Skip to main content

iWoz

images



அப்பிள் நிறுவன ஸ்தாபகர்களில் ஒருவரான ஸ்டீவ் வோஸ்னியாக்கின் சுயசரிதம்.  இங்கே அவுஸ்திரேலிய நூலகம் ஒன்றில் வெட்டியா நேரம் போக்காட்டாலாம் என்று நுழைந்த நேரத்தில் கண்ணில் பட்டது. இரண்டு மணிநேரத்தில் ஒரே மூச்சில் வாசிக்கவைத்த புத்தகம்.


ஸ்டீவ் ஜொப்ஸ், வோஸ்னியாக் இருவரும் நண்பர்கள் என்பதையே நம்ப முடியவில்லை. நேர் எதிரானவர்கள். May be that’s why it worked well. வோஸ்னியாக் நேர்மையான, introvert IT geek. தந்தை பனிப்போர் காலத்து அமெரிக்க விண்வெளியியல் நிபுணர்.  நான்கு ஐந்து வயதிலியே இலத்திரனியல் பொருட்களோடு விளையாடும் சந்தர்ப்பம். பதின்ம வயதில் HP வேலை. ஸ்டீவ் ஜொப்ஸ் சந்திப்பு, குட்டி குட்டி ப்ரொஜெக்ட்களில் இருந்து ஆரம்பித்து, மைக்ரோ ப்ரோஸசர், இன்டர்கிரேட்டட் ப்ரோஸசர். PROM என ஆச்சர்யங்களை செய்து Apple I கணணி மூலம் பணம் பார்த்து Apple II மூலம் மில்லியனையர் ஆனாலும் வோஸ்னியாக்குக்குள் இருந்த, இலத்திரனியல் பொருட்களை ஆர்வத்தோடு விளையாடும் குழந்தை இறுதிவரை வளர்ந்து பெரியவனாகவேயில்லை. அதனால் உயர் பதவிகளை மறுத்து தொடர்ந்து எஞ்சினியராக வாழுந்து ஒரு கட்டத்தில் மீண்டும் பட்டப்படிப்பை தொடர்ந்து ஆசிரியராக போய் … இன்றைக்கும் எஞ்சினியராகவே இருப்பது, ஆளாளுக்கு passion எப்படி மாறுபடும் என்பதை புரிந்து கொள்ள உதவியது.

Yarl IT Hub, எப்படிப்பட்டவர்களை தேடிக்கண்டுபிடிக்கவேண்டும் என்று ஒரு இடத்தில் அட்வைஸ் பண்ணுகிறார்.
733384-20120514woz2"Most inventors and engineers I've met are like me--they're shy and they live in their heads. They're almost like artists. In fact, the very best of them are artists. And artists work best alone--best outside of corporate environments, best where they can control an invention's design without a lot of other people designing it for marketing or some other committee."
வாழ்க்கை முழுதும் ப்ரோகிராமிங் செய்ய தான் எனக்கு விருப்பம். ஒரு ப்ரோப்ளத்தை தனியனாக ஜாவாவில் எழுதி தீர்ப்பது கொடுக்கும் சந்தோசம் எந்த மானேஜ்மென்ட் வேலையிலும் கிடைக்காது என்று நான் சொல்லும்போதெல்லாம் அலுவலகத்தில் ஆச்சர்யத்துடன் ஐந்துவை பார்ப்பது போல பார்ப்பார்கள். சம்பளம் முக்கியம் தான். ஆனால் முழித்திருக்கும் வாழ்நாளில் அரைவாசி நேரம் செய்யும் வேலை, மனதுக்கு சந்தோஷமாக முதலில் இருக்கவேண்டும். “என்னை விட்டு ஓடிப்போக முடியுமா?” என்று சுசீலாவும் சீர்காழியும் பாடுவதை இயர்போனில் கேட்டுக்கொண்டு ஜொலியாக செய்யும் ப்ரோகிராமிங் வேலை அப்படிப்பட்டது. டிவைன்.

மனம் ஓரிடத்தில் நிலைக்காது பலவித சிந்தனைகளிலும் போலிகளிலும் நிஜங்களிலும் அலை பாய்வதேன்? என்ற சிக்கலானகேள்வி ஒன்றுக்கு வோஸ்னியாக் வோர்ட்ஸ்வோர்த்தை மேற்கோள் காட்டி பதில்சொல்கிறார்.

"A mind forever voyaging through strange seas of thought...alone."
Ouch!

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக