Skip to main content

Posts

Home Sweet Home

  Moon among the clouds Moving fast in fright – like a Fish flees the whale Moving fast in fright. Bewildered run for not knowing why. Beheld it back by cloud clear sky. “Have you been lost?” There heard the voice. That made, moon to stop. It bent down to see the jungle of sea.

நிலவு காயும் முற்றமே என் வீடு

    நிலவு வேகமாய் எங்கோ நகர்ந்து கொண்டிருந்தது. திமிங்கிலத்திடமிருந்து திமிறியோடும் சிறுமீன்போல, முகில்களுக்குள் ஒளிந்து ஒளிந்து நிலவும் விரைந்து கொண்டிருந்தது. “நீயும் தொலைந்து விட்டாயா?”

அஞ்சலிகள்

அஞ்சலிகள் சார்ந்து பல்வேறு குழப்பங்கள் எனக்கு இருந்து வந்திருக்கின்றன. ஒரு மனிதரை வாழும்போதே கொண்டாடவேண்டும். இறந்தபின் செலுத்தப்படும் அஞ்சலிகள் மற்றவர்களுக்கானவை. இப்படி இப்படியெல்லாம் நீ சாதித்துவிட்டுப்போனால் இறந்தபின்னும் வரலாறு கொண்டாடும், ஆகவே சும்மா இருக்காதே என்று இருப்பவனை தூண்டிவிடும் செயல்களே அஞ்சலிப் புகழுரைகள். எஸ்பொ நினைவு நிகழ்விலும் நான் இதனை குறிப்பிட்டிருந்தேன். நாமெல்லாம் இப்படி அவரைக்கொண்டாடும்போது மனுஷன் பக்கத்தில் அமர்ந்திருந்தால் எவ்வளவு சந்தோசப்பட்டிருக்கும் என்று. சார்வாகன் நினைவஞ்சலியில் சாரு ஒருபடி மேலே போயிருந்தார். "திட்டினாலும் பரவாயில்லை, எழுத்தாளர் உயிரோடு இருக்கும்போதே அவரை உட்கார்த்தி வைத்து திட்டுங்கள். நான் செத்தபின்னர் எவனாவது அஞ்சலிக்கூட்டம் வையி, ஆவியா வந்து துரத்தியடிப்பேன்" என்று சாரு பொருமியிருந்தார். முன்னமும் எழுதியிருந்தேன். Tuesdays With Morrie நூலில் வயோதிபரான Morrie தனக்குத்தானே மெமோரியல் சேர்விஸ் செய்வார். நண்பர்கள் எல்லோரும் பூங்கொத்தோடு வந்து அஞ்சலி உரைகள் செய்வார்கள். எல்லாத்தையும் கேட்டு மனுஷன் சந்தோசமாக அன்றைய நாளைக்

ஞானம் சஞ்சிகையின் "ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்"

அனைவருக்கும் வணக்கம். சிறுகதைகள். சிறுகதைகள் என்றால் என்னவென்று இப்போது ஒரு கேள்வி கேட்டால் இங்கிருந்து நூற்றைம்பது வரைவிலக்கணங்கள் வந்து சேரும். ஐம்பது பேர் உள்ள கூட்டத்தில் நூற்றைம்பது வரைவிலக்கணங்கள் வருகிறதென்றால், ஆளுக்கு மூன்று வரைவிலக்கணம் ரெடியாக வைத்திருக்கிறோம் என்று அர்த்தம். இப்போது இதுதான் சிறுகதை என்று தீர்மானமாக எல்லோரும் கூடி ஒரு அறிக்கை விட்டாலும் நாளைக்கும் இல்லை என்று வேறுவிதமாகத்தான் சிறுகதை எழுதப்படும். ஒருவன் ஒரு கதை எழுத உட்காரும்போது இந்த கட்டுரைகளையெல்லாம் வாசித்துவிட்டும் ஆரம்பிக்கப்போவதில்லை. அதனால் எது சிறுகதை என்கின்ற விவாதத்தினுள் நான் செல்லப்போவதில்லை. டைம் வேஸ்ட்.

