Skip to main content

Posts

மெக்ஸிக்கோ

தனியராகச் செய்யும் பயணங்கள் கொடுக்கும் உணர்வுகள் கலவையானவை. நாம் போகும் இடங்கள் யாவிலும் கூட்டம் அலைமோதும். தெரியாத கடைக்காரர்கள். தெருவில் எதிர்படுபவர். பாதையோர பழ வியாபாரி. கடற்கரையில் குழந்தைகளோடு பந்து விளையாடும் இளங்குடும்பம். ஆண்கள். பெண்கள். எல்லோருடனுமே ஏதோ ஒரு உறவை ஏற்படுத்த நம் மனம் நாடும். பழகிய மனிதர்களோடு பேசும்போது ஏற்படும் உற்சாகத்தைவிட இவர்களை அவதானிப்பதில் உருவாகும் உள்ளக் களிப்பு அதீதமானது. அதைக் களிப்பு என்று சொல்லிவிடவும் முடியாது. கொஞ்சம் அங்கலாய்ப்பு, கழிவிரக்கம், தனிமையின் சிறு விரக்தி, அதை ஏற்றுக்கொள்ள மறுத்து வியாபிக்கும் கொண்டாட்ட மனநிலை. தனிமைப் பயணங்களில் இவை எல்லாமே கலவையாக வந்துபோவதுண்டு.

காலத்தின் காலடி

நூலகம் அமைப்பைப் பற்றி எத்தனை தடவை சிலாகித்தாலும் போதாது என்றே தோன்றுகிறது. என்னுடைய ஈழம் சார்ந்த, தமிழ் சார்ந்த பல தேடல்கள் எல்லாம் நூலகம் தளத்திலேயே போய் முடிவடைந்திருக்கின்றன. அநேகமான உசாத்துணைகள் எல்லாம் அங்கிருந்து எடுக்கப்பட்டதுதான். யாழ்ப்பாணப் பொது நூலகம் என்பது எங்களுடைய வரலாற்றுரீதியான ஒரு கலாசார சொத்து என்றாலும் ஒரு முழுமையான நூலகத்துக்கான பலனை உலகம் முழுதும் கொடுத்துக்கொண்டிருப்பது என்னவோ நூலக இணையம்தான். ஒரு அரசாங்கம் செய்யவேண்டியதை, ஐக்கிய நாடுகளின் நிறுவனரீதியான பங்களிப்புடன் செய்யக்கூடிய ஒரு பெரும் முயற்சியை, ஒரு அரச சார்பற்ற அமைப்பு ஒன்று, தன்னார்வப் பணியாளர்களின் உதவியோடு தொடர்ச்சியாக பதினைந்து வருடங்களுக்கும் மேலாகச் செய்வதென்பது ஒரு பெரும் சாதனை. அதுவும் எந்தவித சர்ச்சைகளும் குழப்படிகளும் பொதுவெளிக்குள் வரவிடாத ஒழுங்கமைப்புடன் இருக்கும் அமைப்பு. ஈழத்தில் மேற்கொள்ளவேண்டிய செயற்திட்டங்களுக்கு ஒரு மாதிரி அமைப்பாக நூலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை. சின்ன உதாரணம் ஒன்று. ஒரு சிறுகதைக்காக ஈழத்தின் நாட்டுக்கூத்து முயற்சிகள், சித்தர்பாடல்கள் பற்றித் தேடிக

தறிகெட்ட கதை

நான் படிப்பெல்லாம் முடித்து வேலை செய்ய ஆரம்பித்திருந்த காலம். கொழும்பிலுள்ள ஒரு தனியார் நிறுவனம் அது. நான் இணைந்த காலத்தில் அங்கே பல வெளிநாட்டுக்காரர்களும் வேலை செய்துகொண்டிருந்தார்கள். என் அணியிலும் ஓரிருவர். அவர்களில் ஒருத்திதான் பெல்லா. பெல்லா என்றால் அழகானவள் என்று அர்த்தம். இத்தாலிக்காரி. பெல்லா என் பெயரின் அர்த்தத்தையும் கேட்டாள். ஜேகே என்றால் ஜெயக்குமரன் என்று சொன்னேன். அதாவது வெற்றிகரமான இளைஞன் என்று பொருள். ‘வாவ் ஸோ ஆப்ட்’ என்றாள். ஆப்ட் என்ற சொல்லுக்கு அர்த்தம் அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் தாங்ஸ் சொன்னேன். பெல்லாவோடு, சந்தித்த இரண்டாவது நாளே நான் டூயட்டும் பாடியிருந்தேன். அப்போது கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடல் பேமசாகியிருந்த நேரம். இதையே கிசோகர் என்றால் உண்மையைப் புட்டு வைத்திருப்பான். அந்தக் கைங்கரியம் எனக்கில்லை. எங்கள் அணியிலேயே பிரசாத் என்றவனும் கூட இருந்தான். எனக்கு அவன் சீனியர். மினுவாங்கொடவைச் சேர்ந்தவன். வெறுமனே தற்செயல்தான். பிரசாத்துக்கு இங்கிலிஷ் சுட்டுப்போட்டும் வராது. எனக்கும் வராது. ஆனாலும் ஜொனியன் என்பதால் தெரியாத இங்கிலிஷை பிரிட்டிஷ்காரனுக்

