சிறுவயதில் உங்களுக்கு அந்த பெண்ணை பிடித்திருக்கும்! ஒரு பதினைந்து வயது என்று வையுங்கள். அப்போது அவளுக்கு தெரியாமலேயே அவளை நோட்டம் விட்டிருப்பீர்கள். கணக்கே எடுத்திருக்கமாட்டாள். அவள் போகும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து, அத்தனை இளையராஜா டூயட்களையும் அவளோடு வயற்காட்டிலோ இல்லை இண்டோர் செட்டிலோ பாடிப்பார்த்து இருப்பீர்கள். ஒரு மழைக்கால இரவில் “புதுவெள்ளை மழை” பாட்டை ரேடியோவில் போட்டுவிட்டு அவளின் கண்கள் இரண்டையும் உங்கள் கைகளால் பொத்திக்கொண்டு கூட்டிச்சென்று காஷ்மீர் பனிமலைகள் காட்டி இருப்பீர்கள். அவளும் சொக்கிப்போய் சுத்தி சுத்தி பார்க்க, கண்ணாடி சில்லுகளாய் இசை சிதறி கிறங்கடிக்கும். ஆனால் நிஜத்தில் அவள் நேரில் வந்தால் அப்போது தான் பனைமரத்தில் எத்தனை நொங்குகள் இருக்கின்றன என்று எண்ணியிருப்பீர்கள். சரி, காலம் ஓடிவிட்டது, இப்போது வளர்ந்து பெரியவன் ஆகி விட்டீர்கள். ஒருநாள் திடீரென்று அவள் எதிரே வந்து நிற்கிறாள். ஒரு உறவுக்கார திருமணம் என்று வைய்யுங்களேன்! நீங்கள் நினைத்த கலரிலேயே சேலை, நீங்கள் நினைத்ததுபோலவே சிரிக்கிறாள். உங்களை ஞாபகம் வைத்து பேசுகிறாள். ரோஜா மதுபாலா போல “சிறு பறவை நீய