என் கொல்லைப்புறத்துக் காதலிகள் பற்றி டிலக்சனா

Mar 10, 2015

இது கொல்லைப்புறத்துக் காதலிகள் வாசித்தபிறகு சிலநாட்கள்/கிழமை சென்றபின் என் மனதிலே உள்ள பதிவுகளை உங்களுக்கு கூறுவதற்காக எழுதுகிறேன். தமிழில் டைப் பண்ணே நீண்ட நேரம் எடுக்கும் என்பதற்காக என் கைப்பட எழுதுறன்! 
- நிறைய நினைவுகளையும் கடந்த கால இரை  மீட்டல்களையும் உங்கட கதைகளை வாசிக்கும்போது உண்டரக்கூடியதாக இருந்தது! நன்றி. “இலங்கைத் தமிழில்” ஒரு நல்ல எழுத்தாளனை அவரது படைப்புகளை வாசிக்க எதேச்சையாக கிடைத்த சந்தர்ப்பம். யாழ்ப்பாணத் தமிழ் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. நான் வவுனியாவை பிறப்பிடமாகக் கொண்டவள்! வவுனியா மக்களின் தமிழும் தனித்துவமானதுதான்.  தமிழ் என்றால் யாழ் மட்டுமே என்று குறுக்குவதில் விருப்பமில்லை.
- எக்ஸாமுக்கு போறதுக்கு முதல் சாமி கும்பிடுறது. எல்லா சாமியையும் ஒரேயளவு கும்பிடுறது. இதே பழக்கம் எனக்கும் இருக்கு! வாசிக்கேக்க பஸ் முழுவதும் சிரிச்சுக்கொண்டே வந்தன். 
- குட்டியன் கதை செம. “Touching”. என்ன எண்டு சொல்லத் தெரியேல்ல.
- எல்லோரும் கூடுதலாக உங்கட எழுத்துக்களை பாராட்டியிருப்பார்கள். So மேலும் பாராட்டுவதைவிட இன்னும் நீங்கள் சில Topics பற்றி எழுதவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
1) நீங்கள் சிங்கப்பூரில் இருந்ததெண்டபடியால், இங்குள்ள மக்கள், அவர்களின் நினைவுகள் (This is just to see how you captured the moments and your opinion compared to mine, ha ha)
2) வன்னி வவுனியா மக்களைப்பற்றியும் எழுதவேண்டும். பரந்துபட்டு எழுதவேண்டும். உங்களுக்கு அனுபவம் இருக்கலாம். நீங்கள் ஆராய்ந்து எழுதுபவர் என்றும் தெரியும்.
3) உங்கள் எல்லா male, female characters உம் “குமரன்”, “ஆங்கில இலக்கியம்” படித்தவனாக இருக்கவேண்டும் என “fix” பண்ணாமல் எல்லாவிதமான மனிதர்களையும் சூழலையும் பற்றி எழுதுங்கள்.
எதுவும் தவறெனின் மன்னிக்கவும். இப்பத்தான் உங்கட blog வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.
--- டிலக்சனா.

12

Contact Form