ஏர் எழுபது

ஒரு சின்ன தேடலின்போது ‘ஏர் எழுபது’ எனும் வேளாண் நூலைப்பற்றி அறிய முடிந்தது. வாழ்த்துப்பாடலோடு ஆரம்பித்து பின்னர் கமத்தொழிலின் அறுபத்தி ஒன்பது சிறப்புகள் பற்றி இந்த நூல் பேசுகிறது. சிறப்புகள் என்றால் வெறும் புகழுரைகள் என்றில்லாமல் மிக நுணுக்கமான விடயங்களைப்பற்றியெல்லாம் இந்நூல் குறிப்பிடுகிறது. உழுகின்ற எருதின் பூட்டுக்கயிறு, கழுத்துக்கறை முதற்கொண்டு எவ்வாறு நாற்று நடுவது, போர் அடிப்பது, நெற்கூடை என அத்தனை விசயங்களையும் பாயிரங்களாக எழுதிவைத்திருக்கிறது இந்நூல்.

பேக்கிழவாண்டி - கதை நிகழ்ந்த கதை

லொக்டவுனை எப்படிச் சமாளித்தீர்கள் என்பதுதான் இப்போது எதிர்படுபவர்கள் எல்லாம் கேட்கும் பொதுவான கேள்வியாக இருக்கிறது. எம்மிருவரையும் பொறுத்தவரையில் அக்காலம் நன்றாகவே கடந்துபோனது. காலை எழுந்ததும் எழுத்து. பின்பு கனிவு கொடுக்கும் வீட்டிலிருந்தான வேலை. மாலை முழுதும் நடை. நித்திரைக்கு முன்னர் நெட்பிளிக்ஸ். அப்புறம் அம்மாவும் அப்பாவும்.

டொமினிக் ஜீவா

டொமினிக் ஜீவா எழுதிய சிலுவை என்ற சிறுகதையிலிருந்து ஒரு பகுதி. தனக்கு தினமும் கடிதம் கொண்டுவரும் தபால்காரர் காலமானதும் அவருக்கு எழுத்தாளர் எழுதும் பதில் கடிதம்தான் இக்கதை. இது எழுதப்பட்டது சித்திரை, 1959ல். இங்கே எல்லாமே எழுதப்பட்டுவிட்டன. நாம்தாம் வாசிப்பதில்லை. ஜீவாவுக்கு நம் அன்பும் மனமார்ந்த நன்றிகளும்.

பேய்க்கிழவாண்டி - இறுதிப் பாகம்

முதற்பாகம் தாத்தா யோசித்தார். “ஒரு கப் மாட்டு மூத்திரம் கிடைக்குமா? வந்ததுக்கு குடிச்சிட்டுப்போறன்” ஸீ. நான் இந்தச் சம்பவத்தை எழுதி வெளியிட முயற்சி செய்யாததற்குக் காரணம் இதுகள்தான். தாத்தா பேசின பேச்சுகள் எல்லாவற்றிலும் ஒரு அரசியல் சமூக பிரச்சனையைப் பேசுவதற்கான லீட் வந்துகொண்டேயிருந்தது. ஆனால் நான் எழுதினால் வெறுமனே லீடுக்காகத்தான் தாத்தாவைப் பேசவைத்தேன் என்பார்கள். வேண்டாம். உண்மையைச் சொல்லும்போதே இவர் புனைவாக்குகிறார் என்று ****க் கதை கதைப்பார்கள். Again, ஆண்பால் சார்ந்த வசை. இந்தா பிடி விண்மீனை.