பொதுக்கழிப்பறையில் இருக்கும்போது பக்கத்து அறைக்காரன் நம் "சவுண்டை" கேட்டால் அந்தரமாக இருக்குமே என்று நினைக்காதவர்கள் இருக்கமாட்டோம். மூன்று வருடங்களுக்கு முன்னர் எழுதிய சிறுகதை இது. "பண்புடன்" இதழுக்காக ஸ்ரீதர் நாராயணன் ஒரு சிறுகதை கேட்டபோது எழுதிக்கொடுத்தது. சென்றவருடம் "என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" நூல் வெளியீட்டு புரோமஷனுக்காக "தமிழ் அவுஸ்திரேலியன்" பத்திரிகை அவுஸ்திரேலிய தேசிய வானொலியான எஸ்.பி.எஸ் இல் ஒரு பேட்டியை ஓழுங்கமைத்து கொடுத்தது. பேட்டியை எடுத்தவர் றைசல். என் அதிர்ஷ்டம், றைசல் வெறுமனே கடனுக்கு பேட்டியை எடுக்காமல், பேட்டிக்கு முன்னர் படலையை ஒரு நோட்டம் விட்டிருக்கிறார். அப்போதே இந்த "கக்கூஸ்" மற்றும் "குட் ஷாட்" சிறுகதைகள் அவருக்கு பிடித்துவிட்டது. அவற்றை வானொலி வடிவமாக்க அனுமதி கேட்டார். சந்தோஷமாக சரி என்றேன். குட்ஷொட்டை சென்ற வருடமே ஒலி வடிவமாக்கினார். ஆறு மாதங்கள் கழித்து "கக்கூஸ்" ஒலிவடிவமாகியிருக்கிறது. றைசலின் நெறியாள்கையில் குரல் தந்திருப்பவர் பாலசிங்கம் பிரபாகரன். வழமைபோலவ...