Skip to main content

உலகப் பழமொழிகள்



மொழிபெயர்ப்புகளில் கீதா மதிவாணன் அக்காவுக்கு எப்போதுமே தனியிடம் உண்டு. நிறைய அவுஸ்திரேலிய படைப்புகளை அவர் மொழிபெயர்த்திருக்கிறார். அண்மைக்காலங்களில் அவர் பல்வேறு சமூகங்களில் வழக்கத்திலுள்ள் பழமொழிகளைத் தமிழ்ப்படுத்தித் தந்துகொண்டிருக்கிறார். மூலம் சிதறாமலும் அதே சமயம் மொழிபெயர்ப்பு என்று தெரியாதவண்ணமும் அவை மிக இயல்பாக இருக்கின்றன.
உதாரணத்துக்கு சில.
முட்டாள்கள் சந்தைக்குப் போகாவிடில் மோசமானவை எல்லாம் எப்படி விற்பனையாகும்? - ஸ்பெயின்
கழுதையிடம் பூக்களை முகர்ந்துபார் என்று நீட்டினால் அது தின்றுவிடும். - ஆர்மீனியா
சேவலைத் தலைவனாய்க் கொண்டு நடந்தால் கோழிப்பண்ணைக்குத்தான் வழி நடத்தப்படுவாய். - லெபனான்
பட்டப்பகலை அரசன் இரவென்று சொன்னால், அதோ நட்சத்திரங்கள் என்று சொல். - அரேபியா
உலகம் முழுதுமே மனிதர்களும் குணங்களும் ஒரேமாதிரியாகவே இருந்திருக்கின்றன என்பது இவற்றை வாசிக்கும்போது மீளவும் உறுதிப்படுத்தப்படும். மிக எளிமையான இவ்வகை பழமொழிகளை நம் தமிழ்போட்டிகளில் பயன்படுத்தக்கொடுக்கலாம். மாணவர்களிடம் இவற்றின் ஆங்கில வடிவத்தைச் சொல்லி தமிழில் மொழிபெயர்க்குமாறு கேட்கலாம். கீதா அக்கா இதனை ஒரு புத்தகமாகக் கொண்டுவரப்போவதாகச் சொல்லியிருக்கிறார். இந்தப் புத்தகம் எல்லா வயதினருக்கும் ஏற்ற அற்புத புத்தமாக இருக்கும். வீடுகளின் தேநீர் ஸ்டூலில் வைத்தால் அவ்வப்போது வீட்டுக்காரரும் வருபவர்களும் எடுத்து வாசிக்கமுடியும். இவற்றைத் தொகுத்து ஒரு முகநூல் பக்கத்தில் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு பார்க்கலாம் என்றிருக்கிறார். மனம் நிறை வாழ்த்தும் நன்றியும்.
கடைசியாக இன்னொரு உதாரணம்.
‘நல்ல நாயும் வெறி நாயும் சண்டையிட்டால் நல்ல நாயின் காதுகள்தான் கிழியும்’ - மியான்மர்


Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘ உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம் ’ கதை வாசிக்கப்படுகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது. நிகழ்வு அறிவித்தல் _______________ அன்புக்குரியவர்களே! அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.