சாலையோர தேநீர் கடை கோடை மழை நாசி நெடி தாவாரத்தில் இரண்டு கதிரை நானிருக்க இழுத்துப்போட்டான் ஏ ஆர் ரகுமான் பிடிக்கும் என்றான். ராஜா என்றான் சுஜாதா என்றான். ரசல் பீட்டர் டோம் ஹான்ஸ் என்றான் ராஜபக்ஸ ஒரு ஷிட் என்றான். ராஸ்பெரி கொஃபி இரண்டு நாக்கு புரள ஓர்டர் செய்தான். “70 பர்சன்ட் பொருத்தமாம்” "இந்த பேரண்ட்ஸ் ஆர் சோ சில்லி” என்று சொல்லி சிரித்தான். “நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்” - என்று மழையை பார்த்து கவிதை சொன்னான். “Enough is enough. “ “வா போய் நனைவோம்” என்றேன். “சட்டை நனைஞ்சு சளி பிடிக்கும், லேட்டர்” என்றான் “போடா புளுகு மூட்டை”