காதல்

  மாளவிகா அக்கா பயங்கரக் கெட்டிக்காரி. பயங்கர வடிவு. பயங்கரமா இங்க்லீஷ் கதைப்பா. இப்படி பல பயங்கரங்கள் அவரிடம் இருந்தன. அதனாலேயே அவரை எனக்குப் பயங்கரமா பிடிக்கும். அவர் அப்பாவிடம் சேர்வயிங் படிக்கவரும் சமயம் கணக்கு கொப்பியை எடுத்துக்கொண்டுபோய் நானும் பக்கத்தில் உட்காருவேன். ஏற்கனவே செய்து பிழை திருத்திய கணக்குப்பேப்பரை திரும்பவும் அவவுக்கு முன்னாலேயே செய்து முடிப்பேன். “மண்டைடா நீ” என்பார். வெளிப்படை உண்மை நிறுவிவிட்டு கீழே இரண்டு கோடுவேறு சரிவாக சர்க் சர்க்கென்று அடிப்பேன். “ஜீனியஸ்” என்பார். அப்பா கிளையண்டோடு பேசுகின்ற சமயங்களில் செஸ் விளையாடுவோமா? என்று கேட்டு அடம் பிடித்திருக்கிறேன். கோபப்படமாட்டார். நிறைய கதைப்புத்தகம் வாசிப்பார். அம்மாவுக்கு கொண்டுவந்து கொடுப்பார். ஒரு முறை அவர் கொண்டுவந்த “தீப ஒளி”யை வாசித்துவிட்டு நானும் வளர்ந்து ரமணிச்சந்திரன் ஹீரோமாதிரி ஒரு கொம்பனிக்கு நிர்வாகியாக வருவேன் என்று சொன்னேன். இந்த வயசில உனக்கு ரமணிச்சந்திரன் கேட்குதா என்று மெல்லமாய் குட்டுவார். வலிக்கவே வலிக்காது. அடுத்த நாள் அம்புலிமாமா ஒன்றைக் கொண்டுவந்து தருவார். விறகு வெட்டி தங்கக்கோடரி தன்னத

ஈர்ப்பு அலைகள்.

  கடந்த சில நாட்களாக மொத்த உலகமும் பரபரக்கின்ற விடயம் இது. நூறு வருடங்களுக்கு முன்னாலே ஐன்ஸ்டீனால் உய்த்தறியப்பட்டிருந்த ஈர்ப்பு அலைகளை இப்போது அதி நவீன கருவிகள் மூலம் அவதானிக்க முடிந்திருக்கிறது. நாம் எல்லோருமே ஈர்ப்பு சக்தியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன ஈர்ப்பு அலைகள்? வெண்முரசு நீளத்துக்குப் பாகம் பாகமாக விவரிக்கவேண்டியதை அம்புலிமாமா சைசுக்குள் சுருங்கச்சொல்ல முயல்கிறேன். ஈர்ப்பு அலைகளை விளக்குவதற்குமுன்னாலே சார்பு விதிகளைப்பற்றி மேலோட்டமாகப் பார்க்கவேண்டும். நீங்கள் 100km/h வேகத்தில் செல்லும் ஒரு ரயில் வண்டியினுள்ளே அமர்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கு முன்னே உசைன் போல்ட் உட்கார்ந்திருக்கிறார். ரயில் நூறு கிலோமீட்டர் வேகத்தில் சென்றாலும் ரயிலுக்குள்ளே உட்கார்ந்திருக்கும் உங்களுக்கு ரயில் கண்ணாடிகளை மூடிவிட்டால் அதனை உணர்வது கடினம். முன்னே உட்கார்ந்திருக்கும் உசைன் போல்ட் 100km/h வேகத்திலே பயணம் செய்வதுபோலவும் உங்களுக்குத் தோன்றாது. ஏனெனில் நீங்கள் இருவருமே ரயிலுக்குள் இருப்பவர்கள். ரயிலின் சட்டத்தில் நீங்கள் இருவரும் நிலையாக இருக்கிறீர்கள். சீரான வேகத்தில் இயங்கும் ஒ

ஆதிரை

      ஐநூற்றுத்தொண்ணூற்றிரண்டாம் பக்கம். 24 – 04 – 2009 முள்ளிவாய்க்கால் சந்திராவுடைய வாய் மெல்லத் திறந்திருந்தது. உதடுகளில் மண்பருக்கைகள். “ நான் கேக்கிற நிறையக் கேள்வியளுக்கு நீங்கள் ஏன் பதில் சொல்லுறேல்லை …” அத்தார் சந்திராவைக் கட்டிக்கொண்டு வெடித்து அழத்தொடங்கினான். “ அண்ணை வெளிக்கிடுங்கோ …” வெள்ளையன் கையை ஆறுதலாகப் பற்றினான். “ என்னை விடு. நீ போ ” “ ஷெல்லடி கூடுதண்ண … வாங்க போவம் ” “ டேய் … நாயே … ஒருக்காச் சொன்னா கேக்க மாட்டியே …. நீ போ … நான் வரேல்ல ” அத்தார் சந்திராவின் கன்னங்களை வருடினான். குருதி தோய்ந்த விரல்கள் சிவப்புக்கோடுகளை வரைந்தன. “ குடும்பத்தில ஆரும் வேண்டாமெண்டிட்டு என்னை மட்டுமே நம்பி வந்தவளடா … என்ர சுகதுக்கம் எல்லாத்திலயும் பக்கத்தில நிண்டவளை ஒரு அநாதையா விட்டிட்டு வரச்சொல்லுறியே …” அத்தார் சந்திராவின் தலையைத் தூக்கித் தன் மடியில் கிடத்தினான். “ என்னையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாமெல்லே …” அவளுடைய கழுத்தில் தலையைச் காய்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதான். ஷெல் சத்தங்கள் மறுபடியும் கூவின. மறுநாள் காலை , இயக்கத்தின் தமிழர் ‘ புனர்வாழ்வு ’ கழகத்தைச் சேர்ந்த

