Skip to main content

Posts

குவாண்டம் கொம்பியூட்டிங்

"I think there is a world market for maybe five computers." 1943ம் ஆண்டு ஐ.பி.எம் நிறுவனத்தின் தலைவர் தோமஸ் வாட்சன் அருளிய வார்த்தைகள் இது. எவ்வளவு அபத்தம். பின்னாளில் புகழ்பெற்ற வாட்சன் ஆய்வுகூடம் அவர் பெயரிலேயே நிறுவப்பட்டது. ஐபிம் அப்போது ஒரு பெரும்மாதா. பின்னாளில் எழுபதுகளில் அப்பிளும், மைக்ரோசொப்டும் பெர்சனல் கொம்பியூட்டர் என்ற இராட்சசனை உலகம் முழுதையும் ஆள வைக்கப்போகிறார்கள் என்பதை நாற்பதுகளிலேயே வாட்சன் அறிந்திருக்க ஞாயம் இல்லை. "மூரேயின் விதி (Moore's law)", கணனித்துறையில் இருப்பவர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். இரண்டு வருடங்களுக்கொருமுறை ட்ரான்சிஸ்டர்களின் வளர்ச்சி இரட்டிப்பாகும் என்றார் மூரே. வளர்ச்சி என்றால் இங்கே அது வினைத்திறன். அளவில் சிறுத்து வினைத்திறனில் இந்த கணனித் தொழில் நுட்பம் வளர்ந்துகொண்டேயிருக்கிறது. அந்த வேகம் அபரிமிதமானது. இதே ரேட்டில் போனால் இன்னும் சில பத்து வருடங்களில் மூரேயின் விதிப்படி ட்ரான்சிஸ்டர் அணுவின் சைஸுக்கு போகவேண்டும். வினைத்திறன் பல மடங்கு அதிகமாகும். சொல்லப்போனால் ட்ரான்சிஸ்டர் என்ற தொழில்நுட்பமே பென்ஷன் எடுத்துவிடவ

பச்சை மா

“எத்தினை மணிக்கு செத்துப் போனீங்கள்?” “இப்பத்தான் தம்பி … ஒரு அரை மணித்தியாலம் இருக்கும்” “சரியான டைம் சொல்லுங்கோ”. இண்டர்கொம் கேட்ட கேள்விக்கு நித்தியானந்தன் விழித்தான். மணிக்கூட்டைப் பார்த்தான். முள்ளு மிக வேகமாக சுழன்றுகொண்டிருந்தது. இது எந்த ஊர் மணிக்கூடு என்ற குழப்பம் வந்தது. நித்தியானந்தன் தூக்கு மாட்டிய சமயம், அடுத்த அறையில் மனைவி கோமதி கொம்பியூட்டரில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது. ஒரு ஏழு ஏழரை இருக்கலாம். நித்தியானந்தன் ரொட்டிக்கு மா பிசைந்துகொண்டிருந்தபோது எடுத்த திடீர் தற்கொலை முடிவு.  மா இன்னமும் அவன் கைகளில் ஒட்டியிருந்தது. முதல்தடவை மாட்டும்போது சுடுதளம் பிசகி, தவறி விழுந்து, இரண்டாம் தடவை சரியாக மாட்டும்போதுதான் அது சரி வந்தது. நன்றாக ஞாபகம் இருக்கிறது. அப்போது நேரம்,

படித்தோம் சொல்கின்றோம் - முருகபூபதி

  யாழ்.குடாநாட்டின் ஒரு கால கட்டத்தின் ஆத்மாவை பிரதிபலிக்கும் கொல்லைப்புறத்து காதலிகள் புதிய தலைமுறைப்படைப்பாளி ஜே.கே.யின் பால்யகால வாழ்வனுபங்களின் பதிவு   படலை வெளீயிடாக இந்த ஆண்டு(2014) இறுதிப்பகுதியில் வெளியாகியிருக்கும் மெல்பனில் வதியும் ஜே.கே. என்ற ஜெயக்குமரன் சந்திரசேகரத்தின் பால்ய கால நினைவுப்பதிவாக வெளியாகியிருக்கும் அவரது என் கொல்லைப்புறத்து காதலிகள் நூலைப்பற்றி அதனைப்படித்துப்பார்க்காமல் ஒரு வாசகர் பின்வரும் முடிவுக்கும் வந்துவிடலாம். ஜே.கே . என்ற எழுத்தாளரின் வாழ்வில் வந்து திரும்பிய நிஜக் காதலிகள் பற்றிய கிளுகிளுப்பூட்டும் கதைகளாக அல்லது கட்டுரைகளாகத்தான் இந்த நூலின் உள்ளடக்கம் இருக்கலாம் என்ற உத்தேச முடிவுக்கு அவர்கள் வரலாம்.

