியும், வேண்டுமானால் பிய்த்துக்கொ