தீண்டாய் மெய் தீண்டாய் : கண்டேன் கண்டேன்

    இரண்டு நாட்களாக கோடை மழை. இன்றைக்கும் விடிந்தும் விடியாததுமாக மழைச் சிதறல்கள் கூரையில் தாளம் போட்டுக்கொண்டிருந்தன.  சுடச்சுட தேநீரும் கையுமாக யன்னலைத்திறந்தால் கூதல் முகத்தில் அறைந்தது. தோட்டத்து அகத்தியில் தனியனாக ஒரு பறவை குறண்டிக்கொண்டு தூங்கியது. இன்னொரு பறவை பறந்துவந்து மேற்கிளையில் அமர்கிறது. அது வந்தமர்ந்த அசைவில் தண்ணீர் தெறித்து கீழே இருந்த பறவையின் தூக்கம் கலைகிறது. இப்போது தூக்கம் கலைந்த பறவை மேற்கிளைக்குத் தாவுகிறது. தண்ணீர் மீண்டும் சிதறுகின்றது. இப்போது இரண்டு பறவைகளுமே செட்டை அடித்து கிளைக்குக் கிளை தாவி குரங்குச் சேட்டை புரிய ஆரம்பிக்கின்றன. அகத்தி மரமே அதிர ஆரம்பிக்கிறது.  நான்கடி தள்ளி யன்னலினூடே நானிருந்து பார்க்கிறேன் என்ற விவஸ்தையே இல்லாமல் பறவைகள் இரண்டும் காதல் செய்கின்றன.   தேநீர் சுட்டது.

BOX கதைப்புத்தகம்

    கார்த்திகை என்ற அந்தச் சிறுவன் தனது கண்களில் நீர் படரப் பார்த்துக்கொண்டிருந்தான். பின்பு அவன் தனது கைகளை உயர்த்தியவாறு “ ப ப ப ப ப ” எனக் கத்திக் குழறியவாறே அந்த விளையாட்டை நிறுத்துமாறு சிறுவர்களிடம் சைகைகளால் மன்றாடினான். ஆனால் சிறுவர்கள் விளையாட்டை இலேசில் நிறுத்துவதாகயில்லை. அவர்கள் உண்மையிலேயே இராணுவமாகவும் புலிகளாகவும் சனங்களாகவும் காயம் பட்டவர்களாகவும் செத்தவர்களாகவும் உடல்களாகவும் இரத்தமாகவும் தசையாகவும் அந்தப் பெட்டிக்குள் சந்நதத்தில் இயங்கிக்கொண்டிருந்தனர். -- BOX கதைப் புத்தகம்

நாச்சார் வீடு : கடிதங்கள்

நாச்சார் வீடு பற்றிய கட்டுரைக்கு வந்த கருத்துகள். ஜே.கே., பொய்யுக்குச் சொல்லவில்லை. மெய்யாலுமே நாச்சார் வீடுகளில் அபரிமிதமான காதல் உண்டு. பிடித்த வீடும் அதுதான். இங்கே அவுஸ்திரேலியாவில் கூட, வசதி இருந்திருந்தால் நான் சின்ன அளவிலான நாச்சார் வீடு கட்டிக் குடியிருந்திருப்பேன். படங்கள் ஏதாவது பார்க்கும் போது, நாச்சார் வீடு காட்டினால், பாத்திரங்களில் ஒன்றாமல், வீட்டை 'ஆவென்று' பார்ப்பது வழக்கம். நாச்சார் வீட்டு மோகம் உங்களுக்கும் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. வராந்தா வைத்த இங்குள்ள கிராமத்து வீடுகள் கூடப் பார்க்கும் போது ஒரு சந்தோசம் தரும்.  நாம் சின்ன வயதில் பள்ளி விடுமுறைக்குச் சண்டிலுப்பாயில் உள்ள அப்பாச்சி வீட்டுக்குப் போவோம். எங்கள் பொழுது முழுக்கப் பக்கத்து அன்ரி வீட்டுப் பிள்ளைகளோடு விளையாடுவதில் கழியும். அது நீங்கள் சொன்ன அதே குணமும், மணமும் கொண்ட நாச்சார் வீடு. ஜே.கே. நீங்கள் புதுசு, புதுசாக எழுதும் போது, அது எல்லோர் வாழ்விலும் எங்கோ தட்டுப்படுகிறது.  நாம் இந்தியா போகும் போது இதற்காகவே பாலக்காடு கல்பாத்திக்குப் போனோம். திண்ணைகள் வைத்த, கட்டு வீடுகள் கொண்ட நா