அன்போடு அழைக்கிறோம்

ராஜாக்களின் சங்கமம்

    பதின்மத்தில் எப்போதும் என்னோடு நெருங்கிய தோழிகளாக பயணித்த இருவர் "என் கொல்லைப்புறத்துக் காதலிகளில்" வருகிறார்கள்.  ஒருவர் "ஏகன் அநேகன்" இளையராஜா. அடுத்தது "என் மேல் விழுந்த மழைத்துளியே" ஏ. ஆர். ரகுமான்.  இசையை ரசிக்கவைத்தவர்கள். அதேபோல  தோழர்கள் "இருவர்".  அகிலன், கஜன்.  அந்த மூன்று அத்தியாயங்களையும் எழுதும்போது கிடைத்த சந்தோசம் கொஞ்ச நஞ்சமில்லை. எல்லாப்பாடல்களையும்கேட்டுக்கொண்டே, ரசித்து ரசித்து எழுதிய தருணங்கள், எழுத்துப் பிழை திருத்த உட்கார்ந்தால் கூட, திரும்பவும் புதிதாக ஒரு பந்தி முளைத்துவிடும். புத்தக அறிமுகத்துக்கென்று ஒரு நிகழ்ச்சி செய்வோம் என்று முடிவெடுத்தகணம், அகிலனையும் கஜனையும் ஒரே மேடையில் ஏற்றி அழகு பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் கஜனை சிங்கப்பூரிலிருந்து அழைப்பதுமுதல், அப்படிப்பட்ட மேடைக்குரிய அரங்கைத் தயார்படுத்துவது என எல்லாமே என் சக்திக்கு மீறிய விஷயங்கள் என்று விளங்கியது. மெதுவாக ஜூட் அண்ணாவிடம் இதைப்பற்றிக் கேட்டேன். சென். ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர் சங்கத்துக்கூடாக ஒரு கை கொடுப்பதாக சொன்னார். இன்னொரு கை வ

"குட் ஷொட்" சிறுகதை ஒலி வடிவில்.

அவுஸ்திரேலியாவின் SBS வானொலியைச் சேர்ந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ரைசல் அவர்களின் முன் முயற்சியில் " குட் ஷொட் " சிறுகதை வானொலி நாடகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இனி சிறுகதை. இதைத்தொடர்ந்த என்னுடைய வானொலிப்பேட்டி. சிறுகதைக்கு உயிர்கொடுத்த ஸ்ரீபாலன் மற்றும் பாலசிங்கம் பிரபாகரனுக்கும், இதைத் தயாரித்தது மட்டுமல்லாமல், படலையின் ஏனைய சிறுகதைகளை வாசித்து தன்னுடைய விமர்சனங்களை கொடுக்கின்ற ரைசல் அவர்களுக்கும், SBS வானொலிக்கும் மிகவும் நன்றிகள். இந்த சிறுகதையின் முடிவுக்கான முடிச்சைப் போட்டுக்கொடுத்த கேதாவுக்கும் நன்றிகள்.

“என் கொல்லைப்புறத்துக் காதலிகள்” - கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்களின் வாழ்த்துரை.

  சின்ன வயது முதல், கோயில் வீதிகளில், குருமணல் காற்சட்டையில் படிய அமர்ந்திருந்து, தமிழ் இலக்கியத்தையும், சுவையையும், நயத்தையும் இவரிடமிருந்தே கேட்டு ரசித்தேன். அவரிடமிருந்து பாராட்டு பெறுவது பேருவகை கொடுக்கிறது. தொடர்ந்து எழுதுவது ஒன்றே இவருக்கும், என் எழுத்தில் நம்பிக்கைவைத்து ஊக்குவிக்கும் அனைவருக்கும் நான் செய்யக்கூடிய ஒரே கைம்மாறு. எழுதுவேன்.   “என் கொல்லைப்புறத்துக் காதலிகள்” புத்தகத்தை இணையத்தில் வாங்குவதற்கு இங்கே அழுத்தவும்.   நேர்காணல் கண்டு காணொளியை தயாரித்துத் தந்த நண்பன் கேதாவுக்கு மிக்க நன்றி.

அன்றும் இன்றும் குரு

  அவுஸ்திரேலிய கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழாவில், கலாநிதி ஸ்ரீ பிரஷாந்தன் தலைமையில் இடம்பெற்ற "அன்றும் இன்றும்" என்ற கவியரங்கத்தில் "குரு" பற்றி படிக்கப்பட்ட கவிதை. அன்றும் இன்றும் என்றும் என் குருவாய் அமைந்தவர். அவர் அருளாலே அவர் தாள் வணங்கிப் பணிகிறேன். அவைத்தலைவர் அண்ணனுக்கும் பெண்ணான நட்புக்கும் நட்பு சொல்லும் பெண்ணுக்கும் காதல் சொல்லும் தலைவனுக்கும் இனியமாலை வந்தனங்கள். அள்ள அள்ள குறையாத தெள்ளு தமிழ் இயல் கேள அள்ளு கொள்ளை யாகவந்து அமர்ந்தி ருக்கும்அன்பர்கள் அனைவருக்கும் வணக்கங்கள். ஆயினும் என்ன ஒரு குறை! மாலைப்பொழுதின் மயக்கமோ? மதிய உணவின் கிறக்கமோ? இல்லை மயக்கும் சபை மொழிகளோ? நானறியேன். கரத்தை எடுத்து உரத்துத் தட்ட தயக்கமென்ன? காசா? பணமா? கலக்கமென்ன? கவிதை கை வசமாவது விரைவில் வேண்டும். கரவோசை கொடுங்களேன்.

தமிழ் அவுஸ்திரேலியன் நேர்காணல்

நன்றி கானா பிரபா  கேதா  தமிழ் அவுஸ்திரேலியன்