Skip to main content

போயின … போயின … துன்பங்கள்!

 

dentist-love-41

“நினை பொன் எனக்கொண்ட பொழுதிலே”

சுசீலா பாடும்போது தன்னை அறியாமலேயே குமரன் தலையை சன்னமாக ஆட்டியபடி புன்னகைத்தான். இயர்போனை மீண்டும் சரியாக காதில் அழுத்திவிட்டு, iTunes இல் சவுண்டை கொஞ்சம் கூட்டிவிட்டான்.  “எந்தன் வாயினிலே அமுதூறுதே, கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போழ்திலே” எனும்போது டிஷூ பொக்ஸில் இருந்து ஒரு டிஷுவை எடுத்து வாய் துடைத்தான். “கண்ணம்மா கண்ணம்மா” என்று ஸ்ரீனிவாசுடன் சேர்ந்து முணுமுணுத்தபடியே service.doBnExtract(req);    லைனை செலக்ட் பண்ணி Alt + Ins கீயை அழுத்தி try, catch block போட்டான். கைகள் எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் டைப் பண்ணிக்கொண்டிருக்க, சிறிது நேரத்தில் பாடல் முடிந்ததை உணர்ந்தவனாய், மீண்டும் விண்டோ சுவிட்ச் பண்ணி, பாட்டை ரீபிளே பண்ணிவிட்டு, ரிப்பீட் மோடுக்கு மாற்றினான். ஜாவாவுக்கு திரும்பி லொகர் சேர்த்தான்.

டாஸ்க் பாரில் ஸ்கைப் ப்ளின்க் பண்ணியது. முன் டெஸ்க்கில் இருக்கும் ருச்சித் தான். இயர்போன் எடுக்காமலேயே நிமிர்ந்து என்ன? என்று அவனை பார்த்து தலை உயர்த்தினான். ருச்சித் ஏதோ சொன்னது போல, கேட்கவில்லை. iTunes ஐ pause பண்ணிவிட்டு மீண்டும் உயர்த்தினான்.

“யுவர் போஃன் இஸ் வைப்ரேட்டிங்”

“ஓ” என்றபடி அவனுக்கு “தாங்க்ஸ்” சொல்லிவிட்டு கவனித்தால் போனில் அம்மா. ஏழு மிஸ் கோல்கள், அவசரம் என்று சொன்னது. அம்மா அலுவலக நேரத்தில் கோல் பண்ணமாட்டாள். மெஷினை லொக் பண்ணி, மொனிட்டரை டேர்ன் ஓப் செய்துவிட்டு, மீட்டிங் ரூம் விரைந்தான். அம்மாவுக்கு ரிங் பண்ணினான்.

“என்னடா செய்து கொண்டிருந்தனி?”
“ஹலோ”
“ஹலோ கிடக்கட்டும் விடு .. பேர் மேகலா … டென்டிஸ்ட்  .. உன்னை போலவே மியூசிக் எண்டா..”
“ஹங் ஓன் .. ஹங் ஓன் .. பொறுங்கம்மா .. என்ன அடியுமில்லாம நுனியுமில்லாம ..”
“உண்ட அம்மாடா..”
“எனக்கேவா? .. என்னம்மா இதெல்லாம் .. ஹூ த ஹெல் இஸ் திஸ் மேகலா?”
“மைண்ட் யுவர் வேர்ட்ஸ் தம்பி … இது நீ தேடிக்கொண்டிருந்தியே .. அந்த பிள்ளைடா”
“ஆ தட் கேர்ள் .. அப்பிடி ஒரு பொம்பிளையே இல்ல .. அது வந்து வெறும் ..”
“தெரியும் .. ஆ ஊ எண்டா பாரதிண்ட கண்ணம்மா எண்டுவாய்… நீ கொஞ்சம் பொறுமையா கேளேன்..”
“என்னம்மா இது .. இவ்வளவு அவசரமா இத இப்ப கதைக்கோணுமா?”
“விட்டா அப்பர் நாளைக்கே கலியாணம் நடத்திடுவார் .. உனக்கு பிள்ளைய தெரியவேண்டாமா? இல்லையா?”

குமரன் கண்ணாடி கதவால் வெளியே பார்த்தான். புரொஜெக்ட் டீம் ஸ்டாண்ட அப் மீட்டிங்குக்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள். நேற்றைய கிளையன்ட் வேப்செர்விஸ் SSL செர்ட்டிபிகட் எக்ஸ்பையர் ஆனதை பிஎம் க்கு சொல்லவேண்டும் என்பது ஞாபகம் வந்தது. பம்பூ வேறு பெயில் ஆகி, ப்ச் .. நிறைய வேலைகள் இருக்கிறதே.

“லஞ்சுக்கு கதைக்கட்டா?”
“90% போருத்தமாம் .. ரகுநாத குருக்கள் பார்த்திட்டு அப்பாவை கட்டிப்பிடிச்சவராம்”
“ஆரு? அப்பா சொன்னாரா? கிழிஞ்சுது .. அவர் இப்பிடி கனக்க டைம் கட்டிப்பிடிச்சிருக்கிறார் அம்மா … அவங்கட சைட் ஒகேயாமா?”
“அதுக்கு முதல் நீ என்ன சொல்லுறாய்?”
“திங்கக்கிழமை காலமை இப்பிடி திடீரென்று கோல் பண்ணி சொன்னா எப்பிடி? ஆரெண்டே தெரியா..”
“ஷி இஸ் எ டென்டிஸ்ட் .. உன்னை விட ஐஞ்சு வயசு குறைவு .. இப்ப டிக்மென்ஸ் ரோட்ல இருக்கிற கிளினிக்ல ப்ராக்டீஸ் பண்ணுதாம் .. மேகலா தேவானந்தன்..”
“ஈபிடிபி யா?”
“கடவுளே .. கலியாண முற்றாகி தாலிகட்டும் மட்டும் நீ மௌனவிரதம் இருக்கிறியா ப்ளீஸ்?”

குமரன் சிரித்தான். அம்மாவுக்கு இந்த பதட்டத்திலும் இருக்கின்ற நகைச்சுவை உணர்வை பார்க்க வியப்பாக இருந்தது. இத்தனை வரிகளில் அந்த பெண்ணின் அழகு பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடாமல் இருந்தது பெருமையாக இருந்தது. “அம்மா” என்றான் தனக்குள்ளே. திடீரென்று அந்தப்பெண் அழகாக மீட்டிங் ரூமின் லைப்ரரி காபினை திறந்து கொண்டு வந்து நிற்பது போல தோன்றியது. “கண்ணம்மா” என்றான்.

