Skip to main content

கருத்துகள்


வணக்கம் Mr. JK,

உங்கள் வலைதளம் மிக அருமையாக உள்ளது.

இரு நாட்களுக்கு முன், என் தோழியின் பரிந்துரையினால் உங்கள் *ஆட்டிறைச்சி* பதிவை தான் முதலில் படித்தேன். சாதாரண விஷயத்தை கூட மிக சுவாரசியமா சொல்லுவார்னு சொன்னா. ஆனா இவ்வளவு அருமையா , எனக்கு பிடிச்ச மிக அழகான இலங்கை தமிழ்ல இருக்கும்னு எதிர்பாக்கல. உங்கள் எழுத்து நடை ரொம்ப பிடிச்சிருக்கு.

சின்ன வயசுல இருந்து நிறைய படிக்கிறேன். ஒரு எழுத்தாளரோட எழுத்து நடை பிடிச்சா மட்டுமே, படித்ததையே திரும்ப திரும்பவும் கூட படிக்கிற பழக்கம் எனக்கு இருக்கு. புது எழுத்தாளர்கள் எழுதுவதை எல்லாம் படிக்க ஆரம்பிக்கவே ரொம்ப யோசிப்பேன்.

உங்க பதிவுகளை இரு நாட்களாக விடாமல் தொடர்ந்து படிக்கிறேன். 2011 இல் இருந்து ஆரம்பித்து.

ஒரு சின்ன வேண்டுகோள்.

எனக்கு உங்கள் தமிழில் சில வார்த்தைகள் புரியல. சில இடங்கள்ள, உங்கள் பேச்சு வழக்கப்படி எழுதியிருக்கீங்களா, இல்ல ஆங்கில வார்த்தையை தமிழ்ல எழுதியிருக்கீங்களானு குழப்பம் வருது. பதிவின் சுவராசியத்தில , வேகத்தில் அதை விட்டுட்டா கூட, பிறகு அது என்னவா இருக்கும்னு யோசிக்க வைக்குது.

உங்கள் பேச்சு வழக்கில் இருக்குற , எங்களுக்கு புரியாத வார்த்தைகளை எல்லாம் சேர்த்து ஒரு இடத்துல அர்த்தம் போட்டீங்கனா, படிக்க இன்னும் நல்லாருக்கும்.

I am not sure whether you have done it already , as I haven't seen your website fully yet. If it's there pls let me know.

உங்கள் எழுத்துப்பணி மேன்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.

Regards,
Valentine.

000

ஜேகேயின் இந்த புத்தகம் Science fiction வரிசையில் வந்தாலும்,கதை தொடங்கியது முதல் முடிவு வரை வாசகரை குபீரென சிரிக்க வைக்கும் எழுத்து நடையோடு ஆர்ப்பரிக்கின்றது. கல்கி,கி.ரா,சுஜாதாவின் கதைகள் மற்றும் பேராசிரியர் ஞான சம்பந்தன் எழுதிய 'சினிமாவுக்கு போகலாம் வாங்க'க்கு பின்னர் பல இடங்களில் சத்தமாக சிரித்தது இப்புத்தகத்திற்குத்தான்.

இலங்கையில், கந்தசாமியின் நிகழ்கால வாழ்க்கையில் தொடங்கும் இந்தக்கதை பல விடயங்களை நகைச்சுவையோட சிந்திக்கவும் வைக்கின்றது.ஆன்மிகம்,அரசியல்,பண்பலை,தொலைக்காட்சி என போகிற போக்கில் அடித்து விளையாடுகிறார் ஜேகே.விண்ணுலகம்,பால்வெளி,கருப்பொருள் என பலவற்றிற்கும் தரும் விளக்கங்கள் மிகவும் உபயோகமானது.

நண்பர் மயிலன் இப்புத்தகத்தை பத்தி பதிவிடவில்லையென்றால் கண்டிப்பாக இதை வாசிக்க தவறி இருப்பேன்.அடுத்த பதிப்பில் இலங்கையில் இல்லாதவர்களுக்கு தெரியும் பொருட்டு சில வார்த்தைகளுக்கு விளக்கங்களும்,அந்நாட்டு அரசியல் பற்றி சிறு விளக்கமும் இடம் பெறுமாயின் வாசகருக்கு மிகவும் உதவும்.இறுதி பாகத்தைப் பற்றி ஜேகேவிடம் விளக்கம் கேட்டப்பின் தான் அந்நாட்டின் வரலாறு பற்றி சில தகவல்கள் தெரிந்தது.

புத்தகம் மூலம் மனது விட்டு சிரிக்க வைக்க சிலரால் தான் முடியும்,அது உமக்கு கிடைத்த வரம் ஜேகே. தொடரட்டும் உமது இலக்கியப்பணி.

—முரளி இராமகிருஷ்ணன் கணபதி


வலண்டைனுக்கும் முரளிக்கும் என் அன்பும் நன்றிகளும்.

ஈழத்து வழக்குச்சொற்களை விளக்கத்தோடு பதிவிடலாம் என்றே எனக்கும் தோன்றுகிறது. அகராதிபோல அலுப்படிக்காமல் சிறு கதைகளோடு அல்லது உரைகளோடு அதனைச் செய்யலாம். விரைவில் தொடராகவே ஆரம்பிக்கிறேன்.

அன்புடன்,
ஜேகே

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக