வியாழமாற்றம் 30-05-2013 : குரு பெயர்ச்சி பலன்கள்!

 

guru_aishwariya-rai

மாதா, பிதா, குரு, தெய்வம், இவிங்கள மதிக்காதவங்க வாழ்க்கைல உருப்படமாட்டாங்க என்று தில்லுமுல்லுவில் சூப்பர் ஸ்டார் சொல்லுவார். இந்த லிஸ்டில் மாதா பிதா பிரச்சனை இல்லை. ரெண்டு பேருமே எப்போது வேதக்கோயிலுக்கு போனாலும் இருப்பார்கள்.  இந்த தெய்வம் வேற எங்கேயுமே இல்லை, நமக்குள்ளேயே இருக்கு என்றார் மொக்கை பிஃகர் கிரனை கூட கோட்டை விட்ட நம்ம நல்லசிவம் aka நல்லா. ஸோ இந்த கியூல மூணாவதா நிக்கிற குரு தான் கொஞ்சம் கவனிக்கபடவேண்டிய ஆசாமி என்பது கலட்டி சந்திக்கு பக்கத்தில் இருக்கும் குச்சொழுங்கையில் வசித்த யாழ்ப்பாணத்து சித்தர் ஒருவர் பதினெட்டாம் நூற்றாண்டில் சொல்லிவிட்டு போய்விட்டார்.

வியாழன்,  இவர் வருடா வருடம் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு தாவும் பழக்கத்தை கொண்டவர். அந்த ராசிக்கு தாவிய பின் அங்கிருந்து எல்லா ராசியையும் பார்த்து ஒரு இளிப்பு இளிப்பார். அவர் பார்த்து இளிக்கும் இராசிகள் அந்த வருஷம் நல்ல பலனையும் ஏனைய ராசிகள் அந்த வருடம் முழுதும் பழிப்பையும் சுமக்கும் என்பது ஒரு ஐதீகம். இட்ஸ் ட்ரூ மா.

வியாழமாற்றம் 24-05-2013 : ஒளியில் ஒரு கவிதை!


247087_10151611421145791_2031778702_n
“சுண்டுக்குளி வேற ...கேட்கவா வேணும்?.. சின்னனில இருந்தே படம் காட்டி பழகியிருப்பாய்!”
சொன்ன குமரனை திரும்பிப்பார்த்து செல்லமாய் முறைத்தாள் மேகலா. முறைக்கும்போதும் எப்படித்தான் அழகாய் இருக்கிறாளோ! ஹேர்லி ஹேர், கார் கண்ணாடியை இறக்கும்போதேல்லாம் காற்றிலே நெற்றிக்கு முன்னால் சரிந்துகிடப்பது காற்றில் பின்பக்கம் அலைந்து போய் விழுகின்ற விவரங்கள் எல்லாம் வியாழமாற்றத்துக்கு தேவையில்லை. ஆனாலும் எழுதாமல் விட்டாலும் திட்டுவாள்.
“எதிலையாவது உங்களை விட டலண்டா இருந்தா உடனேயே நக்கலடிப்பீங்களே..”
“ரிலாக்ஸ் மேகலா ... சொல்லு ..  இந்த போட்டோ .. அதுக்காக சாப்பாடு தண்ணி மறந்து கமராவோட கிடக்கிறது .. எல்லாமே .. யாரு உனக்கு இன்ஸ்பிரேஷன்”
“…பேபி போட்டோ மாமா”
“ஹூ? .. யாரு?”

வியாழமாற்றம் 09-05-2013 - இளிச்ச வாய் பூனை

 

eye

 

சிவகாமியும் இளிச்ச வாய் பூனையும்!

கோழிக்கூட்டுக்கு பக்கத்தில் நின்ற சின்ன நெல்லி மரத்தின் நடுக்கொப்பில் இருந்தபடி சிவகாமி விக்கி விக்கி அழுதுகொண்டிருந்தாள். புலமைப்பரிசில் பரீட்சைக்கு இன்னமும் நான்கு மாசங்கள் கூட இல்லை. ஆனால் இந்த சிட்டை கணக்கு மட்டும் சிவகாமிக்கு சமப்படுதே இல்லையாம். படிக்கும்போது அப்பா தலையில் ஒரு குட்டு போட்டு விட, கிளுக் என்று அழுதபடியே அதே வேகத்தில் நெல்லி மரத்தில் ஏறியவள் தான். வீட்டில் உள்ளவர்கள் கேட்கும் டெசிபலில் இன்னமும் அழுதுகொண்டிருந்தாள்.

வியாழமாற்றம் 02-05-2013 : கள்ளக்காயச்சல்

 

604145_436509086438264_1618075806_n

உரைநடை

இது ஒருவித ரெடிமேட் காய்ச்சல்.  ஹோம் வோர்க் செய்யாமல் விடுவது தொடக்கம் மூலைவீட்டு லாவண்யா சாமத்தியப்படுவது வரைக்கும் பலவேறு காரணங்களுக்காக வரும். முதல்நாள் அன்று எந்த சிலமனும் இல்லாமல் கம்மென்று இருப்பவன் விடியக்காலமை ஏழு மணி தாண்டியும் எழும்பவில்லை என்றாலே சம்திங் ரோங் என்று அம்மாவுக்கு தெரிந்துவிடும்.

“அப்பன் எழும்படா”