“மேகலாடா”
“யியா .. ஐ நோ .. யோசிச்சிட்டு சொல்லட்டா?”
“அவங்களுக்கு நான் என்ன சொல்ல? ஒகேண்டு சொல்லட்டா?”
“யூ கிரேசி .. முதலில விசாரிப்பம் .. கிம்மி டூ டேஸ்”
“பேஸ்புக்ல இருக்கிறாவாம் .. நீ தானே பிஸி .. நேரம் கிடைக்காது .. சரி விடு .. இரவு கதைக்கிறன்”

“யூ .. நோட்டி அம்மா” என்று சிரித்தபடியே சொல்லிக்கொண்டு மீட்டிங் ரூமை விட்டு வெளியே வரும்போது மொத்த டீமும் இவனுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருந்தது. முகம் முழுக்க சிரித்தபடி சொரி சொன்னான்.  புரொஜெக்ட் மனேஜர் ஹாய் கைஸ் சொல்லி ஆரம்பித்தார்.

டென்டிஸ்ட் குலோக் அணிந்தபடி.

&&&&&&&&&&&&&&

“மாப்பிள்ளைக்கு மீசையே இல்லையப்பா .. இவர போய் என்னெண்டு ..

ஐபாடில் முகத்தை சரியாகவே பார்க்காமல் மேகலா அப்பாவை முறைத்தாள். அவளுக்கு எதுவுமே பிடிக்கவில்லை. சேர்ஜரி படிக்க தயாராகிக்கொண்டிருந்தவளிடம் திடீரென்று திருமணம் செய் என்றால் எப்படி இருக்கும். அதுவும் படத்தை பார்த்து. மேகலாவுக்கு அப்பாவிடம் கோபம் கோபமாய் வந்தது. நேற்று வரைக்கும் குட்டி, கண்ணுக்குட்டி என்றவர் திடீரென்று பிள்ளை, காலையில் மேகலா என்று கூட கூப்பிட்டிருந்தார். ஏறிக்கொண்டு வந்தது. யாரென்றே தெரியாதவன், என்ன ஏது ஒரு விவரமும் தெரியாது, வெறுமனே சாத்திரி பொருத்தம் என்று சொன்னால் நம்பிவிடுவதா? இதுக்கு பேசாமல் நான் லவ் பண்ணியே இருந்திருப்பேனே. டாம்ன். ஹூ த ஹெல் இஸ் ஹீ ஹா?

“குமரன் … அந்த .. நல்லூர் திருவிழா அல்பத்தில பார் … மீசை இருக்கு”

சொல்லியபடியே அப்பா மரனின் பேஸ்புக்கில் நல்லூர் திருவிழா அல்பத்தை ஓபன் பண்ணினார். குமரன் வேஷ்டி கட்டி சால்வை இல்லாமல் நெற்றி முழுக்க பட்டையோடு, தேர் இழுத்து முடித்த களையில், இளித்துக்கொண்டு நின்றான். தலைக்கு பின்னாலே ரெண்டு விரல் கொம்பு வேறு யாரோ காட்டிக்கொண்டிருந்தார்கள்.

“இத பாரு”

“வேண்டாம் .. பார்க்கமாட்டன் .. எனக்கு இப்ப என்ன அவசரம்? .. இப்ப .. ஒரு வருஷம் கூட பிராக்டீஸ் பண்ணி முடியேல்ல .. அங்கால சேர்ஜரி படிக்க லண்டன் போகோணும்.. ஒர்தோடோண்டிக்ஸ் செய்யப்போறன் .. குழப்பாதீங்க ப்ளீஸ்”

“நீ கலியாணம் கட்டீட்டும் படிக்கலாம் மேகலா .. அவர் ஜாவா ப்ரோகிராமர்”

“ப்ரோகிராமரா? ஓ மை கோட், … தே ஆர் லூசர்ஸ் அப்பா … எப்ப பார்த்தாலும் கோடிங் கோடிங் எண்டு .. ஒரு டேஸ்ட் இல்லாத ஆக்கள் .. கிளியை வளர்த்து பூனைண்ட கையில குடுக்கிறனெண்டு சொல்லுறீங்களே”

அப்பா சிரித்தார்.

“அவருக்கு ரகுமான் பிடிக்குமாம் .. பேஸ்புக்ல கிடக்கு”

“ஆருக்கு தான் ரகுமானை பிடிக்காது?”

“Before Sunrise எண்டு ஏதும் படம் வந்ததா? Favourite Movies ல அது கிடக்கு”

“அட கடவுளே .. அந்த படமா .. பேசி பேசி கொல்லுவாங்களே!”

“விஜய் பாஃன்”

“ஷிட்”

பிள்ளை, இப்பிடி ஷிட் எண்டு சொல்லுறத எல்லாம் இனி நிப்பாட்டுறியா? பொம்பிளை பிள்ளை இப்பிடியா கதைச்சுக்கொண்டு திரியிறது.

அம்மா குசினிக்குள் இருந்து புறுபுறுக்க,

“பார்த்தீங்களாப்பா? ஒரே நாளில எல்லாமே மாறீட்டுது .. அம்மா கூட .. நான் நானா கூட இருக்கேலாட்டி அந்த கலியாணம் என்னதுக்குப்பா?”

“எல்லாத்துக்கும் வேண்டாம் .. மாட்டன் எண்டு சொல்லாத .. இப்ப முடிவு பண்ண தேவையில்ல .. பிறகு யோசிச்சுட்டு சொல்லு ..”

சொல்லியபடியே திரும்பிப்பார்க்காமல் அப்பா எழுந்து உள்ளே போனார்.  மேகலா குழப்பத்தோடு வேலைக்கு புறப்பட தயாரானாள். குசினி போய் பேசாமல் அம்மா தயார் செய்திருந்த லஞ் பொக்ஸ் எடுத்து ஹாண்ட்பாக்கில் வைத்துவிட்டு, தெர்மோ பிளாக்ஸில் கோப்பி ஊற்றி நிரப்பினாள். பின்னர் உள்ளே போய் பிரஷ் எடுத்து பேஸ்ட் இல்லை என்று அப்பாவை ஒரு முறை திட்டிவிட்டு,  கத்திரிக்கோலால் பேஸ்ட்டை வெட்டி வழித்து எடுத்து பிரஷில் வைத்து பல்லு விளக்கியபடியே ஐபாடை சவுண்ட் சிஸ்டத்தில் டொக் பண்ணி பாட்டு போட்டாள். ஷானியா ட்வைன் “From This Moment” என்று ஆரம்பிக்க, கூட்டிவிட்டு, கிரைண்டர் போட்ட அம்மாவை, பாட்டு முடியும் மட்டும் மூச்சு காட்டக்கூடாது என்று வெருட்டி விட்டு, டவல் எடுத்து பாத்ரூம் விரைந்தாள்.

ஷவர் ஹீட்டர் சரியாக வேலை செய்யவில்லை. தண்ணீர் முகத்தில் பட்டு குளிர்ந்தது. “I give my hand to you with all my heart, can’t wait to live my life with you .. “ ஷானியாவோடு சேர்ந்து பாடினாள். பாட்டின் ஒருவித cry இவளுக்கும் தொத்தியது. ஷவரை கூட்டிவிட்டு தொடர்ந்து பாடினாள். ஹீட்டர் திடீரென்று வேலை செய்ய தொடங்கியது போல….  சடக்கென்று உடல் முழுதும் வெப்பம் படர்ந்து… அவனின்ட பெயர் என்ன .. குமரேஷ் …. ஷிட் நோ ..  குமரன் .. யெஸ் குமரன். “Before Sunrise” பிடிச்சிருக்கு ஆளுக்கு. Not bad ha. அப்பாவிடம் அவசரப்பட்டு பேசிவிட்டோமோ. ப்ச் … யாரென்று விசாரித்திருக்கலாமோ. ஒருவேளை அவனாக தான் இருந்துவிட்டால்? குமரன். யார் நீ? அவனா? அவரா .. .ஹூ த ஹெல் ஆர் யூ?

மேகலா அவசர அவசரமாக டவல் எடுத்து, துவட்டி, பாத்ரூமால் வெளியே வரும்போது அம்மா “என்னடி பாத்ரூமில கச்சேரியா? நேரம் போகுது” என்று கத்திக்கொண்டிருந்தார். பதில் சொல்லாமல் நீல நிற நைலக்ஸ் சாறி செலக்ட் பண்ணி சுற்றினாள். பின்னர் ஏதோ நினைப்பு வந்தவளாக வெள்ளை நிறத்தில் நீல போர்டர் போட்டதை எடுத்து கட்டினாள். அம்மா மீண்டும் கத்த தொடங்க “வாறன் அம்மா” என்று சொல்லியபடியே வோட்ச் கட்டி ஹாண்ட் பாக் எடுத்து, கழுத்து சங்கிலி ஓம் பெண்டனை தொட்டு “பிள்ளையாரப்பா” என்று கும்பிட்டுவிட்டு சாப்பிடாமலேயே புறப்பட்டாள். அப்பா நடு ஹோலில் வீரகேசரியோடு இருந்தார். வாசலில் சாண்டில்ஸ் போட்டுக்கொண்டிருந்தவள் “போயிட்டு வாறன்” என்றாள். இரண்டடி தள்ளிப்போயிருப்பாள். தயங்கியபடியே மீண்டும் திரும்பிவந்து …

“அப்பா..”

வீரகேசரியில் இருந்து  கண் எடுக்காமலேயே ம்ம் கொட்டினார்.

“குமரன்ட புல் நேம் என்னப்பா?”

வீரகேசரியை மடித்து ஸ்டூலில் வைத்துவிட்டு, முன்னே வந்து நின்று திடீரென்று வெட்கப்பட்டுக்கொண்டிருக்கும் மேகலாவை மெல்லிய புன்னகையுடன் பார்த்தபடியே பெயரை சொன்னார் அப்பா.

&&&&&&&&&&

“மேகலா தேவானந்தன் .. “ குமரன் நாற்பதாவது முறையாக பக்கத்து டெஸ்க்கில் இருந்த ரொஷாணி பார்க்காத சமயம் பார்த்து Facebook இல் டைப் பண்ணி ப்ரோபைல் போனான். Profile படத்தில் ஒரு வெள்ளைக்காரி இருந்தாள். ஜெர்க் ஆனான்.Photos of Mehala என்று graph search செய்ய ஐந்தாறு படங்கள் வந்தது. தூக்கி வாரிப்போட்டது. இவளா? அம்மா ஒரு வார்த்தை சொல்லாமல் போனாளே என்று கோபப்பட்டான்.  டெஸ்க்டொப்பில் படத்தை சேவ் பண்ணி ஓபன் பண்ணினால். Ctrl++ அழுத்தி அழுத்தி ஸூம் பண்ண, மேகலா கொஞ்சம் கொஞ்சமாக அவனுள் வியாபிக்க ஆரம்பித்தாள். எப்படி இது நிகழ்கிறது என்று புரியவில்லை. அமுது ஊற்றினை ஒத்த இதழ்களும் – நிலவு ஊறித் ததும்பும் விழிகளும் – பத்து மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும்” என்று பாரதி ரிப்பீட்டினான். இன்சேன் என்று குமரனின் வாய் முணுமுணுத்தது.

programmer-staring-at-computer

உள்ளே ஷானியா டவைன் பிடிக்கும் என்றிருந்தது. கூகிள் போய் ஷானியா டிவைன் யார் என்று தேடினான். இரண்டு பாட்டு டவுன்லோட் பண்ணி கேட்டான். நன்றாகவே இருந்தது. பொன்னியின் செல்வன், அப்துல் கலாம் என்று வரிசையாக இருக்க நிமிர்ந்து உட்கார்ந்தான். கோப்பியை உறிஞ்சியபடி டைம்லைனை உருட்டிக்கொண்டு போக, பிடித்த ஹீரோ என்ற கேள்விக்கு சூரியா என்று இருந்தது.  ஷிட்.

குமரனுக்கு டெஸ்ட் கேஸ் ஒன்றுமே ரன் பண்ணுவதாக காணும். பவுண்டரி கொண்டிஷன் லிஸ்ட் எழுதி முடிக்கவே ஒரு மணி நேரம் கடந்தது. அதற்குள் மூன்று தடவை Facebook, நான்கு தடவை Linkedin, கூகிள் சேர்ச்சில் நெக்ஸ்ட் நெக்ஸ்ட் என்று கிளிக் பண்ணி அடிக்கட்டை மட்டும் மேகலா பற்றி தேடிவிட்டான். மைன்ட்மப் போட்டான். அடிக்கடி பின்னாலே யாரும் போகும் சமயம் மாத்திரம் டெஸ்ட் கேஸை பெயில் ஆகும் என்று தெரிந்தும் ரன் பண்ணி தலையில் கைவைத்து யோசிப்பது போல பீலா விட்டான். மேகலா இரண்டு மணிநேரங்களில் யாதுமாகி நின்றாள்.

திடீரென்று ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாக கூகிள் போய், டிக்மேன்ஸ் ரோடில் இருக்கும் டென்டல் கிளினிக் தேடி, பஸ் ரூட் கண்டுபிடித்து, பிஎம்மிடம், “ஏர்லி லஞ், கிரடிட் கார்ட் பில் பே பண்ணவேண்டும்” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தவன், ஒரு ஞாபகம் வந்தவனாக ஓட்டோ ஸ்டாண்டில் போய் முன்னுக்கு நின்ற ஓட்டோவில் ஏறி உட்கார்ந்தான்.

“டிக்மேன்ஸ் பாரட்ட யன்ன!”

&&&&&&&&&&&&

ஸீ யூ சொல்லி சிறீசேனவை அனுப்பிவிட்டு பிளாஸ்கில் இருந்த கோப்பியை கொஞ்சம் உரிஞ்சபடியே கொம்பியூட்டரில் அடுத்த பேஷன்ட் ஹிஸ்டரியை நோட்டம் விட்டாள் மேகலா. ஹிஸ்டரி பேஜ் வெறுமையாக இருந்தது. யாராவது பல்லுக்கொதி கேஸ் போல. அவசரத்துக்கு புடுங்க வந்திருக்கு. கவனிச்சு அனுப்பிடலாம் என்று தனக்குள் சிரித்தபடியே அசுவாரசியமாக மேலே கவனித்தாள். கிளீனிங் என்று இருந்தது. கிளீன் பண்ணுவதற்கு ஏன் முதன் முதலாக இங்கே வரவேண்டும் என்று பெயரை மேலோட்டமாக கவனித்தபடியே கோப்பி குடிக்… திடுக்கென்றது. ஷிட்.

இளங்குமரன் சிவசேகரம்.

dentist-042812-web

“ஜீசஸ் கிரைஸ்ட். இவன் அவனல்லோ.  இங்க எதுக்கு வந்திருக்கிறான். கடவுளே” மேகலா அசிஸ்டன்ட் தருணீயிடம் சொல்லிவிட்டு அவசரமாக ரெஸ்ட் ரூமுக்குள் ஓடினாள். நெஞ்சம் படபடத்தது. ஏன் இங்கே வந்திருக்கிறான்? தெரிஞ்சு தானே வந்திருப்பான்? கடவுளே. மீசை வச்சிருப்பானா? இல்லையா?  ரிசப்ஷனில் தான் இருப்பான். போய் பார்த்துவிட்டால் கண்டுபிடித்துவிடுவானே. ஸ்டிக்கர் பொட்டு வேறு இடக்கண் பக்கமாய் விலகி இருந்தது போல தெரிய சரி செய்தாள். ஹாண்ட்பாக்கில் இருந்து சீப்பு எடுத்து நீவி விட்டாள். நிவியா கிரீமை கைகளில் தடவி ஷைன் செய்தாள். தடவும் போது விரல்கள் தன்னாலே நடுங்கின. கடவுளே, டியூட்டியை மாத்துவமோ. டொக்டர் ராஜசூர்யா இருப்பாரா? ஐயோ அவர் கிளீனிக் செய்யமாட்டாரே. தருணி புதுசே. கொடுக்கமுடியாதே. சேலையின் ப்ளீட் சரி செய்தாள். ஒதுக்கினாள். முந்தானையை அப்படியே பின்னாலே சுற்றி எடுத்து இடுப்பில் கொண்டுவந்து செருகிப்பார்த்தாள். ம்ஹூம். சொதப்பல். மீண்டும் தழையவிட்டாள். கை கால் ஒன்றுமே ஓடவில்லை. அப்பாவுக்கு கோல் போட்டாள்.

“என்னடா இந்த டைம்ல”
“அவன் வந்திருக்கிறான் அப்பா”
“அவன்டா .. யாரு?”
“அதான்பா .. குமரன் … உங்கட இளங்குமரன்”
“ஓ அங்கேயே வந்திட்டாரா .. உன்னை விட பாஃஸ்டா இருக்கிறார் போல!”
“வந்தனிண்டா மூஞ்சில வந்து ஒரே குத்தா குத்துவன் சொல்லீட்டன் .. குறவர் கூட்டம்”
”சத்தியமா உன்னை பார்க்க வாறதா சொல்லேல்ல கண்ணம்மா?”
“அப்ப என்னண்டு இங்க வந்திருக்கிறார்?”
“மாப்பிள்ளைக்கு உன்னை நல்லா பிடிச்சிருக்கு போல..”
“மாப்பிள்ளையா .. லூசாப்பா நீங்க?”
“சரி விடு கண்ணம்மா .. கிளீன் பண்ண தானே வந்திருக்கிறார்? பண்ணீட்டு அனுப்பீடேன்”
“பண்ணுறன் பண்ணுறன் .. பல்லையே புடுங்கீட்டு அனுப்புறன்!”
“பார்த்துடி…”

அப்பா பேசும்போதே போனை கட் பண்ணிவிட்டு, மீண்டும் ஒரு முறை நெற்றிப்பொட்டை கவனித்தாள். வலக்கண் பக்கமாக விலகியிருந்தது. சரி செய்தாள். திரும்பி வாசல் புறம் நடந்தவள், மீண்டும் உள்ளே போய், டோய்லட் அறைக்குள் தண்ணியை பிளஷ் பண்ணிவிட்டு வெளியேறி கிளினிக் ரூமுக்குள் நுழைந்தாள்.  கொம்பியூட்டர் ஸ்க்ரீனை டபிள் செக் பண்ணீட்டு தருணியை த்ரில் சிஸில், மவுத் மிரர் எல்லாம் தயார் படுத்த சொல்லிவிட்டு நெக்ஸ்ட் ப்ளீஸ் என்று சொல்லி திரும்ப ….

கதவடியில் நின்று சிரித்தான் குமரன். “ஒல்மொஸ்ட் சிக்ஸ் வரும். ஹீல்ஸ் போட்டிடலாம்” என்று நினைத்துவிட்டு “ச்சீ என்ன இது” என்று பல்லை கடித்தாள்.

“ஹாய் டொக்டர் மேகலா”

மேகலா குமரனை படபடப்பாக நோட்டம் விட்டாள்.

மீசை இருந்தும் இல்லாமலும் இருந்தது. ரெண்டு நாளைக்கு முதல் ஷேவ் செய்திருக்கவேண்டும். டிஷர்ட் ஜீப் என்றது. டெனிம் ஜீன்ஸ். சப்பாத்து வீக்கென்ட் கிரிக்கட் கிரவுண்டில் சேறு என்று சொல்லியது. எல்லாத்திலும் ஒரு வித உதாசீனம் திரிந்தது. ஹாண்ட்போனை கையில் வைத்து உருட்டியபடி இருந்தான். கையில் வோட்ச் இல்லை.

“ஹாய் … டொக்டர் மேகலா”

குமரன் இரண்டாம் தடவை ஹாய் சொன்னபோது சுயநினைவுக்கு வந்தவளாய் இவனை பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்தாள்.

“ஹாய் .. மிஸ்டர் இலங்குமரன் சிவசேக..”
“’ல’ னா பிரச்சனையா?”
“வாட்?”
“கோல் மீ குமரன்”
“ஹாய் .. குமரன் … ப்ளீஸ் டேக் யுவர் சீட் .. லை டவுன் .. அண்ட் .. தருணி..”

சொல்லிவிட்டு மேகலா மீண்டும் மொனிட்டரை திரும்பிப்பார்த்தாள். முகம் முழுதுமாய் சிரித்தது. தலையில் மெதுவாக அடித்து, அங்கும் இங்கும் அசைத்துவிட்டு மீண்டும் திரும்பிப்பார்க்க,  குமரனுக்கு தருணி பாதுகாப்பு கண்ணாடி அணியக்கொடுத்துக்கொண்டிருந்தாள்.

கண்ணாடிக்குள்ளால் நெருங்கி வந்து உட்கார்ந்த மேகலாவை கண்வெட்டாமல் பார்ப்பது குமரனுக்கு வசதியாக இருந்தது. சீரியஸாக இருந்தாலும் சிரிப்பாள் போல தெரிந்தது. கொஞ்சம் தலைக்கு அடங்காத தலைமயிரை கட்டுப்படுத்த ஒன்றுக்கு ரெண்டு கிளிப் போட்டு காப் போட்டிருந்தாள். தருணி ஏதோ தமிழில் சொல்ல, இவள் அதற்கு சிரித்தபடியே மவுத் மிரரை வாங்கும்போது ஐயோடா என்றது. அவன் கவனித்துவிட்டான் என்று அறிந்தவுடன் சிரிப்போடு வெட்கமும் சேர்ந்துகொள்ள கொஞ்சம் யன்னல் பக்கம் பார்த்து வெட்கப்பட்டுவிட்டு இவனிடம் திரும்பினாள். அம்மாவுக்கு அப்போதே கோல் பண்ணி “தெய்வமே” என்று சொல்லவேண்டும் போல இருந்தது. சிரித்தான்.

விளங்கிவிட்டது. கள்ளன். கண்ணாடியை போட்டபடி நான் கண்டுபிடிக்கமாட்டேன் என்று நினைத்து என்னை கவனிக்கிறான். பிடுங்கித்தின்றது. தருணியிடம் நம்பர் 23 என்றாள். இவன் இப்போதும் சிரித்துக்கொண்டே இருந்தான். கிராதகன். எக்ஸ்ப்ளோரரையும் மிரரையும் கிட்ட கொண்டுபோய்,

“ஆ எண்டுங்க”
“நான் ஆருக்குமே இது வரைக்கும் பல்லு காட்டினதில்ல மேடம் .. உங்களிட்ட தான் .. ”

தருணி கிளுக் என்று சிரித்தாள். மேடம் என்று இந்தியா தமிழில் நக்கலாக சொல்லுகிறான் என்று புரிந்தது. எக்ஸ்கியூஸ் மீ சொல்லிவிட்டு ரூமுக்கு வெளியே வந்து அப்பாவுக்கு அடித்தாள்.

“சிரிக்கிறான் அப்பா”
“நல்லது தானே ..”
“கண்ணாடியால உத்து உத்து பாக்கிறானே”
“அது கறுப்பு கண்ணாடியா .. அதான்”
“சரியான லொள்ளு கேஸ் அப்பா”
“அப்படி எண்டா ஒன்று செய் .. தலையிடி எண்டு சொல்லி வெளிய வா .. வேற டொக்டர் பார்க்கட்டும்”
“இல்ல இல்ல .. சரி வந்திட்டான் .. என்னவோ சமாளிச்சு அனுப்புறன்.. நீங்க போனை வையுங்க”

சொல்லியபடி போனை கட் பண்ணும்போது அப்பா அம்மாவிடம் சிரித்தபடி ஏதோ சொல்லியது கேட்டது. கோபத்துடன் உள்ளே நுழைந்த போது, அவன் இவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“ஆர் யூ ஒல்ரைட் மேகலா?”

“டொக்டர் மேகலா”வில் டொக்டர் காணாமல் போயிருந்ததை மேகலா கவனிக்க தவறவில்லை. ஒன்றும் பேசாமல் ஒவ்வொரு பல்லாக பார்த்தாள். எல்லாமே கிளீனாக இருந்தது. கவிட்டி கூட போர்ம் பண்ணி இல்லை. ஒரே ஒரு பல்லு தான், சாதுவாக, படு பாவி. என்னை பார்க்கத்தான் வந்திருக்கிறான். வெறுமனே கிளீன் பண்ணி தருணியிடம் சக்கிங் பைப் வாங்கி தானே அவன் வாயில் வைத்து குளோஸ் பண்ண சொன்னாள். டிஷூ குடுத்து எழும்ப சொன்னபோது.

“ஸோ ஒகே யா?”
“பெக் யூ எ பார்டன்?”
“எண்ட பல்லு எல்லாம் ஒகே யா? ஏதாவது பிரச்சனை?’
“இருக்கே .. லோவர் ரைட் தேர்ட் டிகே ஆயிட்டு .. நேர்வை டச் பண்ண போகுது .. பெர்மனன்ட் பில்லிங் செய்யோணும்”
“அப்ப ஈவினிங் ப்ரீயா இருப்பீங்களா?”
“எக்ஸ்கியூஸ் மீ”
“இண்டைக்கே முடிவு பண்ணினா நல்லம் இல்லையா.. நேர்வை டச் பண்ணீடும் எண்டு நீங்க தானே சொன்னீங்க!”

இராட்சசன். Before Sunrise ரசிகன் ஆயிற்றே. இப்பிடி தான் லொள்ளு பண்ணுவான். இவனை என்ன செய்வது.

“ம்ம்ம் .. மே பி .. வெள்ளிக்கிழமை வாங்களேன் .. ஒரு முடிவு பண்ணிடலாம்!”

மேகலா சிரித்துக்கொண்டே சொல்ல, குமரன் டிஷூவால் வாயை துடைத்தபடியே தாங்க்ஸ் சொல்லிவிட்டு. தயங்கினான்.

“என்ன பேமென்டா? கவுண்டர்ல செய்யுங்க .. “
“இல்ல .. நான் ஆர் எண்டு .. உங்களுக்கு ”
“நீங்க ஆரு?”
“வந்து அம்மா தான் .. நீங்க .. மேகலா .. அந்த காற்று வெளியிடை .. யூ நோ .. பாரதியார்”

குமரன் தடக்கினான்.

“பாரதியாருக்கு என்ன?”
“சொறி .. எனக்கு கோர்வையாய் பேச தெரியாது .. நேரடியாகவே கேட்கிறேன்”
“சொல்லுங்க .. இட்ஸ் ஒகே”

மேகலாவுக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. கை கால் உதறியது.

“ஆ ஊ என்று எவ்வளவோ கதைக்கிறம் .. பட் .. ஒரு வார்த்தை வருதில்ல ..ஒல்ரைட் .. அம்மாக்கு நான் என்ன சொல்ல?”

“உங்கட அம்மாக்கு? .. ஓ .. பல்லு அவ்வளவு பிரச்சனை இல்ல .. நல்லா தான் இருக்கு எண்டு சொல்லுங்க!”

இருவருமே சிரித்தார்கள். சிரிக்கும்போது மேகலா தேவதைகள் எல்லாமே இவளைப்போல தானே இருக்கும் என்று குமரன் யோசித்தான்.

“தாங்யூ மேகலா… .. தான்ங் கோட்”
“நம்பவே முடியேல்ல … நம்புவீங்களா?”

சிரித்தபடியே ஸீ யூ சொல்லி தயங்கி தயங்கி திரும்பி நடந்தவனை அப்படியே பார்த்துக்கொண்டிருந்தாள். திரும்படா .. திரும்படா.. திரும்படா .. கள்ளன். அமுசடக்கி. வேண்டுமென்று திரும்பமாட்டான். கதவை தாண்டி நடந்தவனை மேகலா மீண்டும் ரெண்டடி முன்னே போய் அழைத்தாள்.

“ஹேய் .. குமரன்”

திரும்பினான். என்ன? என்று தலை உயர்த்தினான்.

“அப்பாக்கு நான் என்ன சொல்ல?”

மேகலா கேட்க .. யோசித்துவிட்டு அவன் சிரித்தபடியே சொன்னான்.

“அவனுக்கு பல்லை நல்லா புடுங்கீட்டன் எண்டு சொல்லுங்க!”

இதை கேட்ட மேகலா தன்னையறியாமல் விழுந்து விழுந்து சிரிக்க தொடங்க அவளையே விழி வெட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தான் குமரன்.

ப்ப்பா….

&&&&&&&&&&&&&&&&&&

கதையில் பயன்படுத்தப்பட்ட பாடல்கள்:
காற்று வெளியிடை கண்ணம்மா
From this moment.

Comments

  1. நிச்சயமாய் ஒரு ஃபீல் குட் கதைதான்... கொஞ்சம் மன இறுக்கத்தோடு வாசிக்கும் முடிக்கும் போது அச்சோ முடிந்துவிட்டதே என்று நினைத்தாலும் எதற்கு டென்சனாக இருந்தேன் என்று மறந்துவிட்டது..

    Before Sunrise ரசிகரா நீங்கள்?? தெரியாமல் போய்விட்டதே. ஃபீல் குட்டாக இருக்கவேண்டும் என்று Before Sunsetஐ தொடாமல் விட்டுவிட்டீர்களா..? எனக்கு பின்னையது அதிகம் பிடிக்கும் முன்னையதை விட...

    /*மீசை இருந்தும் இல்லாமலும் இருந்தது. ரெண்டு நாளைக்கு முதல் ஷேவ் செய்திருக்கவேண்டும். டிஷர்ட் ஜீப் என்றது. டெனிம் ஜீன்ஸ். சப்பாத்து வீக்கென்ட் கிரிக்கட் கிரவுண்டில் சேறு என்று சொல்லியது. எல்லாத்திலும் ஒரு வித உதாசீனம் திரிந்தது. ஹாண்ட்போனை கையில் வைத்து உருட்டியபடி இருந்தான். கையில் வோட்ச் இல்லை.*/
    இதுதான் IT பொடியங்களிடன்ட சாமுத்திரிகா லட்சணமோ என்னமோ..?

    ReplyDelete
  2. நன்றி பாஸ்.

    //ஃபீல் குட்டாக இருக்கவேண்டும் என்று Before Sunsetஐ தொடாமல் விட்டுவிட்டீர்களா..?//
    உண்மை .. எனக்கு ரெண்டு படமுமே பிடிக்கும். பின்னயதின் கரு இந்த கதைக்கு பொருத்தமில்லாதது.

    //இதுதான் IT பொடியங்களிடன்ட சாமுத்திரிகா லட்சணமோ என்னமோ..?//
    இதோட ஐடி தெரிஞ்சிருக்கவும் வேணும்!!!

    ReplyDelete
  3. Too romantic from selection saree to getting out the tooth past by dentist.... sometime it will get bored with usual ones but challenges will be there with unusual. Why don't you talk about Abirami and Kokilavanee etc. They will have different taste from bathroom to balcony.

    Ajanthan

    ReplyDelete
    Replies
    1. Thanks Anna .. Kokilavanee and Abiramy are not characters. Those names created just for the sake of it. I didn't spend hours for their characterizations. They were just mere names in the poetry solely for Santhams. But when writing story, its not like that. It will take 6 to 7 hours to complete the personalities of the stories with minor attentions. That's why I love writing stories more than poetry.

      Delete
    2. I totally agree with you JK. Still we (readers) will get different imaginations while you are introducing another one in your stories...........just my thought.

      I thought these all are real in __________ lol. Normally young boys will have more except trying to live like Raman (from vaanmihi)

      Ajanthan

      Delete
  4. தலைவா..!! வாய்ப்பே இல்ல.. என்ன ஒரு அழகு!! Beautiful story க்கு எனக்கு இப்ப தான் அர்த்தம் புரியுது.. பாஸ் ஒரு சின்ன சந்தேகம்...மேகலா யாரு பாஸ்..?? :) அல்ட்ரா மார்டன் யுகத்தில் ஒரு அழகுத் தமிழ் கதை.. நானெல்லாம் எதுக்கு கத எழுதரேன்னு பீல் பண்ண வெச்சுடீங்க..! சூப்பர்.. Really liked it..

    ReplyDelete
  5. ஒரே ஆனந்தம்தான் போங்க ..^_^

    ReplyDelete
    Replies
    1. Thank you madam .. kathaya patry ore vaarththai thaana?!

      Delete
    2. அத பற்றி சொல்லவும் வேணுமா..காதல் கதை எண்டா அசத்துவீங்களே (I always find a Ramani Chandran touch). Carrot Alwaa சாப்பிடுற மாதிரி, so sweet.

      Then How was the birthday? ஜேஜேன்னு கொண்டாடினீங்களா?

      Delete
    3. அப்பப்ப பாதியார் பாட்டை உள் நுழைத்தது JK touch

      Delete
    4. Thanks Dhanya...

      //Then How was the birthday? ஜேஜேன்னு கொண்டாடினீங்களா?//
      Athu romba naalaave ippidi thaan kondaadurathu!

      Delete
    5. தன்யா1/23/2020 6:02 am

      Good old times JK.

      Delete
  6. Very nice story JK :) Plot is very simple and straightforward without many layers :) That itself is different from your normal writing. Liked the detailing. Wish the story was longer.....

    காற்று வெளியிடை கண்ணம்மா is one my favourite songs, especially when ketha sings (tells :)).

    //ஷவர் ஹீட்டர் சரியாக வேலை செய்யவில்லை. தண்ணீர் முகத்தில் பட்டு குளிர்ந்தது.// As far as I know, it's not common to use heater in Colombo, unless by elderly people or during Dec/ Jan. If this story is happening in Nuware-Eliya, Kandy or Hatton it's fair enough....

    ReplyDelete
    Replies
    1. Thanks Veena..

      //காற்று வெளியிடை கண்ணம்மா// My most favourite Bharathiyaar's romantic number .. insane song.

      //unless by elderly people or during Dec/ Jan. If this story is happening in Nuware-Eliya, Kandy or Hatton it's fair enough....//
      I actually thought about this. We never had heater. But in 2011 when I visited SL and stayed at Aunty's place (Kutti's mother), they did have heater installed and I talked about it! Nevertheless I wouldn't mind having the flaw!!... I needed that scene!

      Delete
    2. Also when me and Ketha went to Bright, we talked about Kaatru Veliyidai kannamaa for hours! Ofcourse he was so into the meaning and I was so into the music!!

      Delete
  7. குமரன் ஒரு ஜாவா ப்ரோகிராமராக வருவது இதிலே தான் இவளவு தெளிவாக சின்ன சின்ன விபரமான விபரிப்புகளோடு அழகாக வந்திருக்கு. தொடக்கம் முதல் இறுதிவரை காதல் நதி கதையையும் இழுத்துக்கொண்டு ஓடுது. நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் கொடுக்கும் அங்கீகரிக்கப்பட்ட காதல் பற்றி எனக்கு எப்பவுமே ஒரு பொறாமை, இருக்கும், ஆனால் இதில அது அழகாக இருக்கு. இதில அப்பா விவேகானந்தன் சாரி தேவானந்தனிட பேரவச்சு கட்சியை கேட்கிறது கலக்கல் தலை. அதைவிட இந்த போட்டு, சாரி, பாத்ரூம் பாட்டு, கழிவறை ப்ளாஷ் பண்ணுறது இதெல்லாம் உங்கட பழைய கதைகளான வானம் மெல்ல, மேகலாவிலையும் சாடையா வந்ததுதான். ஆனா எப்பவும் சோகமாவே முடிச்சிருமே மனுஷன், என்ன நாசமறுக்குமோ எண்டொரு கவலை இருந்தாலும், முடிவு பார்க்க சும்மா அதிருது பாஸ். அதுவும் அந்த என்ன சொல்ல ஏரியாவில பின்னி இருக்கிறியள். இந்த கோர்வையா பேச வராது எண்டு சொல்லும்போது குமரன் கைய தூக்கி தலைய சொரிஞ்சிருப்பானோ? அதைவிட அம்மா, அப்பா எல்லாரும் அருமையா சேர்த்திருக்கிறியள். கதையில் பல இடங்களில் வரும் பாரதி பாடல் வரிகள் மணிரத்தினத்தின் படங்களில் வரும் கவிதைகள் போல துருத்தாமல் கதைக்கு மேலும் மேலும் மெருகூட்டுகின்றன. நெஞ்சில் விழுந்த விதை எண்ண வயல்வெளியில் அன்றே விளைந்து பொலிவதுதான் காதல். யாதுமாகி நிற்கிற அந்த நிலையில், உன்னை பொன் என்று கொள்கிற பொழுது, இனி எல்லாம் சுகமே. காதலின் அடிப்படை அது. நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி என்கிற ஞானம். அது இந்த கதையில் சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது. அது அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கேதா.. இந்த முண்டாசுக்காரன் எந்த பெரிய ஆள் பார்த்தியா?

      "போயின … போயின … துன்பங்கள், நினை பொன் எனக்கொண்ட பொழுதிலே" என்றதை கேட்கும்போது எனக்கு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்து கிளைமாக்ஸ் மம்மூட்டி வசனம் தான் .வரும். அந்த படமும் பாரதி பாடல்களை ஆதரமாக கொண்டு இழைக்கப்பட்டது தான். தலைவர் செய்த அட்டகாசம்!


      எனக்கு என்ன சொல்லுறதெண்டு தெரியேல்ல .. பாரதியை அவன் உணர்வை ஒரு நிகழ்கால கதைக்களத்தில் நிஜமாக்குகிறோம் என்றால் அது என்னால் தான் நடக்குது எண்டத ஏற்றுகொள்ள ஏலாது. நடத்தி வைக்கப்படுது!

      Delete
  8. //நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் கொடுக்கும் அங்கீகரிக்கப்பட்ட காதல் பற்றி எனக்கு எப்பவுமே ஒரு பொறாமை, இருக்கும்//

    I also wanted to tell this. How that magic happens? JK always narrates it well

    ReplyDelete
    Replies
    1. பார்றா....திரும்பவும் ஒரு எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல

      Delete
  9. //
    “ஆ எண்டுங்க”
    “நான் ஆருக்குமே இது வரைக்கும் பல்லு காட்டினதில்ல மேடம் .. உங்களிட்ட தான் .. ”

    தருணி கிளுக் என்று சிரித்தாள். மேடம் என்று இந்தியா தமிழில் நக்கலாக சொல்லுகிறான் என்று புரிந்தது.
    //

    ReplyDelete
    Replies
    1. நன்றி தலைவரே!

      Delete
  10. குமரன் ,மேகலாவின் கதை என்றால் எப்படியாவது ஒரு சோகத்தை கொண்டுவந்துவிடிவீங்களே என்ற ஒரு பயத்துடன் தான் வாசிக்க தொடங்கினேன் என்றாலும் ரமணிச்சந்திரன் கதை போல் என்று முதலில் சொன்னதால் முடிவு நன்றாகவே இருக்கும் என்று ஒரு நம்பிக்கை . ஜேகே ரமணிச்சந்திரன் பாணியில் எழுதுகிறாரே என்று நினைக்க சிரிப்பாக இருக்கிறது .ஆனாலும் நன்றாகவே இருக்கிறது (சில வேளை நக்கல் போலவும் இருக்கிறது)

    ReplyDelete
    Replies
    1. :D ... நன்றி கீதா!

      Delete
  11. Before Sunrise
    அருமையான படம் ஆனால்...... குமரன் மௌன விரதம் இருந்தால் தான் .............

    Vijay Vs Suriya..... what a combination

    ReplyDelete
  12. So beautifully written. Loved talk between parents and kumaran & Mehala. End is brilliant.

    ReplyDelete
  13. Nice.... Lik Suba Acca s experience?

    ReplyDelete
    Replies
    1. Yes it was Suba Acca's experience a bit. But she wasn't aware of Jeevan Anna when she treated him.

      Delete
  14. Superb story anna, written in such a nice way. Very recently started reading ur blog and its super cool :)
    //“ப்ரோகிராமரா? ஓ மை கோட், … … எப்ப பார்த்தாலும் கோடிங் கோடிங் எண்டு .. ஒரு டேஸ்ட் இல்லாத ஆக்கள் .. ”// - Sort of true statement. Hope I dnt get killed by the devs :D

    //
    “.. அம்மாக்கு நான் என்ன சொல்ல?”
    “உங்கட அம்மாக்கு? .. ஓ .. பல்லு அவ்வளவு பிரச்சனை இல்ல .. நல்லா தான் இருக்கு எண்டு சொல்லுங்க!”
    “அப்பாக்கு நான் என்ன சொல்ல?”
    “அவனுக்கு பல்லை நல்லா புடுங்கீட்டன் எண்டு சொல்லுங்க!”
    //
    Couldn't have expressed it in a better way. Awesome :) Looking forward for more such stories :) :)

    Best wishes...

    ReplyDelete
    Replies
    1. Thank you Aaraby .. Nice to have a new reader like you.

      Delete
  15. Hi,

    Udkarnthu yosithu kathai eluthu veenkalo?(Will u sit and think to write a story?)
    I am telling u 1001th time send it to Vikatan.
    When u quote Bharathy it is so mesmarising.(not u, Bharathy)அமுது ஊற்றினை ஒத்த இதழ்களும் – நிலவு ஊறித் ததும்பும் விழிகளும் – பத்து மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும்” யாதுமாகி நின்றாள்

    மேகலா தேவானந்தன்..”“ஈபிடிபி யா?”
    Nakkal.

    அம்மாக்கு நான் என்ன சொல்ல?”“அப்பாக்கு நான் என்ன சொல்ல?”
    Kalaakal.

    டொக்டர் மேகலா”வில் டொக்டர் காணாமல் போயிருந்ததை மேகலா கவனிக்க தவறவில்லை
    u under estimate our (readers) brain power. You should not write this line.

    It is so great that u relate the dentist activities in this interesting story.

    Dickman's road, I have been to my eye test in 1984. Dentist???

    Thoroughly enjoyed.

    Write some stories about lower middleclass as well but not Thulaparam-too sad.

    Siva




    ReplyDelete
    Replies
    1. //Write some stories about lower middleclass as well but not Thulaparam-too sad.//
      If a plot strikes, then we can write. Even this story is loosely based on the collections of various true incidents.

      Delete
  16. Super JK

    நீண்ட காலத்திற்கு பிறகு நல்ல ஒரு கதை வாசித்த உணர்வு,

    no more words
    well done machchan

    ReplyDelete
  17. உங்க எழுத்து நடையில் ஒரு மஜிக் இருக்கும். வெறும் சம்பவங்களையே சுவாரஷ்யமாக விளக்கிக் கொண்டே போவீங்கள், சாதாரணமாத்தான் இருக்கும் ஆனா அது ஒரு நல்ல மூட்டை கிரியேட் பண்ணிக்கொண்டே வரும். நல்ல மியூசிக் ஒண்டைக் கேட்டுக் கொண்டிருக்கேக்க வாறமாதிரி. ஏற்கனவே சுஜாதவின் நடையில் மயங்கிக்கிடந்த எனக்கு அதே மாதிரியான திருப்தியை உங்கட எழுத்துத் தருது. அதுவும் யாழ்ப்பாணத் தமிழோடு சேரும்போது தனி அழகு!

    ரெண்டு கரக்டர்களும் செம அழகு! , மற்றப் பாத்திரங்களும் மனசில நிக்கிறாங்கள். அடிக்கொருதரம் அப்பாவுக்கு போன் எடுக்கிறது, மனசுக்க பேசிக்கொள்றது, பாரதியார் கவிதைகள் எண்டு சொல்ல நிறைய இருக்கு. ஆனா அதுக்கிடையில கதை முடிஞ்சிட்ட மாதிரி ஒரு ஏமாற்றம்.

    கதையில்லை அண்ணா, கவிதை!

    ReplyDelete
  18. எலே! என்ன எலே! வீட்டிலை ஏதும் விசேசமோ? சுற்றாடல் பாதிப்புத்தான் எழுத்துல தெரியும்ன்னு கைதடி ஜம்புலிங்க சுவாமிகள் சொல்லுவாரு. அதுதேன் கேட்டேன். அப்புறம் கத சூப்பரு. உங்க பிளாக்கை நம்பித்தேன் இங்க நிறையப்பேரு இருக்காங்கலே. ( நானு+ உங்க லட்சக்கனக்கான வாசகங்க+ கூகுள்+ அப்பிள்+பயர் பொக்ஸ்காரங்க) ஆகவே தயவு செஞ்சு மேகலா நனைப்பை விட்டு வந்து அடுத்த கொல்லபுறத்து காதலிய இல்லாக்காட்டி வியாளமாற்றத்தை போடவும். இல்லன்ன மொல்போனையே தும்சம் பன்னிடுவோம். பாருங்க. வழக்கமா சும்மாஙாச்சி வாசிட்டுபோற உங்களின் கோடிக்கணக்கான வாசகனில் ஒருவனான நான் கூட உங்களுக்காகவே கணக்கு ஆரம்பிச்சுட்டன். விட்டீங்க நானும் மதிலை தொலைத்த கேட் ன்னு புதுசா ஆரம்பிச்சு உங்க வாசகர்களை கவர்ந்திடுவேன். அது மட்டுமிலாமல் நானும் கூட மேகலா அண்ணியின்வ தங்கைக்காவே காத்திருக்கேன். சொல்லிப்புட்டேன். இனிமே அடிக்கடி வந்து வதைப்பேன் .( எங்க மொழியிலை உங்களை உற்சாகமூட்டுவேன்னு சொல்லுரேன் தல)

    ReplyDelete
    Replies
    1. ஆருலே நீ? சிவனா .. சுமந்திரனோ .. திருமாலா?

      Delete
  19. ப்பா.............போயின போயின துன்பங்கள்........... வேலைத்தளத்திலிருந்து நேரம் கிடைத்தபோது வாசித்தேன்.........திரும்பத்திரும்ப வாசிக்க வேண்டும் போல இருந்தது.......அனுபவித்து சிரித்தேன் . உடனே பதில் எழுத கை துடித்தது...ஆனால் வெப்சைட்டை திறக்க தடை வேலைத்தளத்தில் என்பதால்........மின்னஞ்சல்இல் அனுப்புகின்றேன். நீங்கள நீங்கள் தான் அண்ணா....கண்ணம்மாவை ரசிக்கத்தெரிந்த மனிதர்கள் வாழ்க்கையை ரசிக்கத்தெரிந்தவர்கள் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்....வாசிக்கும் போது என்னவோ எல்லாம் மனதில வந்துபோகிறது....நன்றி அண்ணா...சிலசமயம் தொலைந்துபோன ஒரு எழுத்தாளனை உங்களில் காணுகின்ற ஒரு திருப்தி..........நீங்கள் நல்லா இருக்க வேண்டும்.

    ReplyDelete
  20. ஹை சூப்பர் லவ் ஸ்டோரி ..
    டூ லேட். இப்ப தான் வாசிச்சன்.
    //
    “ஹாய் .. மிஸ்டர் இலங்குமரன் சிவசேக..”
    “’ல’ னா பிரச்சனையா?”
    “வாட்?”
    “கோல் மீ குமரன்”
    // வாசிச்சுட்டு பெருசா சிரிச்சுட்டேன்

    நம்ம வீட்டு கதை மாதிரி.. ஆத்துகாரர் தமிழ்ல கொஞ்சம் வீக் ;-)

    படலைக்கு இன்னொரு வடிவம் கிடைச்சாச்சு .. இனி சூப்பர் ஸ்டோரீஸ் வரும் தானே ?


    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .